01-16-2005, 10:12 PM
vallai Wrote:அவங்கள் கவனிக்கெலையெண்டு உமக்கு ஆர் சொன்னது.பேப்பரிலை வாறதுக்கெல்லாம் போலோ அப் பண்ணிவிட்டு அதை அடுத்த பேப்பரிலை போட அவங்களென்ன இந்திய அரசியலே நடத்துறாங்கள்.
ஏன் இப்பிடி எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமெண்டு நாண்டுகொண்டு நிக்கிறியள்
ஆயிரக்கணக்கான அகதிகளை கொட்டும் மழையிலும் கோவிலுக்குள் விடாமல் தடுப்பது போன்ற செயல்கள் மற்ற இடங்களிலும் இடம்பெறாமல் இருக்க, ஒரு முறை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மற்றவர்களும் அறிந்திருக்க செய்வது முக்கியமானது. மற்றவர்களுக்கு இப்படியான சம்பவங்கள் பற்றி நடவடிக்கை எடுக்கப்படுவது தெரியாமல் இருப்பது, இப்படியான நடவடிக்கைகள் தொடருவதற்கான காரணங்களில் ஒன்று.
சட்டம், சட்ட அமுலாக்கலில், நீதி நிலைநாட்டப்படுவதுடன் நீதி நிலைநாட்டப்படுவதை அனைவரும் அறியச்செய்வதும் முக்கியமானதாகும். அதற்கு காரணம் முன் சொன்னபடி மற்றவர்கள் மேற்படி சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவதை தடுப்பதாகும். ஆகவே விடுதலைப்புலிகள் மேற்படி சம்பவத்தில் சட்ட நடவடிக்கை எடுத்து, அவ்வாறு எடுக்கப்பட்டதை அனைவரும் அறியச்செய்யவும் வேண்டும்.

