01-07-2005, 01:05 AM
இந்திய அரசின் இலங்கை வெளிவிவகாரக் கொள்கை
மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்
-அ. பரராஜசிங்கம் (அவுஸ்திரேலியா)-
பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கைத் தீவின் தேசிய இனங்களுக்கிடையே உள்ள முரண்பாட்டில் அக்கறை காட்டுவதும் அது எவ்வாறு தீர்க்கவேண்டும் என்பதில் தொடர்ந்து கவனமாயிருப்பதும் இயல்பே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்ää தமிழர் ஒரு போதும் வெளிநாட்டு நலன்களுக்கு எதிராக இயங்கமாட்டார்கள் என்று கூறியபோது இந்திய அரசின் நலனையே பிரதானமாகக் கருத்தில் கொண்டு இக்கருத்தை வெளியிட்டார் என்பதையும் நாம் இங்கு கவனிக்கத்தக்கதாக உள்ளது.
இக்கட்டுரை பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கையைப் பொறுத்த வரை தனது வெளிவிவகாரக் கொள்கையை மீள்பரிசீலிக்க வேண்டும் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.
வெளிவிவகாரக் கொள்கைகள் காலத்துக்குக் காலம் மீள்பரிசீலிக்கப்படுவது என்பது யாவருக்கும் தெரிந்த உண்மையே. இப்படி தொடர்ந்து பரிசீலிக்கப்படுவதன் மூலமாகவே தேசத்தின் நலன்களை எல்லாச் சமயங்களிலும் பேணப்படுகின்றது.
ஒரு கட்டத்தில் தேசநலன்களைப் பாதுகாத்த வெளிவிவகாரக் கொள்கைää காலத்தின் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அமுல் படுத்தப்பட்டால் அது தேச நலன்களுக்கு எதிரான விளைவுகளைக்கூடக் கொண்டுவரலாம்.
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளும் இவ்வாறான மறுபரிசீலனைகளுக்குள் பல சமயங்களில் உட்படுத்தப்பட்டுள்ளது என்பதும் உண்மையே. ஆனால் அவை யதார்த்த நிலைப்பாட்டை பிரதிபலிக்காத சமயங்களில் தோல்வியடைந்துள்ளது என்பதையும் மறுக்கமுடியாது.
அப்படிப்பட்ட வெளிவிவகாரக் கொள்கைத் தோல்வியை ராஜீவ் காந்தி இந்திய இராணுவத்தை இலங்கைத் தீவினில் இறக்கியபோது சந்திக்க நேர்ந்தது.
இந்த துர்ப்பாக்கியமான தவறான கொள்கையின் நேரடி விளைவாக 8000க்கு மேற்ட்ட ஈழத்தமிழர்களின் உயிர்களும் 1ää000க்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினரின் உயிர்களும் பலியாகின.
அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவராகப் பணிபுரிந்த மறைந்த டிக்சிற் இத் தோல்விக்கான காரணங்களைப் பற்றிய தனது கணிப்புகளை Assignment Colombo என்ற புத்தகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்பு வெளியுட்டுள்ளார்.
இந்தியாவின் இராணுவ பிரவேசிப்பு ஒரு தோல்வி என்பதை ஒப்புக்கொண்ட டிக்சிற் தனது கருத்துக்களுக்கான காரணங்களை பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்:
- ஜே.ஆர். ஜயவர்தனாவின் மனதில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற தனது பிழையான எதிர்பார்ப்பு
- தமிழரின் 'நியாயத்தன்மை குறைவு"
- தமிழரையும் புலிகளையும் பிரிக்கலாம் என்ற கருத்தில் உள்ளடங்கிய தவறுதலான கணிப்பு
- இலங்கை அரசின் மிகக்குறுகிய தங்களை மாத்திரமே மையப்படுத்தி இயங்கும் தன்மை -Xenophic mindset
ஆனால் ஒட்டுமொத்தமாக கூறப்போனால்ää டிக்சிற் இத்தோல்வியின் அடிப்படைக் காரணத்தை அடையாளம் காணவில்லை என்றுதான் கூறவேண்டும்.
