Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
oh our INDIA ??!!
#47
[b]இலங்கைத் தீவகத்தில் அந்நியப் படைகள்: இனியேனும் மாறுமா இந்திய வெளியுறவுக் கொள்கை?

-சேரமான்-
கடற்புவி நடுக்க ஆழிப்பேரலையால் இலங்கைத் தீவகத்தில் உள்ள தமிழீழத்தில் சுமார் 20 ஆயிரம் தமிழ் உறவுகளை இழந்திருக்கிறோம். அதே எண்ணிக்கையில் இருக்கிறது காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும்! போரினால் தமிழர்கள் எதிர்கொண்ட இடப்பெயர்வைக் காட்டிலும் இப்போது மிகுதியாக இருக்கிறது. லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் ஏதிலியர்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னெடுப்புகளாலும் புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளின் உயரிய நிதி மற்றும் வாழ்வாதார பொருள்கள் அளிப்பினாலும் மீள்குடியேற்றப் பணிகள் விரைந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. சிறீலங்கா அரசின் எவ்வித ஒத்துழைப்பும் இன்றி. இந்த சவால்களை தமிழீழத் தமிழர்கள்ää தமிழீழ நிர்வாகத்தை நடத்தி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் எதிர்கொண்டு இருக்கும் அசாதாரணமான சூழலில் அச்;சமூட்டும் வகையில் அந்த செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

சர்வதேச நாடுகளிடமிருந்து மீட்புப் பணிகளுக்காக என கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை சிறீலங்காவின் துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ளன அல்லது வந்திறங்கக் கூடுமாம்.

அமெரிக்காவின் ய10.எஸ்.எஸ்.ரிமோர் என்ற யுத்த கப்பல் இந்த வார இறுதியில் சிறீலங்காவை வந்தடையும். 1987 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கப்பல் 186 மீற்றர் நீளமானது விமானங்கள் தரையிறங்கக்கூடிய இரண்டு இறங்கு தளங்கள் உள்ளன. இந்த கப்பல் மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. இந்த கப்பலில் 20 உலங்குவானூர்த்திகள் மற்றும் கனரக வாகனங்கள் எடுத்துவரப்படும். இரண்டு 20 எம்.எம்வி. ரக சுடுகலன்கள் மற்றும் 25 எம்.எம் பீரங்கிகள் இரண்டு 50 கலிபர் தானியங்கி சுடுகலன்கள் ஆறு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு என்பன இதில் பொருத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் மூலம் சிறீலங்காவுக்கு எடுத்துவரப்பட்டுள்ள பிளக் ஹொக் வகை உலங்குவானூர்திகள் சிறீலங்காவின் கட்டுநாயக்க விமானப் பகுதியில் சோதனை முறையில் பறந்தன.

சிறீலங்காவின் மீட்பு பணிகளுக்கு 1500 அமெரிக்க இராணுவ வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யும் என்கிறார் அமெரிக்க முன்னாள் அமைச்;சர் காலின் பவெல்.

இந்தியாவின் 32 கடற்படை கலன்கள் இலங்கைத் தீவக மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தன் 400 படையினருடன் கப்பல் ஒன்றையும் இலங்கைத் தீவுக்கு அனுப்பியுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தின் ஏழை நாடாக கருதப்படும் வங்கதேசம் தனது பங்கிற்கு கப்பல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

பிரான்சு உலங்குவானூர்திகளையும் ஜெர்மனி ஒரு விமானம் தாங்கி கப்பல் மற்றும் 14 சி-130 ரகவிமானங்களை அனுப்பியுள்ளது.

ரசியாவின் மூன்று ஐ.-76 ரக போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஜப்பானிய கப்பல் ஒன்று என்பன இந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம்.

இவையெல்லாம் மீட்புப் பணிகளுக்குத்தான் என்று சத்தியம் அடித்துச்; சொல்கின்றன இந்த நாடுகளும் இவர்களை வரவழைத்த சிறீலங்காவும்.

அண்ணன் எப்ப சாவான். திண்ணை எப்ப கிடைக்கும் என்கிற வகையில் இவர்கள் இலவுகாத்த கிளிபோல்தான் இருந்திருக்கிறார்கள் என்பதையே இந்த பாரிய படைகுவிப்பு காட்டுகிறது. அதை பின்னர் பார்ப்போம்.

