01-10-2005, 04:48 PM
அம்பாறையில் அமெரிக்கப் படைகள்
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட அம் பாறை மாவட்டத்தில் அமெரிக்கப் படையினர் தற்போது வந்திறங்கியிருக்கின்றனர். சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் நவீன ரக ஹெலிகொப்ரர்கள் மூலம் இவர்கள் வந்திறங்குகின்றனர் எனவும் - அங்கு அவர்கள் தங்கியிருப்பதற்கு ஏற்ற - வசதிகள் கொண்ட கூடாரங்கள் அமைக்கப் பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும்ää அம்பாறை மாவட்ட மக்களுக்கு அமெரிக்கப் படையினரின் வருகை எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகின்றது என்று அங்குள்ள எமது செய்தியாளர் கூறியிருக் கின்றார்.
அமெரிக்க விமானம் தாங்கிக்கப்பல் மட்டக்களப்பு நாவலடியில் நங்கூரமிட்டுள்ளது - படைகள் தரையிறக்கம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாவலடி கடற்கரையோரமாக அமெரிக்கக் கடற்படையின் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் இன்று நங்கூரமிட்டுள்ளதாகவும் கப்பிலிருந்து பலநூறு அமெரிக்கப் படையினர் நண்பகல் தரையிறங்கியதாகவும் நேரில் கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர்கள் இன்று கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் புனர்நிர்மாண நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் மட்டக்களப்பிலுள்ள பல இரும்புக் கடைகளிலுள்ள அனைத்து இரும்புக் கேடர்களையும் இவர்கள் கொள்வனவு செய்து வாகனங்களில் ஏற்றிச்செல்வதாகவும் நகர்புறச் செய்திகள் தெரிவிக்கின்றது.
நன்றி:நிதர்சனம் (ஆனால் இப்போ சர்சையில் உள்ளது இவ்இணயதளம்)