01-13-2005, 02:04 PM
kuruvikal Wrote:சமூகம் இருளுக்குள் இருக்கிறது என்று சமூகத்தில் உள்ள நல்ல பக்கத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால்...அது யதார்த்தம் அல்ல...சமூகத்தில் உள்ள நன்மை தீமை இரண்டையும் காட்டித் தீமைகளை அகற்றக் கோரும் போதே...அடிமட்டச் சிந்தனையாளனும் சிந்திக்க முற்படுவான்...! இல்லாவிட்டால் அவன் நன்மை எது தீமை எது என்று அறிய முடியாமலே தீமையை நன்மையென்று செய்யவும் வாய்ப்பு வந்துவிடும்...! அதுதான் சினிமாவில் காட்டப்படும் தீமைகளை சிலர் கடைப்பிடிக்கக் காரணம்...! அதற்குச் சினிமாவை குறை கூறுவதிலும் பார்க்க...அதைப் புறக்கணிப்பதிலும் பார்க்க...அப்படியான அடிமட்டச் சிந்தனை உள்ள மனிதனுக்கு நன்மை தீமையை பகுத்துக்காட்டி அதன் விளைவுகளை விளக்கி விளிப்புணர்வூட்டுங்கள்...அதுதான் அவசியம்...! சினிமாவும் அதைத்தான் செய்ய முயல்கிறது... நூறு வீதம் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவு...! <!--emo&வணக்கம்,--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இருளில் இருப்பவனுக்கு வேண்டுமாயின் நம்பிக்கை என்னும் ஒளியை காட்டலாம், அதைவிடுத்து ஒளியை அவனுக்கு காட்டி விட்டால் எங்கே அவன் விழித்துவிடுவானோ என அஞ்சி அவனுக்கு இருளயே காட்டுபவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. யாரோ சொல்லி கேள்விப்பட்டதுண்டு. ஒரு மனிதாபிமானமுள்ள வைதியரின் கையில் கத்தி இருந்தால், பல உயிர்கள் காப்பாற்ற படும். அந்த கத்தி வைதியர் போல நடிக்கும் ஒரு கொலைகாரனின் கையில் இருந்தால் அது பல உயிர்களை எடுக்கும் என்பது போல. நல்லவன் கையில் ஊடகம் இருந்தால் அந்தசமூகம் வாழும். அதுவே கெட்டவன் கையில் இருந்தால்......... இந்த உவமை திரை உலகத்துக்கும் பொருந்தும் என நினைக்கின்றேன்.
இன்றய தமிழ்த்திரைத்துறையினர் விழிப்புணர்வு ஊட்டுகின்றார்கள் என்று சொன்னால் யாரும் சிரிக்கமாட்டார்களா? அப்படியே அவை விழிப்புணர்வு கருத்துகளை கூறினாலும், திரை என்னும் போதைக்குள் சிக்குண்ட மனிதன் மீண்டு வர பல காலம் எடுக்கும். போதைக்கு அடிமையானவனிடம், அவனை போதைக்கு அடிமையாகியவனே, போதைக்கு அடிமையாக்கப்பட்டவனுக்கு விழிப்புணர்வு கூற முயலுகின்றேன் என்றால் அது எவ்வள்வு மடமையானது. முதல் திரையுலகம் திருந்த வேண்டும், பிறகு சமூகத்தை திருத்தட்டும்.
அன்புடன்
விதுரன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 