Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூகம்ப எதிரொலி....பூமியின் சுழற்சி வேகம் கூடியது..?!
#8
அக்கினி மூலைப்பகுதி வாயு மண்டலத்தில் மாற்றம்?

இலங்கையின் தென் கிழக்கில் அக்கினி மூலைப்பகுதியில் வாயு மண்டலத்தில் மாற்றம் ஏற்படுவது தொடர்பாக காலநிலை அவதான நிலையம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதென அதன் பிரதி பணிப்பாளர் எஸ்.எம்.காரியவசம் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையிலிருந்து 300 கிலோ மீட்டர் கடல் தொலைவில் இந்த மாற்றம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மாற்றம் நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு அருகாமையில் உணரக்கூடியதாக இருக்குமென பிரதி பணிப்பாளர் மேலும் கூறினார்.

இதேவேளை நாட்டின் தென் கரையோரப் பகுதியிலும் அக்கினி மூலை கடற்பகுதியிலும் தற்போது புயல் காற்று வீசுவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புயல் காற்று இலங்கையின் கரையோரப் பகுதிகளை தாக்குமா என்பதை உறுதிப்படுத்த முடியாதென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த நிலையை இட்டு பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

www.eelampage.com
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 12-30-2004, 01:46 AM
[No subject] - by KULAKADDAN - 12-30-2004, 02:02 AM
[No subject] - by kuruvikal - 12-30-2004, 03:37 AM
[No subject] - by Mathan - 12-30-2004, 04:29 PM
[No subject] - by tamilini - 12-30-2004, 07:43 PM
[No subject] - by KULAKADDAN - 12-30-2004, 10:30 PM
[No subject] - by vasisutha - 01-09-2005, 05:33 PM
[No subject] - by kavithan - 01-09-2005, 06:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)