Yarl Forum
Kofi Annan னின் Srilanka விஜயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: Kofi Annan னின் Srilanka விஜயம் (/showthread.php?tid=5861)



Kofi Annan னின் Srilanka விஜயம் - Vaanampaadi - 01-09-2005

கொபி அனான் இலங்கைக்கு பறந்து வந்தார்.சிங்கள இடங்களை சுற்றிப்பார்த்தார். சிலரை சந்தித்து பேசினார். இன்று பிற்பகல் இலங்கையை விட்டு பறந்து போய்விட்டார்.ஆனால் அவர் தமிழ் இடங்களை போய்பார்க்கத்தவறிவிட்டார்.
மிக,மிக கவலையான விடயம். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்யமுடியாமல் போனதற்கு அவர் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் "இலங்கை அரசு என்னை போகவிடாமல் தடுத்துள்ளது" என்பதே. இலங்கை அரசு அவரை தடுத்தது என்பது முற்றிலும் உண்மை. அதனை தான் ஏற்று அதனால்தான், தான் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்லவில்லை என்று அவர்தரப்பில் கூறப்படும் விளக்கத்தை நம்புவதற்கு சிறிது கடினமாக உள்ளது.

உண்மையில் கொபி அனான் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்வது என்ற முடிவுடன் இலங்கைக்கு வந்திருந்தால் அவரால் நிச்சயம் அந்த விஜயத்தை மேற்கொண்டிருக்கமுடியும். அவரை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.

அவர் அந்த நோக்குடன் இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை


ஐக்கிய நாடுகள் சபையின் தலமைச்செயலர் (UN Secretary General ) எனும் பதவி சர்வசாதாரண பதவி இல்லை. அந்த பதவியில் எவர் இருந்தாலும் சரி. அவரை உலகத்திற்கே தலைவர் என்றுதான் சொல்லுவார்கள். (ஆனால் தூரதிஷ்டவசமாக, இப்ப இந்த ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளர் நாயகமும் அமெரிக்காவின் கைப்பொம்மைகளாகிவிட்டனர். சுமார் இரண்டுமாதங்களுக்கு முன்னர் இதே கொபி அனானை பதவியில் இருந்து அப்புறப்படுத்த அமெரிக்காவால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை ரஷ்யா,பிரான்ஸ் உட்பட பல நாடுகள் கண்டித்ததன் பின்னர் அமெரிக்கா "கொபி அனானை அப்புறப்படுத்த நாம் முயலவில்லை. இது ஒரு வதந்தி" என்று சொல்லி சமாளித்துவிட்டது)

அப்படிப்பட்ட ஒரு தலைவர் இலங்கை வருகிறார். அவரை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டாம் என்று அரசு தெரிவித்தாலும் இவருக்கு தான் விரும்பிய இடங்களுக்கு சென்று பார்வையிடமுடியும்.அந்த உரிமை அவருக்கு உள்ளது. அது எந்த விதத்திலும் இலங்கையின் இறையான்மையை பாதிக்காது.

காரணம்,
ஒரு இயற்கை அழிவின் பகுதிகளைத்தான் பார்வையிடுவத்ற்க்காக அவர் அங்கு சென்றது. இதில் புலிகளின் அழிவுப்பகுதி அல்லது அரசாங்கத்தின் அழிவுப்பகுதி என்று பிரித்துப்பார்க்க இடமில்லை. அழிவு அழிவுதான்.

இவருடைய நிறுவனத்தைச்சேர்ந்தவர்களும் அங்கு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

இவருடைய தலமையின் கீழ் உள்ள பகிர்வுகளும் அங்கு இடம்பெற உள்ளன.

இப்படி இன்னும் பல.....

உண்மையில் என்ன நடந்திருக்கும்..............?
நான் நினைக்கிறேன் "அனான் அமெரிக்காவை விட்டு புற்ப்பட முன்னர் வெள்ளை மாளிகை இவரின் காதில் ஒரு சங்கை ஊதீஇருப்பார்கள்" அதாவது "அனான் நீ எக்காரணம் கொண்டும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு போகக்கூடாது" என்பதுதான். அந்த மனுசனும் ஓம் என்று சொல்லிவிட்டு, எப்படியப்பா இதை சமாளிக்கப்போகிறோம் என்ற யோசனையில் வந்திருக்கும். இங்கை வந்து பார்த்தால்
அம்மா சந்திரிகாவும் வெள்ளை மாளிகையின் சங்கையே ஊதுகிறாள். மனுசன் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று சொல்லி அம்மா சொன்னதையே காரணமாக இவரும் சொல்லி தப்பிச்சென்றுவிட்டார்.

உதாரணத்திற்கு இன்று George Bush அவர்கள் இலங்கை வருகிறார். தான் பிரபகரனை சந்திக்கப்போகிறேன் என்று சந்திரிகாவிடம் கூறுகிறார். தடுக்கமுடியுமா சந்திரிகாவால்.....ஓரு போதும் முடியாது......முடியவே முடியாது......

நாம் அனானின் விஜயத்தை இப்படி எடுத்துக்கொள்வோமே:
<b>Republic of Srilanka வுக்கு விஜயம் செய்த Kofi Annan
[b]Republic of Tamil Eelam த்திற்கு விஜயம் செய்யமுடியாமல் திரும்பிவிட்டார்.



