Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
52 கோடி சொந்தப் பணத்தில் வழங்கும் தமிழர் !
#1
கடற்கோள் நிவாரணமாக 52 கோடி ரூபா சொந்தப் பணத்தில் வழங்கும் தமிழர்


அமெரிக்காவில் வாழும் இலங்கையரான தொழிலதிபர் ராஜ் ராஜரட்ணம் கடற்கோளினால் பாதிக்கப்பட்ட தமது நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு தனது சொந்தப் பணத்தில் 52 கோடி ரூபாவை ( 50 இலட்சம் அமெரிக்க டொலர்கள்) வழங்கியுள்ளார்.

கடற்கோள் பாதித்த வேளை அவர் இலங்கையில் விடுமுறையைக் கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இலங்கையின் கரையோரத்தில் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்காகவே தனது உதவி செலவிடப்பட வேண்டுமென அக்கறை காட்டியிருக்கும் ராஜ் ராஜரட்ணம் இந்த உதவி செலவிடப்படுகின்ற முறையைப் பொறுத்து மேலும் தனது சொந்தப் பணத்தில் பங்களிப்புச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தனது நண்பர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளிகள் மத்தியில் இலங்கைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கும் அவர் அவசர நிவாரண உதவிகளில் மாத்திரம் அக்கறை காட்டாமல் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால நல்வாழ்வில் அக்கறை கொண்டவராக காணப்படுகின்றார்.

கொழும்புப் பங்குச் சந்தையில் முதலீடுகளைச் செய்யும் ராஜரட்ணத்தின் மூன்று நிதியங்களை மேற்பார்வை செய்யும் கம்பனியான ்நேரிக் கேற்றர் மனேஜ்மென்ற் பிறைவேட் லிமிட்டெட்ீ பணிப்பாளர் சபையின் கூட்டத்தில் கடந்த திங்கட்கிழமை ராஜரட்ணத்தின் நிதியுதவி பயன்படுத்தப்படுவதற்கான வழிவகைகள் குறித்துத் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த சில வருடங்களாக கொழும்புப் பங்குச்சந்தையில் பெருமளவு முதலீடுகளைச் செய்தவர்களில் ஒருவராக ராஜரட்ணம் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினக்குரல்
Reply


Messages In This Thread
52 கோடி சொந்தப் பணத்தில் வழங்கும் தமிழர் ! - by anpagam - 01-07-2005, 01:29 AM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:49 AM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:51 AM
[No subject] - by anpagam - 01-07-2005, 02:24 AM
[No subject] - by anpagam - 01-07-2005, 02:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)