இந்த பாரிய படைகுவிப்புக்கு சிறீலங்கா அரசு அழைப்புவிடுக்க காரணம் என்ன? காரணம் இல்லாமலா சிங்கள அரசு வரவழைத்திருக்கும்.

ஆழிப்பேரலையினால் சிறீலங்காவில் சிங்கள மக்கள் 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதே எண்ணிக்கையில் சிறீலங்காவின் இராணுவத்தினரும் உயிரிழந்துவிட்டனர் என்று சிங்கள ஊடகங்களே சுட்டிக்காட்டுகின்றன.

சிங்களää தமிழ் ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாகவும் மறைமுகமாகவும் சிறீலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் குறித்து தெரிவித்துள்ள தகவல்கள் இவை:

கடல் கொந்தளிப்பு காரணமாக சிறிலங்கா கடற்படையின் 6 கடற்படைத் தளங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. இதனைத் தவிர தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10ற்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை முகாம்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சிறீலங்கா கடற்படையின் காலிää மாத்தறைää தங்காலைää திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை கடற்படைத் தளங்கள் முற்றாக சேதமடைந்துள்ளது என்பதை பாதுகாப்பு அமைச்;சகம் அறிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவித்தலின் படி 23-2வது படைப் பிரிவு தலைமையகம் (கல்குடா) நாகர்கோவில் பருத்தித்துறை மணல்காடு மாங்கேணி காயாங்கேணி கிண்ணியா ஆகிய இடங்களில் அமைந்துள்ள சிங்கள இராணுவ முகாம்கள் கடலில் அடித்துச்; செல்லப்பட்டு தரை மட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 23-2 வது படைப் பிரிவில் கட்டளை அதிகாரி டபிள்ய10.எம்.எஸ்.குணரத்ன உட்பட 32 இராணுவ வீரர்கள் ஒட்டுமொத்தமாகவே உயிரிழந்துள்ளனர்.

சிறீலங்காவின் காலேத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படையின் பராக்கிரமபாகு யுத்த கப்பல் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த கப்பல்தான் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இராணுவத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் கண்காணிப்பில் ஈடுபட்ட மூன்று சிங்களக் கடற்படைக் கப்பல்களும் வேறு கலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக திருகோணமலை சீனன்குடாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் வட-கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதுகுறித்த விபரங்களை படைத்தரப்பு வெளியிடுவதை முற்றாகத் தவிர்த்துள்ளது.

யாழ் பகுதியில் சிங்கள இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காங்கேசன்துறைää காரைநகர்த் தளங்கள் பாரிய சேதம் அடைந்திருப்பதாகவும் பல கலங்கள் கடல் நீரினால் அடித்துச்; செல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் வெளியிட்ட தகவலின் படி அவர்களின் 51-1ம் 51-4ம் 51-5ம் பிரிகேட்டுகளிற்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டன.

நாகர்கோவில்ää மணல்காடுää பருத்தித்துறைää தொண்டமனாறுää வல்வெட்டித்துறைää காங்கேசன்துறைää மாதகல் உட்பட 8 இராணுவ முகாம்கள் யாழ் குடாநாட்டில் முற்றாக கடலில் அடித்துச்; செல்லப்பட்டுள்ளன.

யாழ் குடாநாட்டின் கண்காணிப்பை உறுதிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்டிருந்த 44 கிலோ மீட்டர் நீளமான காவல்வேலியும் அதனுடன் இணைந்த மினிமுகாம்கள்ää காவலரண்கள்ää காவல்நிலைகள் என்பனவும் பேரலையால் முற்றாக அடித்துச்; செல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.

மட்டு-அம்பாறை பகுதியில் கல்குடாää களுவத்தைää கல்லடிää மாங்கேணி இராணுவ முகாம்களும் அறுகம்பைää பானமை உட்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நான்கு விசேட அதிரடிப்படை முகாம்களும் தரைமட்டமாகியுள்ளன.

அத்தோடு கரையோரப் பகுதிகளில் அமைந்திருந்த காவலரண்கள்ää கண்காணிப்பு முகாம்கள் என்பன கடல்நீரால் அடித்துச்; செல்லப்பட்டுள்ளன. சுமார் 400க்கும் மேற்பட்ட படையினர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியின.

