08-08-2003, 12:50 PM
யாழ். பொலீஸ் நிலையத்தில் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் குடும்பப்பிணக்குகள் தொடர்பான முறைப்பாடு கள் அதிகரித்திருப்பதாக பொலீஸ் நிலையப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.கடந்த 7 மாதகாலப் பகுதியில் மட்டும் 120 இற்குமேற்பட்ட இத்தகைய முறைப்பாடுகள் யாழ். பொலீஸ் நிலையத்தில் பதிவாகியிருக்கின்றன.
இந்தத் தொகை ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தைவிட மிகவும் அதிகமாகும் என்றும் - பொலீஸார் தெரிவிக்கின்றனர்.இந்தகைய முறைப்பாடுகளில் குறிப்பிட்ட சிலவற்றை தாம் சமரசம் செய்துவைத்திருந்தாலும் பல பிணக்குகள் குறித்து நீதிமன்றம்வரை செல்லவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் பொலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குடும்பப் பிணக்குகள் விடயத்தில் சம்பந்தப்பட்ட கணவன், மனைவி இருவரினதும் விருப்பங்களுக்கு மாறாக தம்மால் எதனையும் செய்யமுடியாதிருப்பதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் எனப் பலர் கண்ணீரும் கம்பலையு மாகப் பொலீஸ் நிலையத்துக்கு வருகின்றனர்.காதலித்து திருமணம் செய்துகொள்வோர் பெரும்பாலும் உரியமுறையில் விவாகப்பதிவுகளை மேற்கொள்ளத் தவறி விடுகின்றனர்.
அத்துடன், காதலிக்கும் பெண்கள் சிலர் திருமணத்துக்கு முன்னரே காதலனை நம்பி தம்மை இழந்துவிடுகின்ற நிலை மையும் காணப்படுகின்றது.
இதனால்தான் இத்தகைய நிலை பெரிதும் ஏற்படுகின்றது.
- இவ்வாறு யாழ். பொலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.