</b>


- Nada - 01-09-2005

அவர் எடுப்பார் கைப்பிள்ளையா? . உலகநாடுகளுக்கே தலைவராக இருக்கிறவர் ஒரு அழிவு இடந்த நாட்டுக்கு வந்துவிட்டு ஒருபகுதியை பார்த்துவிட்டு அரசாங்கம் அனுமதிக்கவில்லையென்று சொல்வது சிறுபிள்ளைகளை ஏமாற்றுவதற்காக சொல்வதுபோன்றது.இவருக்கு நாங்கள் எங்களுடைய எதிர்ப்பை காட்டவேண்டியது அவசியம்.


- tamilini - 01-09-2005

வரலாற்றில UN தமிழனுக்கு இழைத்த தவறு இது. மறக்கப்படக்கூடாது யாராலும். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- sinnappu - 01-09-2005

கேட்டீங்களே அனான் வந்தார் போய்டார்
அவருக்கு நேரமில்லையாம் ஆக 48 மணிநேரம்தானாம் இருந்ததாம் அதணாலை தமிழீழபக்கம் போகேல்லையாம் (எங்களுக்கே அம்மான் அட சீ அன்னான் இரும்பு தாறார்)
பிறகு வாறாராம்

இலங்கையில சமாதானம் ஏற்படும் போது வருகை தரஉள்ளாராம்
நான் சொல்லெல்ல அன்னான் சொன்னதா புதினத்தில இருக்கு
அப்ப இப்ப சமாதானம் இல்லை ஒத்துக்கொள்ளுரார்

இருக்கட்டும் அம்மாவை வெருட்டி இல்லை இல்லை புத்தி சொல்லிடு போறார் உதவிகளை சரிய பிறியங்கோ எண்டு அவர் கண்காணிப்பாராம்
நல்லது 12.15 எங்களுக்கு டாடா காட்டிடு போய்டார்

ஆணால் அம்மா என்னவாம் ???????அம்மாவா கொக்கா
வந்தமா பாத்தமா போனமா எண்டு இருக்கனும் சும்மா???...........

நன்றி வணக்கம்
_________________
கண்ணீர் அஞ்சலிகளுடன்
º¢ý¨É¡ º¢ó¾¡Á½¢ º¢ÅÄ¢í¸õ º¢ýÉôÒ


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 01-09-2005

சந்திரிகா குரங்கினுடைய கையில் அப்பம் அவ சரியாகப் பிரிப்பா அப்பு கவலைப்படாதையணை. அவ ஜன்னல் வைத்த ஜாக்கெட்டெல்லாம் போட்டு வலு கவர்ச்சியாக (?) இருந்தா கவனிக்கவில்லையோ?


Re: Kofi Annan னின் Srilanka விஜயம் - ஊமை - 01-09-2005

Vaanampaadi Wrote:ஆனால் தூரதிஷ்டவசமாக, இப்ப இந்த ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளர் நாயகமும் அமெரிக்காவின் கைப்பொம்மைகளாகிவிட்டனர். சுமார் இரண்டுமாதங்களுக்கு முன்னர் இதே கொபி அனானை பதவியில் இருந்து அப்புறப்படுத்த அமெரிக்காவால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை ரஷ்யா,பிரான்ஸ் உட்பட பல நாடுகள் கண்டித்ததன் பின்னர் அமெரிக்கா "கொபி அனானை அப்புறப்படுத்த நாம் முயலவில்லை. இது ஒரு வதந்தி" என்று சொல்லி சமாளித்துவிட்டது
[/b]

ஆம்..... இந்தச் செய்தியை அடுத்து திரு கோபி அன்னான் அவர்கள் பீபீசி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை வழங்கினார். அதிலே அவர்கள் கோபி அன்னானை நோக்கி உங்களை பதவியிலிருந்து தூக்க திரை மறைவில் முயற்சிகள் நடைபெறுகிறதே என வினாவ, அவர் அதற்கு அளித்த பதில்........ "எனக்கு இன்னும் நிறைவேற்றுப் பணிகள் நிறைய உள்ளன இவற்றினை முடித்த பின்னர் தான் நான் ஓய்வு பெறுவேன். அப்படி இனியில்லை என்று யாராவது வெளியேற்ற நினைத்தால் அதன் படி நான் வெளியேறத் தயாராக உள்ளேன்". இவ்வாறு அவர் தனது வகுத்தெரிச்சலைக் கொட்டித்தீர்த்தார் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- glad - 01-10-2005

நிச்சயமாக அனானினால் வன்னிக்குச் சென்றிருக்க முடியும். அமெரிக்க பின்ணனி இத்ற்கும் உண்டு என்பதுதான் எனது கருத்தும்.அதுவும் நன்மைக்கே. தமிழ் ஈழம் தனி தேசம். இனி அது அழைக்கும்போதுதான் ஐ நா செயலர் அங்கு செல்வார். ஆனால் இன்று எனக்கு முன் உள்ள பணி அத்தனை சவால்களையும் முறியடித்து முன்னேறுவதுதான்.
glad