சிறீலங்காவின் நம்பிக்கைக்குரியதாக கருதி வரும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது திருகோணமலை துறைமுகம்தான். இது தான் தமிழீழத்தின் தலைநகரமாக பிரகடனத்தப்பட்டுள்ள நகரம். ஆழிப்பேரலைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக திருகோணமலையை மீட்கும் விதமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதைச்; சுற்றி புதிய முகாம்கள் அமைத்து உள்ளதாக செய்திகள் வெளியானது. இச்;செய்தி குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் விசாரணையும் நடத்தி அப்படி ஏதும் இல்லை என்று கூறினர்.

ஆனாலும் சிங்களத் தரப்பு அச்;சத்திலே இருந்த சூழ்நிலையில் அவர்களுக்குப் பேரிடியாக ஆழிப்பேரலை வந்தது.

ஆழிப்பேரலையின் நேரடி பெருஞ்சீற்றத்துக்குள்ளானது திருகோணமலை துறைமுகமே என்கிறது சில தகவல்கள்.

இங்கிருந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களும் கடலோடு கரைந்துபோய்விட்டது. இதனால் கதிகலங்கிப் போன சிறீலங்கா அதிபர் சந்திரிகா அம்மையார் முதலில் இந்தியாவிடம் உடனடியாக ஒரு போர்க்கப்பலை அளிக்குமாறு கையேந்தி நின்றார்.

உடனே இந்திய அரசும் பெரும் எண்ணிக்கையிலான நிவாரணப் பொருட்களுடன் சிறீலங்காவுக்கு போர்க்கப்பல்களையும் அனுப்பிவைத்தது.

திருகோணமலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் விட்டுச்; சென்ற எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை இந்தியா பெரும் எண்ணிக்கையில் நீண்டகால குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் கூறிக்கொண்டு திருகோணமலையில் ஏற்கனவே கால்பதித்து இருந்தது.

தன்னை வலுப்படுத்திக்கொள்ள நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணிக்கொண்டு மீட்புää நிவாரண நடவடிக்கையை இந்தியா மேலும் துரிதப்படுத்தியது.

சிறீலங்கா அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு அதன் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் உறுதி செய்து வந்தது.

உடனடித் இராணுவத் தேவைகளை இந்திய அரசிடமிருந்து பூர்த்தி செய்துகொண்ட சிறீலங்கா அரசு எதிர்கால பயன்களுக்கான திட்டமிடல்களை உருவாக்கவும் தவறவில்லை.

அதன் விளைவுதான் அமெரிக்காவை வரவழைத்தது.

எந்த ஒரு யுத்த களத்திலும் போரிடும் இருதரப்பினரும் படைச்; சமநிலையில் இருக்கும்போதுதான் யுத்த நிறுத்தம் நீடிக்கும்.

எந்தத் தரப்பாவது படைநிலையை அதிகரித்தால் யுத்த நிறுத்தம் கேள்விக்குறியாகிவிடும். இதுதான் யதார்த்தம்.

இதனால் இந்தியா-சிறீலங்கா இராணுவ ஒப்பந்தம் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்து சமுத்திரப் பகுதியில் டியாகோ கார்சியா தீவில் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து 1500 கிமீ தொலைவில் 1970-ன் தொடக்கத்திலிருந்து தன்னை கால் பதித்தது அமெரிக்கா. (இந்து சமுத்திரத்தில் உள்ள இந்தத் தீவு ஆழிப்பேரலையில் தப்பியிருக்கிறது. இங்கு இருக்கும் அமெரிக்காவின் அதிநவீன கருவிகளுக்கு ஆழிப்பேரலை தெரியாமல் இருந்ததா? அதை அருகாமையில் உள்ள மாலத்தீவு மற்றும் இந்தியாவுக்கு ஏன் தெரிவிக்காமல் இருந்தது? சாகட்டும் பார்க்கலாம் என்பதுதானே நோக்கம்).

இந்தியாவில் ஒற்றையாட்சியும் வலுவான அரசியல் தலைவர்களும் இருந்த காலத்தில் கூட சிறீலங்கா அரசுää இந்திய அரசுக்கு எதிராக பாகிசுதானுடனும் அமெரிக்காவுடனும் நட்பு பாராட்டியே வந்தது.