ஆனால் இதே விடயத்தைப் பற்றி Indias Sri Lanka Fiasco என்ற புத்தகத்தை எழுதிய காடியன் என்பவர் அடிப்படைக் காரணத்தை ஓரளவு அடையாளம் கண்டுள்ளார். இவரின் கண்ணோட்டத்தின் படி புலிகளை சேர்த்துக்கொண்டு போகாத இந்திய-இலங்கை ஒப்பந்தமே இத்தோல்விக்குக் காரணம். மேலும் இந்தியாவின் இந்த ஒருதலைப்பட்சமான (சிங்கள அரசின் சார்பில்) ஈடுபாட்டின் மூலம் இந்தியா இலங்கை அலுவலில் தனது செல்வாக்கைக் கணிசமான அளவிற்கு இழந்து விட்டது என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார்.
சங்கரன் கிருஸ்ணா என்ற பேராசிரியர் (இவர் ஹவாய் பல்கலைக்கழகத்தினக அரசியற்துறைப் பகுதியின் தலைவர்) Indias Role in Sri Lankas Conflict என்ற நூலில் 1990களில் இருந்து இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை இலங்கையின் 'ஒற்றுமையும் பிரதேச ஒருமைப்பட்டையும்" நிலைநிறுத்துவது என்ற அடிப்படையில்தான் இயங்கி வந்துள்ளது மாத்திரமல்ல அதை வெளிப்படையாகவும் கூறிவந்துள்ளார்கள் என்றதை எடுத்துக்காட்டியுள்ளார்.
இதேவேளையில் அடிக்கடி தமிழரின் அபிலாசைகளைப் பூர்த்தி பண்ணக்கூடிய தீர்வை விரும்புவதாகவும் இந்திய அரசு கூறிவந்துள்ளது. ஆனால் அந்த அபிலாசைகள் என்ன என்பதைப்பற்றி விவரிப்பதாகவோ ஆராய்வதாகவோ இல்லை.
எனவே இந்திய அரசின் இந்நிலைப்பாடு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு வெறும் வாய்ப்பேச்சளவில் மதிப்புக் கொடுக்கும் ஒரு செய்கை என்றே கருதவேண்டும்.
என்ன கூறினாலும் இவ்வுணர்வுகளைப் பாவித்துத்தான் இந்திய அரசு தனது வெளிவிவகாரக் கொள்கையை வகுத்து இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் தமிழர் பிரச்சினையில் தமக்கும் கரிசனை இருப்பதாக கூறி ஜே.ஆர். ஜயவர்தனாவினை அடக்க முயன்றது. இது ஒரு சரித்திரபூர்வமான உண்மை.
ஜே.ஆர். ஜயவர்தனாவின் தலைமையின் கீழ் இலங்கை அரசு சீனா பாகிஸ்தான் மேற்குலகு ஆகியற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பிராந்திய வல்லரசான இந்தியாவை புறக்கணிக்கும் வண்ணம் நடந்த விதமே இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருந்தது.
1980களில் இருந்தே ஜே.ஆர். ஜயவர்தன பல காரியங்களில் இந்திய அரசை புறக்கணிக்கும் பாணியில் மாத்திரமல்ல இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசு என்ற நிலைப்பாட்டை மதிக்காதும் நடந்து கொண்டார்.
இதற்கு உதாரணமாக பின்வரும் அலுவல்களில் இலங்கை அரசு இந்திய அரசின் நலன்களுக்கு எதிராக நடந்த விதங்களை சங்கரன் கிருஸ்ணா தனது புத்தகத்தில் எடுத்துக்காட்டியுள்ளார்:
- சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு
- இந்து சமுத்திரத்தை ஒரு சமாதன பிரதேசமாகப் பிரகடனம் செய்தல்
- Voice of America விற்கு ஒலிபரப்பு உரிமைகளை வழங்குவது
- திருகோணமலை துறைமுகத்தின் பாவிப்பு
இப்படிப் பார்க்கையில்ää இந்திய அரசு தமிழ் விடுதலைக் குழுக்களுக்கு ஆயதப்பயிற்சி கொடுத்தது தமிழ் ஈழத்தைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்ல ஆனால் தனது இராஜதந்திர அழுத்தங்களுக்கு உதவியாக இராணுவ அழுத்தங்களையும் இலங்கை அரசு மீது கொண்டுவரவே என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.
