01-11-2005, 12:43 PM
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்...இந்தச் சுனாமி கண்டு பல ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள பிரித்தானிய மக்களில் குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட தம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்று துடித்ததை பலரும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது...(நாம் இங்கு கருதுவது பிரித்தானியா வாழ் தமிழர்களை அல்ல...!) அந்தளவில் மனித நேயம் என்பது சிங்களவர்கள் தமிழர்களை விட மேற்குலக மக்களிடம் அதிகம் என்பது உண்மை...!
சிறுவர்கள் கூட விடயத்தைச் சொல்ல ஒரு ஏக்கத்துடன் உதவி செய்ய முன்வந்தார்கள் என்றால் அம்மக்களின் உள்ளத்தில் உள்ள உண்மையான மனிதநேயம் கண்டு ஆச்சரியத்துடன் மகிழமுடிந்தது...அந்தளவுக்கு அவர்களுக்கு மனித நேயம் என்பது ஊட்டப்பட்டுள்ளது...!அதனால் தான் உலகம் இன்னும் மனிதரைத் தாங்கிக் கொண்டிருக்கிறது போலும்...! அதேவேளை எம்மவர்களிடம் மனிதாபிமானம் என்பது சிறுகச்சிறுக இறந்து கொண்டிருக்கிறது...!
பகலில் தீண்டத்தகாதவள் எனப்படுபவள் இரவானதும் தீண்டப்படுபவள் ஆகிறாள்.... ஜேசு ஒரு தடவை ஒரு விலைமாதுவுக்கு அடைக்கலம் அளிக்க அதை மக்கள் பரிகசித்தார்களாம்...அப்போ ஜேசு கேட்டாராம்...இவளைத் தீண்டாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா..இருந்தால் என் முன் வாருங்கள் என்று.... எவனுமே அவர் முன் வரவில்லை....!
அதுபோலத்தான்...மனம் முழுதும் அசிங்கங்களை சுமந்து கொண்டு துடக்குகளைச் சுமந்து கொண்டு கோயிலுக்குள் உள்ளவன் வெளியில் மனதால் செயலால் குற்றமற்றவனை உதவிக்கு ஏங்குபவனைப் பார்த்து துடக்கோடு வருகிறாய் என்று சொன்னால் அந்த மனிதப் பிசாசை தெருவில் பிடித்து நிறுத்த வேண்டும்...!
ஏன் கோயில்களில் மடங்கள், பிரமாண்ட வீதிகள், பூங்காக்கள் என்று அமைக்கப்படுகின்றன...மக்கள் மனதார தங்கள் கவலை மறந்து மனதை ஒரு நிலைப்படுத்தி சாந்தம், அமைதி பெறத்தான்.....! கோயில்கள் நல்ல காற்றோட்டம் உள்ளனவாக ஏன் அமைக்கப்படுகின்றன...கோயில்களில் ஏன் தீர்த்தக் கேணிகள் அமைக்கப்படுகின்றன...சிலைகள் சுவாசிக்கவும் குளிப்பதற்கும் அல்ல...பூட்டிக்காவல் வைக்கவும் அல்ல...கவலையோடு மனதாலும் உடலாலும் களைத்து வரும் மனிதன்...அந்தக் கேணியில் குளித்து உடல் ஆற்றி காற்று வாங்கி ஆறுதல் பெறும் ஒரு பொது மையமாகக் கொள்ளத்தான்....ஆனால் கோயில்களில் அதுவா நடக்கிறது...????!
கோயில்கள் தனிமனித அல்லது தனிக் குழுமச் சொத்தல்ல...அவை மனித நேயத்தையும்... மனிதனுக்கு மனிதன் உதவும் மனப்பக்குவத்தையும்... ஒருவருக்குள் ஒருவர் நம்பிக்கைகளை வளர்க்கவும்... மனச்சாந்தி... துன்ப விடுதலைக்கு என்று வருவோருக்கு அடைக்கலம் அளிக்கும் இடங்களாகவும் செயற்படவும் தான் ஊர் தோறும் அமைக்கப்படுகின்றன...!
உண்டியல் வைப்பது பணம் சம்பாதிக்க அல்ல...பசியென்று வருவோனுக்கு அன்னமிட்டு மகிழ்வித்து பசியாற்றி இளைப்பாற அனுமதிக்க....! ஏன் கோயில்களுக்கு வர்ணம் அடிப்பது...??! அவற்றை இலகு அடையாளப்படுத்தவும் கண்கள் வர்ணங்கள் கண்டு லயித்து மனம் அமைதி கொள்ளவும் தான்....! ஏன் பூங்காக்கள் அமைப்பது இயற்கையில் மலரும் மலர்களின் நறுமணங்களை உள்வாங்க...நல்ல காற்றோட்டம் பெற... மனம் அதன்பால் இட்டுச்செல்லப்பட மனதோடு இருக்கும் கவலைகள் மறக்கப்பட...மனம் அமைதி பெற்று..ஓய்வுக்கு நிர்ப்பந்திக்கப்படத்தான்...!
