Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்சினிமாவும் ஈழத் தமிழர்களும் (ஆக்கம் பரணி)
#14
உடை விசயத்தைக் கொண்டு சினிமா காட்டுறது தவறென்று சொல்ல முடியாது...பழைய ஆங்கிலப் படங்களைப் பார்த்தால் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் அழகாக உடல் முழுவதும் மூடி உடை அணிந்து நடித்திருப்பதைக் கணலாம்...அதேபோல் அந்தக் காலச் சமூக நடைமுறைகளும் அப்படித்தான் இருந்ததாம்...!

இன்று மேற்குலக உடை அலங்காரங்கள், தலை அலங்காரங்கள், உடலரங்காரங்கள் எல்லாம் உலகெங்கும் வியாபித்து அதிகாரம் செய்யும் இவ்வேளையில் நாமும் எமது நாகரீக வளர்ச்சி, ஆணுக்குப் பெண் சமன், நடைமுறைக்கு இலகு என்று பல காரணங்கள் சொல்லி எமது பாரம்பரிய கலாசார விழுமியங்கள் பலவற்றைத் தூக்கி எறிந்துவிட்டோம்...அதற்கு முழுக்க முழுக்க சினிமாதான் காரணம் என்று சொல்ல முடியாது...!

முஸ்லீம் பெண்களும் சரி ஆண்களும் சரி அவர்கள் மேற்கில் இருந்தால் என்ன... எத்தனை சினிமா பார்த்தால் என்ன... தங்கள் மதம் போதிக்கும் வழியில் உடை அணிவதையே பெரிதும் ஊக்கிவிக்கின்றனர்...! எவரும் பெரியளவில் அதை மாற்றி அமைக்கவும் முயலவில்லை...! அவர்கள் தங்கள் நாகரிகத்தை தங்களுக்கு உரிய முறையில் காட்டுவதிலேயே குறியாக நிற்கிறார்கள்...( இளைய சந்ததி மாற முற்படுகிறது..மாறியும் வருகிறது அதுவேறு கதை....!) எதையும் கண்டு மரட்சி உற்று ஆதிக்கத்துக்கு உட்படாத வகையில் அவர்களை மதம் கட்டிப்போட்டுள்ளது...அதனால் அவர்களுக்கு பெரிய அளவு தீமை என்றில்லை..மாறாக ஒரு ஒற்றுமையை பேண முடிகிறது...!

ஆனால் எங்கள் கலாசார நடைமுறைகள் சமூக, பொருளியல், வாழ்வியல்,வாழ்விட மாற்றங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாறுவதையும் அதற்கு நாமே நம்மைத் தேற்றி நியாயம் கற்பிப்பதையும் காணலாம்...! நாம் பெண்களின் உடை விசயத்திலோ இல்ல அவர்களின் சுயவிருப்பங்களிலோ செல்வாக்குச் செலுத்துவதை விரும்பவில்லை... அது அவர்களின் சிந்தனையின் பாற்பட்ட விருப்பத்துக்குரிய ஒன்று...!
ஆனால் லண்டனிலோ நியோர்க்கிலோ சேலை கட்டி வாழ முடியாது என்பதை மறுதலிக்கின்றோம்...பல வங்காளதேச முஸ்லீம் பெண்மணிகள் மேற்கில் கூட எந்தக் குளிருக்குள்ளும் சேலை உடுத்தி வருவதைக் கண்டிருக்கின்றோம்...! அதை அவர்கள் தங்கள் சாதாரண நடமுறையாகவே பின்பற்றுகின்றனர்...!

திரைப்படம் சமூகத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் தான் எழுகிறது...அதற்காக ஏதோ திரைப்படம் வந்த பிந்தான் சமூக அநாகரிகங்கள் வந்தன என்று சொல்வது போல் எழுதுவது தவறு...!
பெரும்பாலான திரைப்படங்கள் சமூக அநாகரிகங்களைக் காட்டி அதில் இருந்து விலகி இருக்கக் கோருகின்றனவே தவிர அவை அவற்றைத் தொடரச் சொல்லவில்லை...!

திரைப்படங்கள் கூட சமூக கலாசார மாற்றங்களை உள்வாங்கித்தான் உடை முதற்கொண்டு காட்சிகளின் பின்னணிகள் வரை வடிவமைக்கின்றன...! அதில் இருந்து விலக முடியாதபடி சமூக மாற்றம் அவர்களையும் விஞ்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது...! உங்கள் கருத்துக்களின் படி... வேணும் என்றால் அதற்கு திரைப்படம் மேலதிக விளம்பரம் அளிக்கிறது என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம்...! ஆனால் கலாசாரச் சீரழிவுக்கு சினிமாவே முழுக்க முழுக்கக் காரணம் என்பது தவறு...தங்கிலீஷ் பேசச் சொல்லி சினிமா சொல்லவில்லை...சமூகத்தில் உள்ளதை சினிமா காட்டுகிறது...அவ்வளவும் தான்...!

