01-11-2005, 10:11 PM
Quote:பாடசாலைகளில் பெண்கள் பாடசாலையில் இருந்து கொஞ்சப் பேர சாறி கட்டிவரச் சொல்லிட்டு ஆண்கள் பாடசாலைகளில் அவை வேட்டியோட இல்லாம ரவுஷர் போட்டுக்கொண்டு சோஷல் நடத்திறதும் உண்டு...
இது எங்கை நடந்தது.. நாங்கள் பாக்கவும் இல்லை கேள்விப்படவும் இல்லை.. நாம் கண்ட சோசல் பாட்டிகளில் எல்லாம்.. நல்லாய் தான் நடந்தது..உண்மையை சொல்லனும் என்றால் நாங்கள்.. ஒரளவுக்கு நம்ம பாடசாலை வாழ்கையில் பெரும் பகுதியை இலங்கையில தான் கழிச்சம்.. ஆனால் நாங்க பாத்தவரை.. ஆண்கள் பெண்கள் என்று தேவை ஏற்படும் போது.. சகஜயமாக தான் கதைப்பார்கள்.. வெளியில கதைக்கிறதற்கு தேவையும் இல்லை சந்தர்ப்பமும் கிடைக்கிறதில்லை.. அதனால் கதைக்கிறதும் கிடையாது.. அப்படி அண்ணாமாரும் அக்காமாரும் போறதைக்கண்டிருக்கம்.. இதில காதலர்கள் விதிவிலக்கு.. அவங்க றோட்டு றோட்டா கதைச்சுக்கொண்டு போவாங்க.. :wink: அதைவிட நாங்க நிறைய இடங்களில் பட்டி மன்றங்கள் பாக்கிறதுக்கு போய் முன்னால இருக்கிறது.. அங்க.. பேசிற ஆண்களும் சரி பெண்களும் சரி.. தோல்வியையும் வெற்றியையும் சமனாய்.. எடுத்து கடைசில கைகுழுக்கி ஒற்றுமையாய் தான் போவங்க.. இதெல்லாம் 3 மணிநேர சோசலிலா வந்தது.. அங்க எப்பவும் ஒற்றுமையாய் சோசலிசமாய் தான் இருக்காங்க.. றோட் றோட்டா கதைச்சுக்கொண்டு போனால் தான் சோசலா..??? இந்தப்பாடசாலைகளில் றாக்கீங் பண்ணுறவங்க.. எல்லாம் கிட்டத்தட்ட.. ஒரு மனநிலை சரியில்லாததுகள் தான்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