கோயில்களில் சிலைக்கள் எதற்கு கண்களை தூர நோக்கப்பண்ணி ஓய்வு கொடுக்கத்தான்.. அமைதி தரும் காட்சிகள் எதற்கு...தன்னை மறந்து கவலைகள் மறந்து லயித்திருக்கத்தான்...தீபம் எதற்கு...சுடரோடு அது தரும் பசும்பொன் ஒளியோடு கண்கள் ஒருமித்திருக்கத்தான்....!
மெல்லிய ஒலி அலைகளைத் தாங்கி வரும் மணிகளும் மந்திரங்களும் எதற்கு...மன அலைகளோடு அவையும் பரிவுற ஒரு அமைதி பெறப்படத்தான்... கொழும்பில் பொன்னம்பலவானேஸ்ரவர் கோயிலுக்கு சாதாரண நாட்களில் சென்று வாருங்கள்... இவை அனைத்தையும் ஒருமிக்க நோக்க முடியும்...அந்தளவு நெருக்கடிகள் உள்ள கொழும்பு போன்ற ஒரு நகரில்....அருமையாக மன அமைதி தேட வேண்டும் என்றால்...அதுதான் இடம்...! அதுதான் கோயில்...அதுதான் ஆகம நெறிப்படி ஆன்மா ஆறுதல் அடைய அமைக்கப்பட்ட ஆலயம்...மொத்தத்தில் கோயில்கள் என்பது மனித மன இளைப்பாறலுக்காக மெஞ்ஞான, விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்படுகின்ற இடங்கள்...!
பொதுமக்கள் குடும்பக் கதை கதைக்கவும் ஊர்க்ககதை கதைக்கவும் பூச்சாரிகள் கூச்சலிடவும் நிர்வாகிகள் காசுக்குச் சண்டையிடவும் குச்சொழுங்கைக்குள் கலையாடவும் சொத்துச் சேர்க்கவும் சீவியம் நடத்தவும் அமைக்கப்படுவனவல்ல கோயில்கள்...இன்று உள்ள அநேகம் கோயில்கள் அவற்றின் தார்ப்பரியம் புரியாதபடியே நிர்மாணிக்கவும்...நிர்வகிக்கவும் படுகின்றன...இன்றுள்ள மக்களுக்கும் கோயில்களின் அவற்றின் நெறிகளின் அர்த்தமும் புரிவதில்லை...மாணவர்கள் சமய பாடத்தை பரீட்சைக்குப் படிக்கிறார்களே ஒழிய சமயம் சொல்லும் வாழ்க்கைக்கான சாரத்தை எடுக்க மறந்துவிடுகிறார்கள்... உண்மையில் பரீட்சையில் கேட்ட வேண்டியது சம்பந்தர் வரலாறல்ல...சமயம் படிக்கும் மாணவன் தான் படித்ததால் பெற்ற சமயம் போதித்த வாழ்வியல் நெறியின் சாரத்தையும் அதன் மூலம் பெற்ற அனுபவங்களையுமே...அதுவா நடக்கிறது....???!
அதுமட்டுமல்ல...சும்மா துடக்கும் மடக்கும் என்று கொண்டு உலகை ஏமாற்றி சிலர் தங்கள் தங்கள் பெருமைகளைக் காட்ட கோயில்களை வியாபார மையங்களாக்கி வருகின்றனர்...!
ஈழத்தில் எதிர்காலத்தில் ஒரு தமிழ் அரசாங்கக் கட்டமைப்பு வருமாயின் அனைத்துக் கோயில்களையும் அரசே கையகப்படுத்தி...அவற்றின் தார்ப்பரியம் காக்கும் வகையில் கோயில்களின் பெறுமதி காக்க வேண்டும்...இன்றேல் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்...கோயில்களின் தார்ப்பரியம் என்ன என்று...மனதால் அவற்றின் மகிமை காண வேண்டும்...பின் அவற்றை அதற்கேற்ற வகையில் நிர்மாணிக்க நிர்வகிக்க நிற்பந்திக்க வேண்டும்...!
மனிதர்கள் மன ஆறுதல் பெறும் இடத்தில் அதைச் செய்ய முடியவில்லை என்றால் பிறகெதற்கு கோயிலுக்குப் பூட்டும் சாவியும் துடக்கும் கழிவும் பூசையும் பெருநாளும்....மனிதர்ளைப் பாகுபடுத்தவும்...காசு சம்பாதிக்கவும்...பணம் உள்ளவர்கள் தங்களை விளம்பரப்படுத்தவுமா...???!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>