01-11-2005, 09:53 PM
Quote:அதைச் செய்யத் திராணி அற்ற பெண்களும் ஆண்களும் போடும் கூச்சலே சினிமா எதிர்ப்பு பெண்களைக் கேவலம் பண்ணுறாங்க என்பதெல்லாம்..பெண்களை கேவலம் பண்ணுறாங்க என்று தெரிந்தால் பிறகெதற்கு விழுந்தடிக்கிறீங்க சினிமா பார்க்க....!
குருவிகள்.. இப்படி பட்ட படங்களில் வாறதுகளைப்பாத்து அதுகளை பின்பற்றுற நிலைமையிலும் நாங்கள் இல்லை.. அதுகளை பின்பற்ற திராணி அற்ற நிலையிலும் நாங்கள் இல்லை.. நமக்கு தெரியும் நாங்கள் எப்படி எந்த வழியில் போகவேணும் என்று. இப்ப நாங்கள் நாம் அந்த வழியில போக முடியல என்ற ஆதங்கத்திலையோ.. அல்லது போய்விடுவோமோ என்ற பயத்தில பேசவில்லை. நாளை வருகின்ற சந்ததி என்ன..?? இன்றைக்கு இருக்கிறதுகளே.. அன்னம் பாலைக்குடித்து விட்டு தண்ணியைத்தவத்திற மாதிரி விலக்கி விடாமல் அதையே பின்பற்றுகிறார்கள் பின்பற்ற வெளிக்கிடுகிறார்கள். அப்படி பட்ட நிலமையை அழிக்கிறது என்றால். இதை சினிமா எடுக்கிறவை கருத்தில கொள்ள வேணும் என்று தான் கூறுகிறோம்.
சினிமாவை நம்மைப்பொறுத்தவரை பொழுது போக்கு ஊடகமாக தான் நாங்க நினைக்கிறம். அதைப்பாக்கிறதுக்கு விழுந்தடிச்சு திரியவில்லை. நம்மை மாதிரி எல்லாரும் இருப்பாங்களா..??
சினிமா நடிகைக்கு கோவில் கட்டிற அளவுக்கு அதி முட்டாள்கள் வாழ்கிற சழூகம் தான் இது... சைபடர் மான்.. சூப்பர் மான் வந்து காப்பத்துவார்கள் என்று.. பல கூத்தடிச்ச.. சமூகம் தான் இது... அப்படிப்பட்ட சனத்திட்ட.. நல்லதை எடுத்துவிட்டு கெட்டதை விடு என்று சொல்கிறது எந்த அளவிற்கு பிரியோசப்படும் என்றதை நீங்களே புரிந்து கொள்ளுங்க.. சினிமாவிற்கு விளம்பரமாய் தான் கவர்ச்சி போடுறாங்க என்றால்.. அந்த கலைக்கு என்ன மரியாதை.. சொல்லுங்க.. அதில் பாக்க.. வேறை படங்களே எடுக்கலாம் தானே.. இப்ப பாருங்க.. ஆங்கிலப்படங்களில் இந்த காட்சிகள் சாதாரனமாய் இருந்தாலும்.. சில படங்களில் அவங்களே போடுறாங்க.. சின்னப்பிள்ளைகளிற்கு ஏற்ற படம் இல்லை இது என்று... ஆனால் தமிழ்ப்படங்களில.. என்ன நடக்கிறது.. கடவுளே.. அதுக்கு வேறை வக்காலத்தோ.. ??? அப்படி பட்ட கலாரசிகர்களிற்கு வேணும் என்றால்.. காசு தான் முக்கியம் என்று நினைக்கிறவை.. அப்படி செய்யலாம்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

