01-14-2005, 01:57 AM
அமெரிக்க இராணுவத்தின் வருகை பூகோள அரசியல் நலன் சார்ந்ததல்ல
திட்டவட்டமாக மறுக்கிறது அமெரிக்க காங்கிரஸ் தூதுக்குழு
இலங்கையில் அவசர நிவாரணப் பணியில் ஈடுபடும் அமெரிக்க இராணுவத்தின் செயற்பாடுகள் பூகோள அரசியல் நலன் சார்ந்தவையல்லவென வருகை தந்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் தூதுக்குழு திட்டவட்டமாக நேற்று புதன்கிழமை மறுத்துள்ளது.
கடள்கோள் அனர்த்த அழிவைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவே இதனைத் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமெரிக்க காங்கிரஸ் குழுஇ இலங்கையில் பணி புரியும் முக்கிய தளபதிகள் முதற் கொண்டு சாதாரண இராணுவத்தினர் வரை தாங்கள் இங்கு மனிதாபிமான நோக்கத்திலேயே செயற்படுவதாக கருதுகின்றனர் எனவும் தெரிவித்தது.
ஆசிய- பசுபிக்கிற்கான காங்கிரஸ் உப குழுவின் தலைவரான ஜேம்ஸ் ஏ.லீச் தலைமையில் இலங்கை வந்திருந்த இந்தக் குழுவினர் கொழும்புப் பிளாசாவில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது;
அமெரிக்க இராணுவம் இங்கு மனிதாபிமானப் பணிகளை மாத்திரம் மேற்கொள்ளும். பல இராணுவத்தினருடன் பேசிய போது இலங்கையில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமிதம் வெளியிட்டனர்.
எமது இராணுவத்தின் செயற்பாடுகளில் எந்த வித கேந்திர முக்கியத்துவ நோக்கங்களும் இல்லை.
முக்கிய தளபதிகள் முதல் சாதாரண உத்தியோகத்தர்கள் வரை எங்களிடம்இ தாங்கள் நூறு வீதம் மனிதாபிமான பணிகளிலேயே அக்கறை காட்டுவதாகத் தெரிவித்தனர்.
சுனாமி காரணமாக ஏற்பட்ட இழப்பினை தெரிந்து கொள்ளவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு என்ன வகையில் உதவலாம் என்பதைத் தெரிந்து கொள்ளவும் அமெரிக்க காங்கிரஸ் சார்பில் இந்தோனேசியாஇ தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் உங்களது நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டோம்.
நாங்கள் இங்கு சுனாமியால் பேரிடர் ஏற்பட்டுள்ளதையும்இ குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டுள்ளதையும் புரிந்து கொண்டோம்.
சர்வதேச சமூகம் இதனை மனித சமூகத்திற்கு ஏற்பட்ட பாரிய துயராக இனம் கண்டுள்ளது. இதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட நாடுகளின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உங்கள் மீது கரிசனையும்இ அக்கறையும் கொண்டுள்ளது.
சர்வதேச சமூகம் ஐக்கியப்பட்டு முன்னரெப்போதுமில்லாத வழியில் உதவுகின்றது.
எதிர்காலத்தில் இயற்கை அழிவுகள் ஏற்படும் பட்சத்தில் எப்படி அதனை எதிர்கொள்ளலாம் என்பதற்கு இது முன்னுதாரணமாக அமையப் போகின்றது.
இந்தப் பிராந்தியத்தில் அதிகம் இழப்புக்களை சந்தித்த நாடுகள் நீண்டகால அரசியல் மோதல்களையும் எதிர்கொண்டுள்ளன.
சுனாமித் தாக்கத்திற்கு பிறகு இந்த விடயங்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த புதிய கருத்தியற் கோட்பாடு உருவாகியுள்ளது.
விடயங்களை புதிய வழியில் பார்ப்பது குறித்த சிந்தனை தோன்றியுள்ளது. இலங்கை எதிர்கொண்ட அழிவுகளை அறிந்து கொள்வதற்கான எமது முதல் பயணம் இது.
எமது அனுபவங்களூடாக ஆலோசனைகளையும்இ உதவிகளையும் எப்படி வழங்குவது என்பதை தீர்மானிக்கலாம். இந்தச் சுனாமி அனர்த்தம் புதிய கருத்தியல் ஒன்றுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச சமூகம் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக அவதானிக்கும்.
பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி எவ்வாறு செலவழிக்கப்படுகின்றது என்ற துல்லியமான விபரங்கள் அவசியம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிகள்இ உதவிகள் போய்ச் சேருவதை உறுதி செய்வதற்கான சரியான அடித்தளத்தை இட விரும்புகின்றோம். சர்வதேசம் ஒன்று திரண்டு உதவியளிக்கின்றது.
நாங்கள் சரியாக செயற்படாவிடில்இ சரியான கணக்குகளைப் பேணாவிடில் எதிர்காலத்தில் இவ்வாறான உதவிகள் கிடைக்காமல் போய்விடும்.
நாங்கள் இலங்கைக்கு என்ன வகையான உதவி தேவை என்பது குறித்தே கவனம் செலுத்துகின்றோம்.
