01-12-2005, 01:20 PM
Quote:கணவன் இறந்துவிட்டதற்காய் பூவையும் பொட்டையும் கலைத்து பெண்ணை அமங்கலியாக்குவதாகச் சொல்லி அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது வேதனைகளை கூட்டும் சமூகம் தான் எமது...! பெண் பூப்படைந்துவிட்டாள் என்பதை பரலோகம் எங்கும் அறிவித்து பரதேசி தேடும் சமூகம் தான் எமது...! தலைப்பிள்ளை ஆண் பிள்ளையாக வேண்டும் என்று கோயில்களில் சாமியாரிடத்தில் தவங்கிடக்கும் சமூகம் தான் எமது..! சொந்த மண்ணைவிட்டு தலைதெறிக்க ஓடி அங்கிருந்து பெருமை பேசும் சமூகம் தான் எமது...! உள்ள கழிவுகளை எல்லாம் உள்வாங்கிச் செய்துவிட்டு மற்றச் சமூகங்கள் மீது பழிபோடும் சமூகம் தான் எமது....! இப்படி எமது சமூகம் பற்றிய "சிறப்புகள்" பலவற்றை அடிக்கிக் கொண்டே போகலாம்..! எமது சமூகம் திருந்த நிறைய இருக்கிறது...சினிமா திருந்த முதல்...எனவே சினிமாவைப் பார்த்து திருந்து என்று கேட்கும் அருகதை எமக்கு உண்டா என்பதே இப்போ கேள்விக் குறிதான்...!
இந்தக்காலத்தில விதவைகள் வெள்ளைச்சாறி.. கட்டுறது குறைவு என்றதை கவனத்தில எடுஞ்கள்.. இந்த பிரச்சனை இன்னும் தமிழக்கதிதில தான் அதிகமாய் இருக்கிறது.. உண்மையை சொன்னால் இந்த வெள்ளைச்சாறி எதற்காக கட்டினார்கள் என்றால்.. அந்தப்பெண் விதவை.. என்பதை மற்றவர்களிற்கு சொல்லத்தான்.. காரணம்.. அவள் விதவை என்று தெரிந்து அவளை இன்னொரு ஆடவன்.. மணக்கலாம்.. அவ்லது.. அந்தப்பெண் மீதான தவறான பார்வைகளை விலக்கலாம் என்று.. அதனைப்பெண்கள்.. பெரிதும் விரும்பாததனால்... அது இப்ப குறைந்து கொண்டு வருகிறது..?? ஏன் சினிமா.. இப்படி பட்ட விடயங்களை நல்ல விதமாய்.. சகு}கத்திற்கு சொல்லக்கு}டாது..??
பெண் வயதடைந்த விடயத்தை நம்மாக்கள்.. நாலு பேருக்கு சொல்லிச்செய்தாங்க.. காரணம் என்ன..?? அந்தக்காலத்தில பெண்கள் வெளியில போறது குறைவு அதனால்.. அந்தப்பெண் வயதடைந்து திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள் என்பதை சுற்றத்தாருக்கு தெரிவிப்பதற்காய்.. அதனை செய்தார்கள்.. ஆனால் இப்ப நிலைமை மாறிட்டுது.. பெண்கள் படிக்க வேலைக்கு அங்க இங்க என்று போறாங்க.. இப்ப அந்த முறைமைகளும்.. குடிய பாகம் அருகிக் கொண்டு வருகிறது.. ஆனால்.. தமிழகத்தில சில கிராமங்களில இன்னும் இந்த முறை.. முற்று முழுதாக.. அப்படியே இருக்கு.. அவர்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்திற மாதிரி.. மக்களை இலகுவில சென்றடையக்கு}டிய ஊடகமான சினிமா ஏன் இதை சனத்திற்கு சொல்லக் கு}டாது.. இப்ப பாருங்க.. சேரனின் பாரதி கண்ணாம்மா படம். என்ன அருமையா.. சாதியை வைச்சு சொல்லியிருந்தார்.. ஒரு விழிப்புணர்வாய்.. எடுத்திருந்தார்.. எப்படி ஓடிச்சு.. இன்னும் பலபேர் அந்தப்படத்தை மறக்கலங்க.. இப்படி ஏன் சமு}கத்தில இருக்கிற... குறைகளை நிறைகளை படமாய் எடுக்க கு}டாது...???
