01-15-2005, 12:48 PM
இலங்கையில் சுனாமியில் தப்பிய குழந்தைக்கு உரிமை கோரும் 9 பெண்கள்
கொழும்பு, ஜன. 15-
கடந்த மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலைகள் கோர தாண்டவத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர் கள் பலியாகி விட்டனர். இன்னும் பல லட்சம் பேர் காயம் அடைந்தும், உடமைகளை இழந்தும் முகாம்களில் தங்கி உள்ளனர்.
இலங்கையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள ஒரு கிராமத்தில் சுனாமியில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஒரு குழந்தையை மீட்பு படையினர் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஒரு வயதுக்கும் குறைவான அந்த குழந்தை சிகிச்சைக்குப் பின் பிழைத்துக் கொண்டது.
அந்த குழந்தை பிழைத்துக் கொண்டாலும் இப்போது புதிய பிரச்சினை முளைத்து இருக்கிறது. அந்த குழந்தையின் பெற்றோர் என்ன ஆனார்கள். அவர்கள் சுனாமியில் சிக்கி இறந்தார்களா அல்லது உயிர் பிழைத்தார்களா என்று அதிகாரிகளுக்கு புரியாத நிலையில் அந்த குழந்தைக்கு உரிமை கொண்டாடி ஒரு பெற்றோர் வந்துள்ளனர்.
அவர்கள் வந்த நேரத்தில் இன்னொரு பெண் அந்த குழந்தைக்கு நான் தாய் என்று உரிமை கொண்டாடினார். இப்போது 9 பெண்கள் அந்த குழந்தையின் தாய் நான்தான் என்று கூறி குழந்தையை கேட்கிறார்கள். அதிகாரிகள் இதற்கு தீர்வு காண முடியாமல் திகைத்துப்போய் இருக்கி றார்கள்.
மரபணு சோதனை நடத்தி அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
நன்றி: மாலைமலர்