இந்திய அரசின் இக்கொள்கை கொழும்பை புதுடில்லியின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது என்பதில் ஒரு ஐயமும் இல்லை. ஆனால் ராஜீவ் காந்தி இதைப் பாவித்து தமிழீழ விடுதலைப்புலிகளை நிராயுதபாணிகள் ஆக்க முயற்சித்த போது தான் இக்கொள்கை பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.
தமிழ்த் தேசியத்தின் யதார்த்த நிலைப்பாட்டையோää பலத்தையோ அறியாமல்ää ஒரு சிலரின் வழிகாட்டலில் ராஜீவ் காந்தி இந்த பிரவேசத்தை மேற்கொண்டு தமிழ் தேசியத்தின் முன்னோடிகளான விடுதலைப்புலிகளை அழிக்க முயன்றதே இந்தப் பெரும் தோல்விக்குக் காரணம்.
நடேசன் சத்தியேந்திரா என்ற ஈழத்தமிழர் The Tamil National Question and the Indo Sri Lanka Peace Accord என்ற நூலில் இந்த தோல்வியின் காரணம்ää 'தமிழ் தேசியத்தினை ஏற்கமுடியாத ஒரு நிலைப்பாடே" என்று கூறியுள்ளார்.
சுமந்திரா போஸ் என்ற எழுத்தாளர் States, Nations, Sovereignty, Sri Lanka, India and the Tamil Eelam Movement என்ற நூலில் தமிழ் தேசியத்தின் அரசியல் சக்தியையும் அத்தேசியத்திற்கு தமிழ் மக்களிடையே உள்ள ஆதரவையும் இந்திய அரசு புரியவில்லை என்று கூறிää இந்திய ஆக்கிரமிப்பிற்குள் ஈழத்தமிழர் பட்ட கசப்பான அநுபவங்கள் இலங்கை அரசின் பயங்கரவாதத்தால் உருவாகிய தமிழ்த்தேசியத்தை மேலும் வலுப்பெறப்பண்ணிவிட்டது என்று முடிக்கின்றார்.
தமிழ் தேசியத்தை கருத்தில் கொள்ளாமல் இலங்கையின் 'ஒற்றுமையும் பிரதேச ஒருமைப்பாட்டையும்" வலியுறுத்திவரும் இந்திய அரசின் தற்போதைய கொள்கைக்கும் இலங்கைத்தீவில் சிங்கள அரசின் சார்பில் பிரவேசித்ததிற்குக் காரணமாக இருந்த கொள்கைக்கும் பெரும் வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆகவே இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைத் தீவில் இந்தக் காலகட்டங்களில் நடந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தமது வெளிவிவகாரக் கொள்கைகளை மறுபரிசீலிக்க வேண்டும்.
அப்படிச் செய்கையில் தமிழ்த் தேசியம் இன்று ஒரு பெரும் சக்தியாக வளர்ந்துள்ளதை உள்வாங்குவதுடன் தற்போது தமிழர்கள் இலங்கை அரசுக்குச் சமனான இராணுவ பலத்துடன் இருக்கிறார்ககள் தமிழ்ப் பிரதேசத்தின் கணிசமான பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் அப்பிரதேசத்தை ஆளும் வல்லமையும் உள்ளவர்கள் என்ற உண்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் இன்று இலங்கைத்தீவில் இரண்டு அரசியல் சக்திகள் இயங்குகின்றன. அதாவது தெற்கில் கொழும்பு வடக்கில் கிளிநொச்சி.
இந்தியாவின் வெளி விவகாரக் கொள்கையானது எவ்வாறு இவ்விரு சக்திகளுக்கும் இடையில் எற்படும் தீர்வு இவ்விரு சக்திகளின் நலன்களைப் பாதுகாக்கும் அதே சமயத்தில் இந்திய நலன்களையும் பேணத்தக்கதாக இருக்க வேண்டும்.
தமிழ்த் தேசத்தின் நிலைப்பாட்டை திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எற்கனவே அறிவித்துவிட்டார்.
நன்றி:தமிழ்நாதம்