இன்னொரு படம் மின்னலே படத்தில பொம்பே யெசிறி பாடிய வசிகரா பாட்டு அந்தப்பாட்டை தனியா கேளுங்க.. ஒரு காதலியோ..?? ஒரு மனைவியோ.. தன்ர துணைவனை காதலனைப்பற்றி.. வைத்திருக்கும்.. எதிர்பார்ப்பை எண்ணத்தை.. குசியில வாற பாடல் மாதிரி.. அசிங்கமாய்.. சொல்லாமல்.. அழகாய்.. மென்மையாய்.. சொல்லியிருக்கு... ஆனால் பாடல் காட்சிகளை.. பார்க்கும் போது.. அதில எப்படி சொல்லியிருந்தாங்க..?? நல்லாவா.. இருந்திச்சு.. ஒருக்கா அந்தபாடலைப்பாத்த.. மறுபடி பாக்கவே மாட்டாங்க.. அந்த நிலையில எடுத்திருக்கு..
Quote:உண்மையில் தவறைத் தவிர்க்க விரும்பினால்...சுட்டிக்காட்டப்படும் தவறை இனங்கண்டு...தவறைப் தவிருங்கள்..அதற்காக...சினிமாவை முழுதாகப் புறக்கணிக்கச் சொல்லவதில் என்ன நியாயம் இருக்க முடியும்...!இப்ப நாங்க யாருமே.. சினிமாவை புறக்கணிக்கச்சொல்லி சொல்லவே இல்லை.. சகலரும் பாக்கக் கு}டிய மாதிரி.. கலையம்சத்துடன்.. சினிமாவை சினிமாவா.. ஏன் அவர்கள் தர முயற்சியாவது செய்யக்கு}டாது என்று கேக்கிறம்..
Quote:கலாசாரச் சீரழிவுக்கு நாமும் எமது சிந்தனைகளும் அது சார்ந்தெழும் நடத்தைகளும் தான் காரணமே தவிர சினிமாவில் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை...! இது பரீட்சையில் பெயிலாகிவிட்டு உடனயே ஆசிரியரில் குறை சொல்வதற்கு ஒப்பானதாகவே தென்படுகிறது...!மேலையே நாங்க சொல்லியிருக்கம்.. சினிமா மட்டும் தான்.. கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்று நாங்க கு}றவில்லை.. அது முக்கிய காரணியாய் இருக்கிறது என்று...?? இப்ப பாருங்க.. ஒரு விடயத்தை.. சும்மா வாயால சொல்லுறதை விட.. அதை செயல் முறையில.. செய்யும் போது எப்படி மற்றவர்களால் உடனை அதைப்புரிந்து கொள்ள முடிகிறது.. அப்படி தாங்க சினிமா..?? நாட்டுக்கு}த்து தெருக்கு}த்து.. வில்லுப்பாட்டு.. இப்படி என்று.. சமு}கத்திற்கு தகவலை சொல்லுறதுக்காக உருவாக்கப்பட்ட கலைகளின் வளர்ச்சியின்.. நிலையே சினிமா.. அதை சரியாய் பயன்படுத்தச்சொல்லிச்சொல்லுறம்.. நாடகங்கள் மு}லம்.. அபினயங்கள் மு}லம் சொல்லப்பட்ட கருத்தை கவர்ச்சியின் மு}லம் சொல்ல வேணும் என்று நினைத்தால்.. என்னவென்று சொல்வது..??? குறைந்த பட்சம் இவற்றைக்குறைக்கலாம் தானே..???
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