இதன் விளைவாகத்தான் 1980களின் தொடக்கத்திலிருந்தே சிறீலங்காவில் அமெரிக்கா கால் பதிக்கத் திட்டமிட்டது. வாய்ஸ்ப் ஆப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி ஒலிபரப்பு சேவைக்கான தளத்தை சிறீலங்கா அரசு அமைக்க முடிவுசெய்த நேரத்தில்தான் தமிழீழ விடுதலைப் போர் வெடித்தது. இதனால் அமெரிக்காவும் அமைதி காத்து வந்தது. இருந்தபோதும் சில வர்த்தக நிறுவனங்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருக்கக் கூடும் என்று அப்போது தமிழீழத்தில் பயணம் மேற்கொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் அந்நாளைய இந்திய பிரதமர் இந்திராவிடம் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டினார். இந்திரா அம்மையாரும் இதை நாம் அனுமதிக்க முடியாது என்று கூறி இந்திய நாடாளுமன்றத்திலேயே இப்படியான செயலை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தார்.

இந்திரா அம்மையார் மறைவுக்குப் பிறகு ராசீவ் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் நெகிழ்ச்;சித் தன்மை உருவானது. தமிழீழ விடுதலைப் போரும் அப்போது ஒரு முக்கிய திருப்புமுனையில் இருந்தது. இதை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீட்சித் போன்ற கொள்கை வகுப்பாளர்கள் ராசீவை கொம்புசீவி விட்டனர்.

அப்போது உருவாக்கப்பட்ட ராசீவ்-செயவர்த்தனா ஒப்பந்தமானது தமிழீழத் தமிழர் போராட்டத்தை மய்யமாகக் கொண்டதாக இருந்தாலும் அதில் இந்தியா தனது சுயவிருப்பத்தை பதிவு செய்து சிறீலங்காவை ஏற்க வைத்திருந்தது என்பதே உண்மை.

அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள சில அம்சங்கள் இன்றைய சூழலுக்கு மிக சரியாகவே பொருந்துகின்றன.

அதில் ஒன்றுதான்

திருகோணமலை மற்றும் சிறீலங்காவின் இதர துறைமுகங்கள் இந்தியாவின் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் எந்த ஒரு நாட்டின் இராணுவ வசதிக்காகவும் அளிக்கப்பட மாட்டாது என்பது.

தனது வழமையான அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்கான நிபந்தனையை இந்திய அரசு அந்த ஒப்பந்தத்தில் இணைத்திருந்தது.

அத்துடன் சிறீலங்கா அரசானது அமெரிக்காவின் வானொலி சேவைக்கான தளத்தை அனுமதிப்பது குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பது கூட அதில் இடம்பெற்றது. ஆனால் காலமும் சூழ்நிலைகளும் திசைமாற சிங்களவர்கள் மீண்டும் அமெரிக்காவுடன் கை கோர்க்கத் தயங்கவேயில்லை.

இரணுவில என்ற இடத்தில் 400 ஹெக்டேர் பரப்பளவில் இந்த வானொலி தளம் அமைக்கப்பட்டுள்ளது. இரணுவில மக்களின் கடும் எதிர்ப்புää போராட்டங்கள் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டது சிறீலங்கா அரசு. துப்பாக்கிச்; சூட்டையும் கூட சிறீலங்கா அரசு நடத்தியது. போராடியவர்கள் தமிழர்கள் அல்ல. சிங்களவர்கள்தான். ஆனாலும் சிறீலங்கா அரசு அமெரிக்காவுக்கு நண்பனாக இருப்பதையே விரும்பியது. அதனால் அமெரிக்காவின் வாய்ஸ் ஆப் அமெரிக்கா வானொலி தளம் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது.

இந்தியாவிலும் இந்திரா அம்மையார் போல வலிமையான தலைவர்கள் யாரும் அதற்குப் பிறகு வரவில்லை. நிலையான ஆட்சி என்பதும் அமையவில்லை. நிரந்தமரமற்ற எப்போது வேண்டுமானாலும் கவிழக் கூடிய ஆட்சிகளே இந்தியாவில் நீடித்து வருகின்றன.

இதனால்தான் பெரும் எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவத்தை அழைக்க சிறீலங்காவுக்குத் துணிவு வந்தது. அமெரிக்காவும் வந்து துருப்புகளைக் குவித்தது.

