Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ÒÄ¢¸Ç¢ý À̾¢¸Ç¢ø «ó¿¢Â À¨¼¸û §Å¨Ä ¸¡ð¼ «ÃõÀ¢òÐÅ¢ð¼ÉÅ??
#1
<b>புலிகளின் நிர்வாகப் பகுதியில் உளவு வேலையை அந்நியப் படைகள் ஆரம்பித்து விட்டனவா?</b>

கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கென வந்துள்ள அந்நிய படைகள், தற்போது விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் உளவு வேலைகளையும் ஆரம்பித்து விட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிளிநொச்சியில் இரணைமடு பகுதியில் விடுதலைப் புலிகளின் விமான ஓடு பாதையிருப்பதையும் அதில் இரு வானூர்திகள் நிறுத்தப்பட்டிருப்பதையும் விமானப் படையின் உளவு விமானம் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இதனை, தற்போது இங்கு மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இராணுவமொன்றும் உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதையடுத்தே, அந்நியப் படைகள் இங்கு உளவு வேலைகளையும் ஆரம்பித்துள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கப் படையினரின் இலங்கை வருகை குறித்து பல்வேறு தரப்பும் பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டு வருகையில், புலிகள் வசம் விமானங்களிருப்பதாக அந்நிய இராணுவமொன்றும் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தமையானது இந்த ஊகங்களை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போர்க் கப்பல்கள், விமானங்கள், தாக்குதல் ஹெலிகொப்டர்களென பெருமளவு இராணுவ தளபாடங்களுடன் அந்நியத் துருப்புகள் ஏன் வந்துள்ளன என்ற கேள்வியும் ஆரம்பம் முதல் எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் புலிகளின் பகுதிகளுக்கு அந்நியப் படைகள் எவையுமே செல்லாத நிலையில் புலிகளின் பகுதியில் இருப்பவை பற்றி அந்நியப் படைகளும் உறுதிப்படுத்துவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனரென்றால், இந்த அந்நியப் படைகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் செய்மதிகளைப் பயன்படுத்தி இங்கு உளவு வேலைகளையும் ஆரம்பித்து விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

¿ýÈ¢ ¾¢ÉìÌÃø...
______________________________________________________________________

À羺¢ Üð¼í¸û ¾í¸Ç¢ý (¿¡ö)§Å¨Ä ¸¡ð¼ ¬ÃõÀ¢òÐÅ¢ð¼ÉÅ¡?? :oops: :oops: :evil: :evil:
[b]

,,,,.
Reply


Messages In This Thread
ÒÄ¢¸Ç¢ý À̾¢¸Ç¢ø «ó¿¢Â À¨¼¸û §Å¨Ä ¸¡ð¼ «ÃõÀ¢òÐÅ¢ð¼ÉÅ?? - by selvanNL - 01-17-2005, 01:42 PM
[No subject] - by selvanNL - 01-17-2005, 01:49 PM
[No subject] - by Kishaan - 01-17-2005, 06:35 PM
[No subject] - by Kishaan - 01-17-2005, 06:37 PM
[No subject] - by thamizh.nila - 01-18-2005, 02:18 AM
[No subject] - by shiyam - 01-18-2005, 02:39 AM
[No subject] - by thamizh.nila - 01-18-2005, 02:44 AM
[No subject] - by shiyam - 01-18-2005, 02:46 AM
[No subject] - by hari - 01-18-2005, 03:57 PM
[No subject] - by sinnappu - 01-19-2005, 11:19 AM
[No subject] - by tsunami - 01-19-2005, 05:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)