01-05-2005, 05:43 PM
பாரிய அளவில் தொடர்ந்து குவிக்கப்படும் அமெரிக்க படை!
அமெரிக்காவின் ய10.எஸ்.எஸ்.ரர்மோர் என்ற யுத்த கப்பல் இந்த வார இறுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1987 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கப்பல் 186 மீற்றர் நீளமானது விமானங்கள் தரையிறங்கக்கூடிய இரண்டு இறங்கு தளங்கள் உள்ள இந்த கப்பல் மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பலில் 20 உலங்குவானூர்த்திகள் மற்றும் கனரக வாகனங்கள் என்பன எடுத்துவரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு 20 எம்.எம்வி. ரக சுடுகலன்கள் மற்றும் 25 எம்.எம் பீரங்கிகள் இரண்டு 50 கலிபர் தானியங்கி சுடுகலன்கள் ஆறு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு என்பன பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ள பிளக் ஹொக் வகை உலங்குவானூர்திகள் நேற்று கட்டுநாயக்க பகுதியில் பரீட்சார்த்த பறப்பினை மேற்கொண்டுள்ளன.
நேற்று முன்தினம் 42 அமெரிக்க படையினரும் நேற்று 30 படையினரும் இலங்கைக்கு விமானங்கள் மூலம் வருகை தந்துள்ளனர். இவர்கள் கட்டுநாயக்க பகுதியில் தற்காலிக முகாம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் இந்த முகாமின் ஊடாகவே மீட்பு பணிகள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளில் அமெரிக்க துருப்பினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது.
நன்றி:புதினம்