01-11-2005, 08:50 AM
வணக்கம் நண்பர்களே,
குரிவிக்ள், நிதர்சன், தமிழினி, கவிதன் உங்களின் தமிழ்த்திரைமீதான அகண்ட பார்வைதனையும், அதனுள்ளே இருக்க கூடிய குறை நிறைகளை உங்கள் பார்வையில் சிறப்பாக சீர்தூக்கி பார்க்கின்ற தன்மைதனை பாராட்டுகின்றேன்.
நான் எனது கருத்தில் திரை என்று குறிப்பிட்டிருந்தேன், இங்கு எனது கருத்தை நான் சின்னத்திரை பெரியதிரை என்று பிரித்து முன் வைக்கவில்லை. பத்திரிகை துறையும் தமிழிற்கு தவறிழைக்கின்றன அதை நான் ஒத்துக்கொள்கின்றேன். இந்ததலைப்பு திரை பற்றியது என்பதனால், நான் முடிந்தவரை திரை பற்றிய கருத்துக்களையே முன்வைக்க விரும்புகின்றேன்.
திரைக்கதையின் கருப்புருளைதான் புரிந்திட முயல்கின்றோம், அனால் முடியவில்லையே. அழகி, சேது, மன்மதன், கையொப்பம் ( ஆட்டோ கிராப்), வீடு, மூன்றாம் பிறை, எதிர்நீச்சல், முள்ளும் மலரும் இந்தவரிசையில் இன்னும் பல படங்கள் கருத்துக்களை தெளிவாகவும், நேர்த்தியாகவும் சொல்லி சென்றன. இதில் மன்மதன் பெண்கள் விடயத்தில் கொஞ்சம் மட்டமான பார்வை இருந்தாலும், கதையின் தேவை கருதி அப்படி நிகள்ந்திருக்கலாம். இங்கே அதனை தப்பென விமர்சிக்க முடியாமல் உள்ளது. ஒரு சமூகத்திற்கு சொல்லவேண்டிய விடயம் அங்கே இருப்பதனால், அத்திரைப்படத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டி உள்ளது.
கதையின் கருத்தில் கூட பல திரைகளில் தெளிவின்மை. ஒரு ஆசிரியர் எப்படி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றாரோ, அந்த ஆசிரியரின் கருத்தை ஒப்பவே மாணவர்களும் உருவாகுவார்கள் என்பதுதான் உண்மை. அதனை போலவே திரைபடத்தை பார்த்தே சிலர் அறியாமையினால் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்கள். தமிழ் திரையால் நன்மை அடைபவர்கள் சிலராக இருந்தாலும், பாதிக்க படுபவர்கள் பலர் அல்லவா? எனவே தமிழ் திரை ஒருநாள் தனது நிலையை புரிந்து மக்களுக்காக செயல்ப்படும் என்ற நம்பிக்கையோடு முடிக்கின்றேன். அதுவரை தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான திரைப்படங்களை புறக்கணிப்போம்.
அன்புடன்
விதுரன்