திரைப்படங்கள் பல.. வர்த்தக நோக்கோடும்.. சில.. சமூக நலன் கருதியும் வரும் பொழுதுபோக்கு அமசங்கள் என்று வரையறுக்கலாம்...! அவை நடைமுறைச் சமூகத்தோடு சென்றுதான் தாங்கள் சொல்லவருவதைச் சொல்ல, காட்ட முடியும்...! உதாரணமாக பல நகைச்சுவைக் காட்சிகளில் அரைகுறை ஆடைகளோடு செல்லும் பெண்களை பையன்கள் கிண்டல் அடிப்பது போல் காட்டுவார்கள்..அதை வெறும் கிட்டலாக பெண்களை இழிவுபடுத்துவதாகப் பார்ப்பதிலும் அதில் கூட ஒரு செய்தி சொல்லப்படுவதை ஏன் கவனிக்கத் தவறுகிறீர்கள்..."பெண்களே நீங்கள் அரைகுறையாகப் போக வேண்டாம் என்று சொல்லவில்லை...போனால் இதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்திற்கு வாருங்கள்" என்று சொல்வதுதான் அந்தச் செய்தி...!

இப்படி அவர்களின் ஒவ்வொரு காட்சிக்கும் அர்த்தம் காட்டலாம்...ஆனால் அந்தளவுக்கு திரைப்படத்தை பார்ப்பவர்கள் அர்த்தம் கொள்ளத் தயாரா என்றால்... இல்லை என்பதே பதில்...! உண்மையில் திரைப்படம் சமூக கலாசார மாற்றத்தை உள்வாங்கி அதை தனது ஊடக மெருமைக்காகச் சேர்க்க நாம் அதை எமது பெருமையாக உள்வாங்கிக் கொண்டு திரைப்படத்தைக் குறை சொல்வதில் பயன் இல்லை...!

நான் எது வந்தாலும் எங்கு வாழ்ந்தாலும் என் நிலையிலின்றும் மாறமாட்டேன்...வருவது வந்துவிட்டுப் போகட்டும்..நல்லதென்றால் உள்வாங்குவேன் தேவையற்றது என்றால் தவறவிடுவேன் என்ற கொள்கை உள்ளவனை திரைப்படம் என்ன எந்த அநாகரிக அலங்கோலங்களும் (எமக்கு அலங்கோலம் மற்றவர்களுக்கு அலங்காரமாகவும் இருக்கக் கூடும்) எம்மில் மாற்றத்துக்கு இடமளிக்காது என்பது உறுதி....! இதற்குச் சாட்சி...சுவாமி விவேகானந்தர் போன்ற சமூகப் புரட்சிகர சிந்தனை உள்ள இளைஞர்கள்...முதியவர்கள் அல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-10-2005, 11:58 AM
[No subject] - by வெண்ணிலா - 01-10-2005, 12:02 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 12:55 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 01:14 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 01:52 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 02:03 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 02:13 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 02:32 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 02:51 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 03:13 PM
[No subject] - by Nitharsan - 01-10-2005, 05:49 PM
[No subject] - by Mathuran - 01-10-2005, 06:00 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 07:21 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 09:50 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 09:53 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 10:50 PM
[No subject] - by kavithan - 01-10-2005, 11:02 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:02 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:08 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:12 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:15 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:18 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:23 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:26 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:42 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 01:08 AM
[No subject] - by Mathuran - 01-11-2005, 02:42 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 03:02 AM
[No subject] - by Nitharsan - 01-11-2005, 03:06 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 04:31 AM
[No subject] - by Mathuran - 01-11-2005, 08:50 AM
[No subject] - by வெண்ணிலா - 01-11-2005, 11:04 AM
[No subject] - by வெண்ணிலா - 01-11-2005, 11:35 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 05:40 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 07:08 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 07:15 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 08:07 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 09:07 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 09:35 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 09:53 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 10:01 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 10:11 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 10:16 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 11:47 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 12:22 AM
[No subject] - by tamilini - 01-12-2005, 12:32 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 01:16 AM
[No subject] - by Mathuran - 01-12-2005, 02:03 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 04:04 AM
[No subject] - by Nitharsan - 01-12-2005, 07:27 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 12:42 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 01:20 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 01:25 PM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 02:29 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:17 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:27 PM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 05:20 PM
[No subject] - by kavithan - 01-12-2005, 10:21 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 10:26 PM
[No subject] - by kavithan - 01-12-2005, 10:33 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 10:36 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 09:21 AM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 12:41 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 01:30 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 02:04 PM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 02:09 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 03:30 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 04:43 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 05:41 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 05:44 PM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 08:07 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 11:57 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 01:39 AM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 03:04 AM
[No subject] - by tamilini - 01-14-2005, 04:04 PM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 04:58 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:03 PM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 05:11 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 05:26 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:53 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 07:11 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 09:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)