அந்த இரண்டு அரசுகளும் எண்ணியதுபோல் தான் இங்கே இந்திய அரசு என்று அழைக்கப்படுவது வாய்திறக்க இயலாமல் இருக்கிறது.

தென்னாசியாவின் வல்லரசு என்ற இந்திய நிலைக்கு மட்டுமான பேராபத்து இது அல்ல. இந்த அமெரிக்க படைகுவிப்பால் பெரும் பாதிப்புக்குள்ளாகப்போவது தமிழர்கள் தான்.

தமிழீழத் தமிழர்கள் மட்டுமல்ல. தமிழ்நாட்டுத் தமிழர்களும்தான்.

ஆழிப்பேரலைக்கு முன்பாக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள்ää தனது மாவீரர் நாள் உரையில் சிறீலங்கா அரசின் தற்போதைய இழுத்தடிப்பு நடவடிக்கைகளால் தமிழர்கள் மீண்டும் விடுதலைப் போரைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்;சரித்திருந்தார். இதில் ஆடித்தான் போய் இருந்தது சந்திரிகா தரப்பு.

ஆழிப்பேரலை வந்த உடன் சிறீலங்கா அதிபர் சந்திரிகா வெளியிட்ட அறிக்கையில் அப்பாடா புலிகளால் வந்த போராபத்து இப்போதைக்கு இல்லை என்பதை ஒளிவுமறைவின்றி தெரிவித்திருந்தார்.

இனி எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடங்க போகும் அமைதிப்பேச்;சுகளில் சிங்களப் பிரதிநிதிகள் மேசைகளில் அமர்ந்திருக்கலாம். அவர்கள் மறைந்து இருப்பது அமெரிக்க படையினருக்குப் பின்னால் என்பதை நினைவுபடுத்தி தமிழர்களின் கோரிக்கைகளை நீர்த்துபோக வைக்கலாம் என்பதே சிங்கள அரசின் எண்ணம்.

இதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் தமிழர் பகுதிகளான யாழ் மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தை குவித்திருக்கிறது சிங்கள அரசு.

இந்த பகுதிகளில் முகாமிடும் அமெரிக்கா கொண்டு வந்திருக்கிறது சக்திவாய்ந்த உளவு செயற்கைக் கோள்களை.
The National Geo-spatial Intelligence Agency என்ற NGA அமைப்பு இந்த சாதனத்தை அளித்துள்ளது.

மீட்பு பணிகளுக்குச் செல்லும் அமெரிக்க இராணுவத்தினருக்கு அளிக்கப்படும் இந்த செயற்கைக்கோள் முக்கியமாக கண்டுபிடித்து கொடுப்பது எதைத் தெரியுமா?

'இராணுவ நிலைகளையும் ரகசியமாக பதுக்கி வைக்கப்படிருக்கும் ஆயுத கிடங்குகளையுமாம்".

மீட்புப் பணிக்குச் செல்லும் சாக்கில் இந்த உளவு சாதனங்களை அமெரிக்கா கொண்டு செல்வதும் வழமையாம்.

ஆழிப்பேரலைக்குப் பின் டிசம்பர் 30ஆம் தேதியன்று NBC செய்தி நிறுவனத்தின் புலனாய்வு செய்தியாளர் ராபர் விண்ட்ரெம் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ நிலைகளையும் ரகசிய ஆயுதங்களையும் அறிந்து தரும் இந்த சாதனம் மீட்பு பணி மேற்கொள்ளும் நாடுகளில் முதன்மையான போக்குவரத்து கட்டமைப்பையும் பதிவு செய்துகொள்ளுமாம்.

அடித்துச் செல்லப்பட்ட சாலைகளையும் மின் நிலைகளையும் கூட துல்லியமாக பதிவு செய்யுமாம் இந்தக் கருவி.

ஆழிப்பேரலை பாதிப்பு செய்திகள் வெளியான நிலையில் Nபுயு அமைப்பு இந்த சாதனங்களை அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறது.

ஆக தமிழீழத்தில் சிறீலங்கா அரசு என்ன செய்ய நினைத்ததோ அதை இப்போது அவர்களது பங்காளியாக அமெரிக்கா செய்யப் போகிறது.

அமெரிக்காவின் வருகையை இடதுசாரிகள் என்றழைக்கப்படுகிற பேரினவாத கட்சியான ஜேவிபி வரவேற்றுள்ளது. அதேநேரத்தில் இசுலாமியர்கள் பெரும் அச்;சத்தில் அங்கு உள்ளனர்.

