01-05-2005, 04:02 PM
உயிரை தவிர நீங்கள் இழந்த அனைத்தையும் தருவேன் - விவேக் ஓபராய்
ஆணழகன், ஐஸ்வர்யாராயின் காதலர்... இது தவிர விவேக் ஓபராயை பற்றி என்ன தெரியும்?
சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் தேவனாம்பட்டின கிராம மக்களுக்கு விவேக் ஓபராய்தான் கடவுள், காப்பான் எல்லாம்.
தேவனாம்பட்டினம் பகுதியில் ரிஷிகேஷை சேர்ந்த சித்தானந்தா சரஸ்வதி சுவாமிகள் தனது தொண்டு நிறுவனம் மூலம் மீட்பு பணிகளை செய்து வருகிறார்.
இவருடன் இளம் நடிகர் விவேக் ஓபராயும் இணைந்து உதவிகள் செய்கிறார். கடந்த 31-ம் தேதி இங்கு வந்த ஓபராயின் முழுநேர வேலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், உதவிகளும் செய்வதுதான். எல்லோரையும் போல பணம் கொடுப்பதுடன் பணி முடிந்ததென்று கைகழுவ இவருக்கு மனமில்லை. அதனால் தன் தாயாரான யசோதரா பெயரில் இயங்கும் அறக்கட்டளை மூலம் மொத்த கிராமத்தையும் தத்தெடுத்திருக்கிறார்.
"உயிரை தவிர நீங்கள் எதையெல்லாம் இழந்தீர்களோ அவை அனைத்தையும் உங்களுக்கு நான் தருவேன்"
விவேக் ஓபராயின் இந்த வார்த்தைகள் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது. தனது வாக்கை காப்பாற்ற சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் விவேக் ஓபராய்.
முதல்கட்டமாக வீடு இழந்தவர்களுக்காக 600 வீடுகள் கட்டிக்கொடுக்கயிருக்கிறார். அதுவரை மக்கள் வசிக்க 170 குடில்கள் தலா 4,500 ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் சித்தானந்தா சரஸ்வதியுடன் விவேக் ஓபராயும் கலந்துகொண்டார். முன்னதாக பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாலு திசைகளிலும் நின்று பிரார்த்தனை நடத்தினர்.
திரையில் கூட தாங்கள் பார்த்தறியாத ஒரு நடிகர், தங்களுக்காக இத்தனை தூரம் உதவ முன் வந்தது தேவனாம்பட்டினம் மக்களை வெகுவாக நெகிழச் செய்திருக்கிறது.
அழிவுக்கு நடுவில் சுனாமி கண்டெடுத்த ஆரமுது விவேக் ஓபராய்!
ஐஸ்வர்யாராய்க்கு முகம் அழகு. அவர் காதலருக்கு மனமும் அழகு
சினிசவுத்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>