Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Kofi Annan னின் Srilanka விஜயம்
#1
கொபி அனான் இலங்கைக்கு பறந்து வந்தார்.சிங்கள இடங்களை சுற்றிப்பார்த்தார். சிலரை சந்தித்து பேசினார். இன்று பிற்பகல் இலங்கையை விட்டு பறந்து போய்விட்டார்.ஆனால் அவர் தமிழ் இடங்களை போய்பார்க்கத்தவறிவிட்டார்.
மிக,மிக கவலையான விடயம். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்யமுடியாமல் போனதற்கு அவர் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் "இலங்கை அரசு என்னை போகவிடாமல் தடுத்துள்ளது" என்பதே. இலங்கை அரசு அவரை தடுத்தது என்பது முற்றிலும் உண்மை. அதனை தான் ஏற்று அதனால்தான், தான் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்லவில்லை என்று அவர்தரப்பில் கூறப்படும் விளக்கத்தை நம்புவதற்கு சிறிது கடினமாக உள்ளது.

உண்மையில் கொபி அனான் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்வது என்ற முடிவுடன் இலங்கைக்கு வந்திருந்தால் அவரால் நிச்சயம் அந்த விஜயத்தை மேற்கொண்டிருக்கமுடியும். அவரை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.

அவர் அந்த நோக்குடன் இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை


ஐக்கிய நாடுகள் சபையின் தலமைச்செயலர் (UN Secretary General ) எனும் பதவி சர்வசாதாரண பதவி இல்லை. அந்த பதவியில் எவர் இருந்தாலும் சரி. அவரை உலகத்திற்கே தலைவர் என்றுதான் சொல்லுவார்கள். (ஆனால் தூரதிஷ்டவசமாக, இப்ப இந்த ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளர் நாயகமும் அமெரிக்காவின் கைப்பொம்மைகளாகிவிட்டனர். சுமார் இரண்டுமாதங்களுக்கு முன்னர் இதே கொபி அனானை பதவியில் இருந்து அப்புறப்படுத்த அமெரிக்காவால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை ரஷ்யா,பிரான்ஸ் உட்பட பல நாடுகள் கண்டித்ததன் பின்னர் அமெரிக்கா "கொபி அனானை அப்புறப்படுத்த நாம் முயலவில்லை. இது ஒரு வதந்தி" என்று சொல்லி சமாளித்துவிட்டது)

அப்படிப்பட்ட ஒரு தலைவர் இலங்கை வருகிறார். அவரை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டாம் என்று அரசு தெரிவித்தாலும் இவருக்கு தான் விரும்பிய இடங்களுக்கு சென்று பார்வையிடமுடியும்.அந்த உரிமை அவருக்கு உள்ளது. அது எந்த விதத்திலும் இலங்கையின் இறையான்மையை பாதிக்காது.

காரணம்,
ஒரு இயற்கை அழிவின் பகுதிகளைத்தான் பார்வையிடுவத்ற்க்காக அவர் அங்கு சென்றது. இதில் புலிகளின் அழிவுப்பகுதி அல்லது அரசாங்கத்தின் அழிவுப்பகுதி என்று பிரித்துப்பார்க்க இடமில்லை. அழிவு அழிவுதான்.

இவருடைய நிறுவனத்தைச்சேர்ந்தவர்களும் அங்கு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

இவருடைய தலமையின் கீழ் உள்ள பகிர்வுகளும் அங்கு இடம்பெற உள்ளன.

இப்படி இன்னும் பல.....

உண்மையில் என்ன நடந்திருக்கும்..............?
நான் நினைக்கிறேன் "அனான் அமெரிக்காவை விட்டு புற்ப்பட முன்னர் வெள்ளை மாளிகை இவரின் காதில் ஒரு சங்கை ஊதீஇருப்பார்கள்" அதாவது "அனான் நீ எக்காரணம் கொண்டும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு போகக்கூடாது" என்பதுதான். அந்த மனுசனும் ஓம் என்று சொல்லிவிட்டு, எப்படியப்பா இதை சமாளிக்கப்போகிறோம் என்ற யோசனையில் வந்திருக்கும். இங்கை வந்து பார்த்தால்
அம்மா சந்திரிகாவும் வெள்ளை மாளிகையின் சங்கையே ஊதுகிறாள். மனுசன் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று சொல்லி அம்மா சொன்னதையே காரணமாக இவரும் சொல்லி தப்பிச்சென்றுவிட்டார்.

உதாரணத்திற்கு இன்று George Bush அவர்கள் இலங்கை வருகிறார். தான் பிரபகரனை சந்திக்கப்போகிறேன் என்று சந்திரிகாவிடம் கூறுகிறார். தடுக்கமுடியுமா சந்திரிகாவால்.....ஓரு போதும் முடியாது......முடியவே முடியாது......

நாம் அனானின் விஜயத்தை இப்படி எடுத்துக்கொள்வோமே:
<b>Republic of Srilanka வுக்கு விஜயம் செய்த Kofi Annan
[b]Republic of Tamil Eelam த்திற்கு விஜயம் செய்யமுடியாமல் திரும்பிவிட்டார்.



</b>
Reply


Messages In This Thread
Kofi Annan னின் Srilanka விஜயம் - by Vaanampaadi - 01-09-2005, 08:05 PM
[No subject] - by Nada - 01-09-2005, 08:17 PM
[No subject] - by tamilini - 01-09-2005, 08:24 PM
[No subject] - by sinnappu - 01-09-2005, 08:28 PM
[No subject] - by வியாசன் - 01-09-2005, 08:35 PM
[No subject] - by glad - 01-10-2005, 01:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)