Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலகவல்லரசுளுக்கு எச்சரிக்கை !?
#11
[b]ஆயிரம் போதனைகள் திருத்தாத எம்மை அரைமணி நேர அதிர்ச்சியாவது திருத்துமா?

" எங்களுக்கு ஏன் இப்படி நடந்தது?" என்று புரியாது மனமுடைந்து கேட்கும் ஒரு நிலைக்கு நாங்கள் யாவரும் தள்ளப்பட்டுள்ளோம். இயற்கையின் சீற்றம் இலங்கைக்கும் இன்னும் பல நாடுகளுக்கும் இதயத்தைப் பிழிய வைக்கும் விதத்தில் இன்னல்களை விளைவித்துள்ளது. இன்னார் என்று பார்க்காமல் இன மத வயது பிராந்திய வேறுபாடின்றி எல்லோரையும் பாதித்துள்ளது. இதுகாறும் தம்முள் பகைத்துக் கொண்ட பலரையும் பட்சபாதம் காட்டாது வாட்டி எடுத்துள்ளது இயற்கை. அப்படி இருந்தும் இன்னல்களை எதிர்கொள்ளும் போது தற்போது கூட இந்தப் பகை உணர்ச்சியும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இது மனவருத்தத்திற்குரியது.

பொறுமைக்குப் பெயர் போனவள் பூமாதேவி. அவளின் ஒரு சிறிய சிலிர்ப்புக் கூட எங்களை இவ்வளவு வாட்டி எடுத்துள்ளது. இயற்கைக்கு மாறாக எங்கள் நடத்தைகள்ää சிந்தனைகள் நிலைவரங்கள் அமையும் போது எங்களை வழிப்படுத்தவே அன்னையான அவள் தனது பொறுமை நிலையில் இருந்து சற்றுத் தளர்ந்து தண்டிக்கிறாள் என்று கொள்ள வேண்டும். பிறந்த தன் மக்களைத் திருத்தவே அன்னை தன் கருணா நிலையில் இருந்து சற்றுத் தளர்ந்துள்ளாள். குழந்தைகள் நாம் இதைப் புரிந்து கொண்டு வாழப் பழக வேண்டும். இஸ்லாத்தின் சகோதரத்துவமும்ää கிறிஸ்தவத்தின் பிறர் நலன் கருதுங் கொடையுணர்ச்சியும் பௌத்தத்தின் ஜீவகாருண்ய மனோநிலையும் இந்து மதத்தின் தன்னலங்கருதா கடமையுணர்வும் இனியாவது எங்களுள் உறைந்து நின்று உருமாற்ற வேண்டும்.

நாங்கள் இதுகாறும் எமக்கென்றே வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டோம். பிறருக்கென வாழ்வதே மதம் என்றால்ää மதங்கள் கூட தனிப்பட்ட நலன்களை வலியுறுத்தியே போதிக்கப்பட்டு வந்துள்ளன. நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம் என்று கருதாமல்ää வாழ்ந்த எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஆயிரம் போதனைகளால் அறிவுறுத்த முடியாதவற்றை அரைமணி நேரத்தில் அறிய வைத்துவிட்டாள் அன்னை. இனியாவது அன்பைப் பாராட்டி வாழ வழி அமைத்துத் தந்துள்ளாள்.

ஆனால் அதற்கிடையில் எத்தனை கொடூரங்கள்ää அவலங்கள் பறிகொடுப்புகள்! அன்னையின் சீற்றம் குல நடுங்க வைத்துள்ளது. மேலும் அனர்த்தங்கள் நடைபெறாது என்று உத்தரவாதம் கொடுக்கும் நிலையில் யாரும் இல்லை. வரவிருக்கும் நோய்கள் இன்னும் எத்தனை பேர்களைப் பலியெடுப்பன என்று ஆருடம் கூற யாரும் இல்லை. எம்மால் முடிந்ததைச் செய்வதே இந்நேரக் கட்டாயம்.

இறைவன் இருக்கின்றானா என்று பலர் கேட்கும் கட்டத்தில் இருக்கின்றார்கள் அவர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்? சிவனையே தன் இசையால் மயக்கிய இராவணன் கூட "இன்று போய் நாளை வா" என்றதைக் கேட்டதுந்தான் தனக்கு என்ன நடந்தது ஏன் நடந்தது என்று எண்ணத் தலைப்படுகிறான். கேட்டதை எல்லாம் அள்ளிக் கொடுத்த இறைவன் தான் இராவணனின் இறுமாப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கிறான் இராமசந்திர மூர்த்தியூடாக.