முசுலிம் காங்கிரசு தலைவர் ஹக்கீம் அரபு உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து அமெரிக்க இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

இதே நேரத்தில் சிறீலங்கா ஊடகங்கள் வெளியிடுகிற இன்னொரு செய்தியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அமெரிக்கா இராணுவம் உடனடியாக வெளியேறாவிட்டால் தென் இலங்கையில் சிங்கள-முசுலிம் இளைஞர்கள் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் இணைந்து செயல்படக் கூடும் என்பதே அது.

இலங்கைத் தீவகத்தில் தமிழ்-சிங்கள-இசுலாமிய மூவின மக்களும் அமெரிக்காவின் உள்நோக்கத்தை தெளிவாகவே புரிந்துகொண்டு இருக்கின்றனர்- ஆட்சியாளர்களைத் தவிர.

தமிழீழத்தில் மட்டுமல்ல. இந்தியாவின் தென்பகுதி தமிழ்நாட்டிலும் அதன் கரம் நீளாமலா போகும்?

கூட்டு கடல் ரோந்து கூட்டு பாதுகாப்பு என்று தமிழர்களின் கடல்பகுதியில் அமெரிக்க இராணுவம் இறங்கிவிட்டால் பிறகு என்ன? இந்தியாவிற்குள்ளும் அமெரிக்கா வந்ததுபோல்தான்.

ஆழிப்பேரலையில் மொத்த கடல்வளத்தையும் இழந்துபோய்விட்ட தமிழன் சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூடுகளுக்குப் பலியாகிக் கொண்டிருந்த தமிழ்நாட்டுத் தமிழன் இனி அமெரிக்க இராணுவச் சூட்டுக்கு அநியாயமாக பலியாகிடும் காலம் மிக அண்மையில்தான் போல.

ஒவ்வொரு நாட்டினது வெளியுறவுக் கொள்கை என்பது அப்படியே நிரந்தரமாக வைத்துக்கொண்டிருப்பது அல்ல.

சூழல்களுக்கேற்ப மாற்றப்படவேண்டியவையே.

அரசியல் சாசனங்களிலேயே எத்துணையோ திருத்தங்களை மேற்கொண்டுவிட்ட இந்திய அரசு இலங்கைத் தீவகம் தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசிய அவசர சூழல் இது.

இந்திய விடுதலைக் காலத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய சூழல்களில் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது நாடு சிறீலங்கா.

1950களில் சிறீலங்காவின் பிரதமராக இருந்த சர்.ஜான் கொத்தலாவல ஆட்சிகாலமாகட்டும் சரி

1960களில் இந்திய-சீன யுத்த காலத்திலிருந்த சிறீலங்கா அரசாகட்டும் சரி

1970களில் வங்கதேசத்திற்கான இந்திய-பாகிசுதானிய யுத்த காலமாகட்டும் சரி

இந்தியாவிற்கு துரோகமிழைத்த வரலாற்றையே சிறீலங்கா தொடர்ந்து செய்திருக்கிறது.

அதேநேரத்தில் தமிழீழத் தமிழர்கள் இந்தியாவை நேசமிகு நாடாகவே பார்த்து வந்துள்ள வரலாறு மறக்கப்பட முடியாதது.

இந்திய-சீன யுத்த காலத்தில் சிறீலங்கா அரசின் நிலையைக் கண்டித்து இந்தியாவுக்காக சீனாவுடன் போரிட தொண்டர் படையை அனுப்புவோம் என்று பிரகடனம் செய்தவர் தந்தை செல்வா.

இந்திரா அம்மையாரும் மறைந்த முதல்வர் எம்ஜிஆரும் தங்கள் காலத்தில் தமிழீழத் தமிழர்களுக்காக செய்த பேருதவிகள் மறக்க முடியாதவை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும்ää அண்மைய அமைதிப் பேச்சுகளில் தந்தையர் நாடாகிய இந்தியா உயரிய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கொள்கை வகுப்பாளர்களின் பிழையான நடவடிக்கையால் ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் மறந்துவிட்டு-

இந்தியாவின் எதிர்கால நலனுக்காக-

தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழர்களின் நலனுக்காக
முன்னாள் பிரதமர் இந்திரா காலத்தில் இந்திய மய்ய அரசு மேற்கொண்ட இலங்கைத் தீவகம் தொடர்பான வெளியுறவுக் கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை.