இந்த விடயத்தில் பின்னோக்கிச் செல்லக் கூடாது . உடனடித் தேவைகளுக்கு அப்பால் புனர்வாழ்வுஇவீடுகளை இழந்தோருக்கு வீடுகளை அளித்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கைக்கான உதவியின் வடிவம் மாற வேண்டும்இ நீண்ட கால அடிப்படையில் சிந்திக்க வேண்டும். மீனவர்களுக்கு அவர்கள் மீண்டும் மீன்பிடித் தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.மீனவர்களின் விதவைகளுக்கு சுயதொழில் வாய்ப்புத் திட்டங்கள் அவசியம்.
படகுகளைஇ மீன்பிடி வலைகளை அளிக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் உதவியின் வடிவத்தை மாற்ற வேண்டும். நீண்ட கால மனிதாபிமான அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகளில் சமீபத்தில் ஊழல் நடைபெற்றதாக வெளிவந்த தகவல்களால் ஏற்பட்ட சர்ச்சை சுனாமி நிதியுதவி முறைகேட்டைத் தடுத்து நிறுத்தும். நிதியுதவி விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவிற்கு சென்றதும்இ இலங்கைக்கு என்ன தேவை என்பதைத் தெளிவுபடுத்தும் சட்ட மூலமொன்றைக் காங்கிரஸில் சமர்ப்பிப்போம்.
தேவைகள் குறித்த தெளிவான ஆவணங்கள் அவசியம். நிதியுதவி பயன்படுத்தலில் அரசு அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும்.
அமெரிக்கா இந்த விடயத்தில் உதவுவதன் மூலம் தென் ஆசியாவின் 32 நாடுகளுடன் உறவுகளை ஆழமாக்கிக் கொள்ளப் போகின்றது.
இலங்கையிலும்இ பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளிலும் பல அமைப்புகளும் பல நாடுகளும் பாரிய பணி ஆற்றி வருகின்றன. இது எங்களைக் கவர்ந்துள்ளது.
நாங்கள் சர்வதேச சமூகத்தின் இந்தப் பங்களிப்பை மதிக்கின்றோம். இந்தோனேசியாவிலும்இ இலங்கையிலும் அமெரிக்க இராணுவம் ஆற்றி வரும் பங்களிப்பு எங்களைக் கவர்ந்துள்ளது.
தென்பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நாம் செயற்படுவோமா என்பதை எதிர்காலத்தில் நிகழ்பவையே தீர்மானிக்கும்.
இது குறித்து என்ன முடிவு எடுக்கப்படவுள்ளது என்பது எமக்குத் தெரியாது. இந்த விடயத்தில் நாங்கள் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளோம்.
ஆனால்இ நாங்கள் இந்த மனிதாபிமான துயரம் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பதில் அக்கறை கொண்டுள்ளோம்.
தமிழர் பகுதிகளுக்கும் நிவாரண உதவிகள் போய்ச்சேர வேண்டும். இந்தப் பேரழிவுஇ நல்லிணக்கமொன்றை ஏற்படுத்த வேண்டும். இலங்கையிலும்இஅசேயிலும்இதாய்லாந்திலும் கூட இதுவே இடம்பெற வேண்டும். சாதாரண மக்கள் சேர்ந்து செயற்படத் தொடங்கி விட்டார்கள்.
நாங்கள் தென் பகுதிக்கு மாத்திரமே சென்றோம். இதற்குக் காரணம்இ எமது இராணுவம் எவ்வாறு பணியாற்றுகின்றது எனப் பார்ப்பதே. நாங்கள் ஏனைய பகுதிகளுக்கும் செல்ல விரும்புகின்றோம். தமிழர் பகுதிகளுக்கும் செல்ல விரும்புகின்றோம்.
நேரப் பிரச்சினையே எமக்குப் பாரிய பிரச்சினை. இதற்காக மன்னிப்புக் கோருகின்றோம்.
தமிழர் விவகாரத்தை இலங்கை அரசாங்கத்துடன் பேசியுள்ளோம். பல விடயங்களை வலியுறுத்தியுள்ளோம்.
அரசாங்கம் சிறப்பாகச் செயற்படுகின்றது. அவசரப் பணிகளை தாங்கள் சமாளித்து விட்டதாகவும்இ அடுத்த கட்டப் புனர்நிர்மாணப் பணிகளுக்கே எமது உதவி தேவை எனவும் அரசாங்கம் தெரிவித்தது.
தமிழர் பகுதிகளில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அரசாங்கம் தெரிவித்தது. செயலணிகளை அமைத்துள்ளதாக குறிப்பிட்டனர். இது சமாதான முயற்சிகளுக்கு உதவும் எனவும் அரசு தெரிவித்தது.
அரசாங்கம் சிறப்பாக செயற்படுகின்றது. எனினும்இ அவர்களுக்குச் சர்வதேச சமூகத்தின் உதவி தேவை. இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்தோம்.
இது செனட்டிற்கு விபரங்களைத் தெரிவிக்க வாய்ப்பை அளித்துள்ளது. இலங்கைக்கு எதிர்காலத்தில் எவ்வாறு தேவைப்படும் என்பது தெரியாது.
நன்றி:தினக்குரல்