இன்பத்தையும் துன்பத்தையும் தருபவன் இறைவன் தான். அதே நேரத்தில் எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்வதைத் தடுக்க முடியாது. அழுதாலும் தொழுதாலும் ஓரணுவும் மாறுமோ தெரியாது. ஆனால்ää விதிவேறு இறைவன் வினைவேறல்ல. இன்றைய நாளை மட்டுந் தான் நாங்கள் பார்க்கிறோம். நேற்றைய எங்கள் வாழ்க்கையையும் நாளைய இனிவரும் வாழ்க்கையையும் பார்த்துத்தான் இறைவன் தன் தீர்ப்பை எழுதி வைத்துள்ளான்.

அழிவுகளையும் அல்லல்களையும் நோக்கியபின் அகம்பாவம் தேவைதானா என்று கேட்கத் தோன்றுகிறது. நேற்றைய நடத்தைகளும் நாளைய விளைவுகளும் மனத் திரையில் ஊசலாடுகின்றன. எங்கள் நோக்குகளைச் சீர்படுத்திக் கொள்ள இப்பேர்ப்பட்ட இன்னல்கள் தேவையாக அமைகின்றன. எங்களை விட்டு வைத்ததற்காக இறைவனுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். பிராயச் சித்தம் செய்வதெனில் இன்றைய காலகட்டத்தில் அல்லற்படும் அகதிகளுக்கு அயலவர்களுக்கு எம்மால் ஆன உதவிகளைச் செய்வதில்தான் எங்கள் கடமை உறைந்து கிடக்கின்றது. மதங்களும் எங்கள் பாரம்பரிய இலக்கியங்களும் இதைத்தான் எம்மிடம் எதிர்பார்க்கின்றன. அறிவால் அலசப்படும் அத்தனை இலக்கியங்களும் நடைமுறைக்குப் பயன்படுத்துவதாகில் அவை எங்கள் அன்பை மேலோங்கச் செய்ய வேண்டும். அன்பு ஆதரவான வார்த்தைகளால் கூட வெளிவரலாம். பகை களைதலே அன்பைப் பரப்ப உதவி செய்யும். அழிவிலிருந்து ஆக்கத்தை ஏற்படுத்துவதும் அன்பை மேலோங்கச் செய்வதுமே எங்கள் இனிவரும் பணியாக மலர வேண்டும்.

இன்னல் உற்றவர்களின் நலன் கருதி இதய சுத்தியுடன் இடர் ஒழிப்புப் பணிகளில் ஈடுபடுவதே எங்கள் சமயப் பயிற்சியின் சான்றாக அமையும். அறிவு இலக்கியங்களின் அதி முக்கிய சாரமாய் விளங்கும்.

எந்த வேற்றுமையும் பாராட்டாதுää மக்களின் இடர் அகற்றும் பணிகளில் எங்களை இக்கால கட்டத்தில் அர்ப்பணிப்போமாக!

ஒன்றுபடுதல் மானுட பண்பு. மனித இயலின் பரந்த நோக்கும் அதுவே. ஆகவேää பகைமையை வளர்க்க வழிகோலாது இன வேற்றுமைää சிந்தனைகளுக்குப் பலிக்கடாக்கள் ஆகாது மனித நேயத்திற்கு வித்திடுவோமாக! இன்னல்களின் இடர்பாடுகளில் இருந்து இதய சுத்தியுடைய ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க இந்நாட்டின் சகலரும் பாடுபடுவோமாக! இனியாவதுää இயற்கையை ஒன்றி வாழப்பழகுவோமாக! வேற்றுமையை வேரறுத்து ஒற்றுமையைப் பேணுவதே இயற்கை நிலை. இயற்கை அன்னையும் பிரிந்து கிடக்கும் தன் பிள்ளைகள் சேர்ந்து வாழ வேண்டும் என்றே எதிர்பார்க்கிறாள்.

இறைவா! எங்கள் பணிகளை நீயே முன்னின்று நடத்துவாயாக! அன்பினில் எங்கள் அனைவரையும் சங்கமப்படுத்துவாயாக!

நன்றி:நிதர்சனம்
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 03-25-2004, 03:04 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 03:52 PM
[No subject] - by anpagam - 03-25-2004, 11:44 PM
[No subject] - by Mathan - 03-26-2004, 12:12 AM
[No subject] - by anpagam - 03-26-2004, 12:17 AM
[No subject] - by Mathan - 03-26-2004, 12:30 AM
[No subject] - by anpagam - 03-26-2004, 12:34 AM
[No subject] - by Mathan - 03-26-2004, 12:41 AM
[No subject] - by anpagam - 05-05-2004, 09:15 AM
[No subject] - by anpagam - 01-06-2005, 01:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)