01-19-2005, 08:14 AM
எமது தமிழ் சழுதாயம் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளக்கூடிய பக்குவநிலையை இன்னமும் எய்தவில்லை என்றே நான் கருதுகின்றேன். ஒரு அண்ணனும் தங்கையும் கூட குறிப்பிட்ட ஒரு வயதின் மேல் ஒருவரையொருவர் தொட்டுப்பேசுவதைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை இப்போதும் எமது சமுதாயத்தில் காணப்படுகின்றது. இப்படி இருக்கும்போது ஆண்-பெண் நட்பை எமது சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலையை அடையும் காலம் வெகுதூரத்தில் என்பதே என் கருத்து. :?:

