Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
52 கோடி சொந்தப் பணத்தில் வழங்கும் தமிழர் !
#5
தனது சேவையில் தன்னிறைவுகானும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம்.

06-01-05 வியாழக்கிழமை கனடா தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஊடகங்களுக்கு தெரிவித்த தகவலின்படி இதுவரை கொழும்பிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக அலுவலகமுhடாக கிளிநொச்சியிலுள்ள புனர்வாழ்வுக்கழக தலைமை அலுவலகத்துக்கு 575000 கனடியடாலர்களை அனுப்பிவைத்திருப்பதாகவும் இந்நிதி வடகிழக்கில் வாழும் அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவி;க்காக பாவிக்கப்படுமென அறிவித்துள்ளதோடு சுனாமி நிதிக்காக பிற இனமக்கள் பெரிதும் உதவிவருவதாகவும் கனடா புனர்வாழ்வுகழகம் அறிவித்துள்ளது. டிசெம்பர் 20ம் திகதி 60000 டொலர்கள் வெள்ள நிவாரண நிதியாகவும் டிசெம்பர் 31ம் திகதி 275000 டொலர்களும் ஐனவரி 5ம் திகதி 240000 டொலர்களும் அனுப்பப்பட்டதாக தலைவர் திரு.குணநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் சுணாமி நிதிதிரட்டலில் பாடசாலை மாணவர்களும் தொண்டர்களும் ஆர்வலர்களும் அயராது ஈடுபட்டு வருவதையும் அவதானிக்கமுடிகிறது.

சில ஆலயங்கள் பெருமளவு நிதிப்பங்கை செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசு நிவாரண முன்னெடுப்புகளுக்காக இராணுவ அதிகாரிகளை நியமித்திருப்பது மக்கள்மத்தியில் கனடாவில் பெரிதும் விசனத்தை ஏற்ப்படுததியுள்ளது.

சுனாமி நிதிக்காக ஐனவரி 11ம் திகதிவரை சகலவளிகளிலும்(புனர்வாழ்வுக்கழகம் உட்பட)நிதிப்பங்களிப்பு செய்தவர்கள் அந்த பற்றுச்சீட்டுக்களை இவ்வருட வருமான வரிப்பத்திரங்களோடு இணைத்துக்கொள்ளலாம் என கனேடிய அரசு அறிவித்திருப்பதாகவும் அறியப்படுகிறது.

கனடாவிலிருந்து ஆனந்தன்
நன்றி: நிதர்சனம்
Reply


Messages In This Thread
[No subject] - by anpagam - 01-07-2005, 01:49 AM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:51 AM
[No subject] - by anpagam - 01-07-2005, 02:24 AM
[No subject] - by anpagam - 01-07-2005, 02:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)