01-19-2005, 12:12 AM
ஊனமாகிப்போன தமிழ் நட்பு
இப்போதும் தமிழ்ச் சமுதாயத்தில் 'ஆண்-பெண்' நட்பு ஒரு அதிசியமாகவோ அல்லது சந்தேகத்துடனோ பார்க்கப்பட்டு வருகிறது.
தந்தை-தாய் , அண்ணன்-அக்காள் , தம்பி-தங்கை , மைத்துனன்-மைத்துனி என்று அனைத்து உறவிலும் 'ஆண்-பெண்' கலந்து வரும் போது "நட்பு" மட்டும் ஊனமாகிப்போய் ஒரு பாலுடன் நின்றுவிடுகிறது. இது நமது சமுதாய அமைப்பில் உள்ள பெரிய குறைபாடு .
ஆண்/பெண் நட்பில் புறத்தோற்றம் என்பது தெரிந்தோ தெரியாமலோ ஒரு முக்கிய காரணமாகிவிடுவது நடைமுறை வாழ்க்கையில் நாம் அனைவரும் சந்திக்கும் உண்மை. இந்த புறத்தோற்றம் வேண்டுமானால் நட்புக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கலாமே தவிர, அதுவே உண்மையாகி விடாது.
நட்புக் கொள்வதும் அந்த நட்பை சீரான பாதையில் எந்த சுனக்கமும் இல்லாமல் வளர்த்துச்செல்வதும் பெரிய விசயம். புறத்தோற்றம் மட்டுமே ஆண்/பெண் நட்பின் அடிப்படையாகிப்போகும் பட்சத்தில் அது நட்பையும் தாண்டி திருமண உறவையோ அல்லது சமுதாயம் விமர்சிக்கும் ஒரு தப்பான உறவை நோக்கி வளர்ந்து செல்வது தடுக்க முடியாத ஒன்று.
என்னைக்கேட்டால் காதலியைத் தேர்ந்தெடுப்பதுகூட சுலபம் என்று சொல்வேன். காதலன்/காதலி தேர்வில் புறத்தோற்றம் மிகப்பெரிய இடம் வகிப்பதால் அவர்களை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. அடையாளம் கண்டபின் அந்த காதலை வளர்த்துச்செல்வது மிகச்சுலபமாகி விடுகிறது.
புறத்தோற்றம் தவிர்த்த ஆண்/பெண் நட்பு என்பது ஒரு இனிய அனுபவம் ஆகும். இந்த உறவு கத்திமேல் நடப்பது போன்றது. இது அனைவருக்கும் வாய்த்து விடுவது இல்லை.
இந்த வகை நட்பு திருமண உறவைவிட மேலானது.
திருமணத்தில் உறவு சட்டப்படி பதிவுசெய்யப்படுகிறது. நட்பு எந்த சட்டப்படியும் பதிவுசெய்யப்படுவது இல்லை.
இங்கு நட்பே எந்த சாட்சிகளும் இல்லாமல் தன்னைத்தானே தனக்குள் பதிவு செய்து கொள்கிறது.
இவ்விதமான உறவில் முழுமையான அன்பும், உண்மையும் இல்லாத பட்சத்தில் அந்த நட்பு எந்தச் சாட்சிகளுமின்றி தற்கொலை செய்து கொல்லும். இதற்கு எந்த நீதிமன்றமும் தண்டனை வழங்க முடியாது ஆனால் மனசாட்சி மரணதண்டனை கொடுத்துவிடும்.
Thanx: கணேசன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>