இப்போது இந்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இதை வலியுறுத்த வேண்டியது வரலாற்றுக் கடமை.

இந்திராவின் வாரிசுகளாக மத்தியில் ஆட்சி அமைத்திருப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விடயமும் அல்ல- தமிழீழ விடுதலைப் போருக்கான ஆதரவு களத்தை உருவாக்கியதில் பங்காற்றி இன்று மய்ய அரசின் கூட்டாளிகளாக இருக்கும் திமுக மதிமுக பாமக போன்ற கட்சிகளுக்கும் இதுஒரு பெரிய விடயமும் அல்ல!!

நன்றி:தமிழ்நாதம்
Reply


Messages In This Thread
oh our INDIA ??!! - by anpagam - 12-13-2003, 12:27 AM
[No subject] - by anpagam - 12-14-2003, 01:02 PM
[No subject] - by aathipan - 12-20-2003, 04:16 AM
[No subject] - by Kanakkayanaar - 12-20-2003, 09:05 AM
[No subject] - by anpagam - 12-20-2003, 03:40 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:11 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:17 PM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:24 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:28 AM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:19 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 02:08 PM
[No subject] - by aathipan - 12-28-2003, 06:32 PM
[No subject] - by anpagam - 01-02-2004, 02:00 PM
[No subject] - by anpagam - 01-04-2004, 12:58 AM
[No subject] - by aathipan - 01-04-2004, 05:02 PM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:01 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:34 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 01:00 AM
[No subject] - by anpagam - 01-06-2004, 11:40 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:13 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:21 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 01:45 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:40 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:45 PM
[No subject] - by anpagam - 01-19-2004, 02:52 PM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:16 AM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:27 AM
[No subject] - by anpagam - 01-25-2004, 01:56 PM
[No subject] - by anpagam - 01-25-2004, 02:03 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:46 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 01-27-2004, 03:23 PM
[No subject] - by anpagam - 01-28-2004, 01:10 AM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:32 PM
[No subject] - by anpagam - 01-29-2004, 11:57 PM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 12:39 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:23 AM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:47 PM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:49 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:13 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:27 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 12:04 AM
[No subject] - by anpagam - 04-28-2004, 12:11 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 03:15 PM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:05 AM
[No subject] - by anpagam - 01-15-2005, 03:06 PM
[No subject] - by anpagam - 01-15-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 01-20-2005, 04:17 PM
[No subject] - by anpagam - 01-21-2005, 03:36 AM
[No subject] - by kavithan - 01-21-2005, 03:58 AM
[No subject] - by anpagam - 01-21-2005, 05:02 PM
[No subject] - by kavithan - 01-21-2005, 11:12 PM
[No subject] - by anpagam - 01-26-2005, 06:27 PM
[No subject] - by shiyam - 01-26-2005, 07:05 PM
[No subject] - by anpagam - 01-28-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 02-01-2005, 01:38 AM
[No subject] - by paandiyan - 02-01-2005, 12:40 PM
[No subject] - by anpagam - 02-02-2005, 02:26 AM
[No subject] - by paandiyan - 02-02-2005, 04:40 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 01:50 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 03:01 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 11:45 PM
[No subject] - by anpagam - 02-08-2005, 11:57 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 07:23 PM
[No subject] - by anpagam - 02-16-2005, 01:15 PM
[No subject] - by anpagam - 02-28-2005, 03:28 PM
[No subject] - by anpagam - 03-03-2005, 11:29 PM
[No subject] - by anpagam - 03-12-2005, 02:28 PM
[No subject] - by thivakar - 03-13-2005, 01:06 PM
[No subject] - by anpagam - 03-14-2005, 12:02 PM
[No subject] - by anpagam - 03-15-2005, 02:06 PM
[No subject] - by anpagam - 03-28-2005, 01:51 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 03:16 AM
[No subject] - by anpagam - 04-01-2005, 12:55 AM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:20 PM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:27 PM
[No subject] - by anpagam - 04-22-2005, 11:35 AM
[No subject] - by anpagam - 05-22-2005, 08:19 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:14 AM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:32 PM
[No subject] - by Magaathma - 05-23-2005, 07:50 PM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)