Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
#1
ஆத்;திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக...
கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா?

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். பிறகென்ன மாரடைப்பு தான். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல் களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தை கட்டு;ப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சுழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதிலி செய்கைகள் காரணமாக உண்டாகிறது. கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகாpத்தல்;, எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றெhன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.

கோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ-

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.

7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்

9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.

11. கோபம் வருகிறது என்று தொpந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.

14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.

15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.

16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
Reply


Messages In This Thread
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? - by ஊமை - 01-05-2005, 06:40 AM
[No subject] - by tamilini - 01-05-2005, 03:09 PM
[No subject] - by KULAKADDAN - 01-05-2005, 03:16 PM
[No subject] - by kuruvikal - 01-05-2005, 03:17 PM
[No subject] - by tamilini - 01-05-2005, 03:22 PM
[No subject] - by kuruvikal - 01-05-2005, 03:31 PM
[No subject] - by tamilini - 01-05-2005, 03:40 PM
[No subject] - by kuruvikal - 01-05-2005, 03:51 PM
[No subject] - by tamilini - 01-05-2005, 07:12 PM
[No subject] - by aathipan - 01-05-2005, 08:10 PM
[No subject] - by tamilini - 01-06-2005, 02:30 PM
[No subject] - by kavithan - 01-07-2005, 08:29 AM
[No subject] - by tamilini - 01-07-2005, 03:53 PM
[No subject] - by stalin - 04-19-2005, 12:28 PM
[No subject] - by sinnappu - 04-21-2005, 08:32 AM
[No subject] - by stalin - 04-21-2005, 02:59 PM
[No subject] - by Magaathma - 05-01-2005, 03:08 PM
[No subject] - by kuruvikal - 05-01-2005, 04:22 PM
[No subject] - by Magaathma - 05-01-2005, 07:48 PM
[No subject] - by stalin - 05-01-2005, 11:05 PM
[No subject] - by Magaathma - 05-02-2005, 04:09 PM
[No subject] - by stalin - 05-02-2005, 05:56 PM
[No subject] - by Magaathma - 05-02-2005, 07:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)