Yarl Forum
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? (/showthread.php?tid=5941)

Pages: 1 2


கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? - ஊமை - 01-05-2005

ஆத்;திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக...
கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா?

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். பிறகென்ன மாரடைப்பு தான். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல் களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தை கட்டு;ப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சுழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதிலி செய்கைகள் காரணமாக உண்டாகிறது. கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகாpத்தல்;, எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றெhன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.

கோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ-

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.

7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்

9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.

11. கோபம் வருகிறது என்று தொpந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.

14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.

15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.

16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.


- tamilini - 01-05-2005

இதில பல விடங்யங்கள் செய்கிறவையை நான் கண்டிருக்கன்.. இன்னொரு வழி இருக்கு.. ஏதாவது பொருளை போட்டு உடையுங்க.. அது உடைஞ்ச உடனை ஐயோ உடைச்சிட்டமே என்று எண்ணம் வரும்.. கோவம் காணாமல் போகும்.. அடிக்கடி கோவப்படுற ஆள் நீங்கள் என்றால் வீட்டில எந்தப்பொருளும் கிடவாது அதை கருத்தில் கொள்ளுங்கோ..?ஃ தகவலுக்கு நன்றி ஊமை


- KULAKADDAN - 01-05-2005

tamilini Wrote:இதில பல விடங்யங்கள் செய்கிறவையை நான் கண்டிருக்கன்.. இன்னொரு வழி இருக்கு.. ஏதாவது பொருளை போட்டு உடையுங்க.. அது உடைஞ்ச உடனை ஐயோ உடைச்சிட்டமே என்று எண்ணம் வரும்.. கோவம் காணாமல் போகும்.. அடிக்கடி கோவப்படுற ஆள் நீங்கள் என்றால் வீட்டில எந்தப்பொருளும் கிடவாது அதை கருத்தில் கொள்ளுங்கோ..?ஃ
Idea Idea


- kuruvikal - 01-05-2005

[quote=tamilini]இதில பல விடங்யங்கள் செய்கிறவையை நான் கண்டிருக்கன்.. இன்னொரு வழி இருக்கு.. ஏதாவது பொருளை போட்டு உடையுங்க..

அனுபவம் போல...அதுபோக அந்தப் பொருள் இன்னொருவருக்கு விருப்பமானதாக இருந்துச்சின்னா...அது உடைய மற்றவருக்கு கோபம் வராதோ... பெண்கள் அப்படித்தான் போல..குருவிகளே கண்டிருக்குதுகள் கணவனோட சண்டை என்றா ஸ்கூலில ரீச்சர்மார் கொதிச்சுக் கொண்டு நிப்பினம்....பிள்ளைகளைத் திட்டுவினம்....இத்தனைக்கும் அந்தப் பிஞ்சு மனங்கள் ஏதும் அறியாமல் முழிக்குங்கள்...உதுகளெல்லம் ரீச்சர்...குருவிகள் அதிபரானால் உதுகள முதலில வீட்ட அனுப்புக்கள்...!!!

உங்க கோபம் தனிய ஏன் இன்னொருவருக்கு கோபம் உண்டு பண்ணுறியள்...உதுக்கு இலகுவான வழி... கோபம் வரும் சூழல் தோன்றுகிறது என்ற உடன.. ஒதுங்கிக் கொள்வது அல்லது மெளனமாவது தான்....! Idea :roll:


- tamilini - 01-05-2005

எப்படி ஒதுங்க முடியும்.. இன்னொருவருடன் பேசும் போது கோவம் வந்தால்.. விட்டுவிட்டு ஒதுங்க.. அவர்களை அவமதிக்கிதாய் போகலாம்.. என்னத்தையும் போட்டு உடைத்தால்.. அவர்களே ஒதுங்கிக்கொள்வார்கள் இல்லையா....???


- kuruvikal - 01-05-2005

tamilini Wrote:எப்படி ஒதுங்க முடியும்.. இன்னொருவருடன் பேசும் போது கோவம் வந்தால்.. விட்டுவிட்டு ஒதுங்க.. அவர்களை அவமதிக்கிதாய் போகலாம்.. என்னத்தையும் போட்டு உடைத்தால்.. அவர்களே ஒதுங்கிக்கொள்வார்கள் இல்லையா....???

அவங்க வில்லங்கப்படுவாங்க என்றா ஒதுங்கும் போது நேரடியாச் சொல்லிட்டுப் போக வேண்டியதுதான்...இதில நிண்டா பிரச்சனை முத்தும் போலக் கிடக்கு என்று சொல்லிட்டு சிலர் ஒதுங்கிடுவார்கள்...அதுபோல...!

சிறிய பொருள் என்றாலும் நீங்க வாங்கினதென்றாலும் ஆக்கினதென்றாலும் அதை உங்க கோபத்துக்காக அல்லது அதைத்தனிக்க என்று உடைக்க உங்களுக்கு உரிமையில்லை...! மனதில் கோபம் வரும் போது தெளிவாகவே உணரக் கூடியதாகத்தான் இருக்கிறது...அந்த வேளைகளில் அதை கட்டுப்படுத்த மனவோட்டத்தை மாற்ற... பலவழிகள் இருக்கு....இலகுவானது இடத்தை விட்டுக் காலி செய்வது அல்லது மெளனமாவது...பின்னர் அந்த மெளனத்தின் பெறுமதியை நீங்களே பார்த்துப் பாராட்டுவீர்கள்...எனிக் கோபம் வந்தா செய்து பாருங்க...! Idea :wink:


- tamilini - 01-05-2005

எங்களுக்கு எல்லாம் கோவம் வராது... மற்றாக்கள் செய்தததை பாத்தததை சொன்னம்...... ஆனால் ரீச்சரவை வீட்டில இருக்கிறதை பிள்ளைகளில காட்டிறது உண்மை தான்.. சின்ன வயசில எங்க வாத்தியார்.. காரமாய் நின்றால்.. அவரின் பிள்ளைகளை தேடிப்படிச்சு உங்க வீட்டில பிரச்சனையா என்று கேட்டா சொல்லுங்க அப்ப நாங்க சமத்தா இருப்பம்.. இல்லாட்டால்.. அடி தான்.. ஆனால் இங்க அடிக்க முடியாதே........ :wink:


- kuruvikal - 01-05-2005

[quote=tamilini]எங்களுக்கு எல்லாம் கோவம் வராது

இதில இருந்து தெரியுது நீங்க பொய் சொல்லுறீங்கள் என்று...கோபம் வர முக்கிய காரணம் பொய்யும் புரளியும் சுத்துமாத்தும் ஏமாற்றமும்... பழிவாங்க முற்படுதலும்...கோபமே வராத மனிதன் இயற்கையில் இருக்க முடியாது..சாதாரண குருவிகளுக்கே கோபம் வரும் போது மனிதர்களுக்கு நிச்சயம் வரும்....ஆனால் அது அளவோடு சிறிதாயும் தேவையோடும் இருக்க வேண்டும்... பலனும் நல்லதாக அமைய வேண்டும்...! Idea :wink:


- tamilini - 01-05-2005

Quote:இதில இருந்து தெரியுது நீங்க பொய் சொல்லுறீங்கள் என்று...கோபம் வர முக்கிய காரணம் பொய்யும் புரளியும் சுத்துமாத்தும் ஏமாற்றமும்... பழிவாங்க முற்படுதலும்...கோபமே வராத மனிதன் இயற்கையில் இருக்க முடியாது..சாதாரண குருவிகளுக்கே கோபம் வரும் போது மனிதர்களுக்கு நிச்சயம் வரும்....ஆனால் அது அளவோடு சிறிதாயும் தேவையோடும் இருக்க வேண்டும்... பலனும் நல்லதாக அமைய வேண்டும்...!

கோவம் வராத மனிசர் இருக்கா உலகில... சும்மா தான்.. சொன்னம்.. நீங்க வேறை.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- aathipan - 01-05-2005

கோபம் வந்தால் உடனே அவ்விடத்தைவிட்டு அகன்றால் பிரச்சனையைத்தவிர்க்கலாம்.


- tamilini - 01-06-2005

என்ன குளக்காட்டு தம்பிக்கும்.. கவிதன் தம்பிக்கும்.. நக்கலோ?? :twisted: Cry Cry


- kavithan - 01-07-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 01-07-2005

அது தானே சொன்னேன் களத்தைப்பாக்க நகைச்சுவையாக இருக்கு என்று.. பிறகெப்படி கோவம் வரும் கவலைப்படாதேங்க தங்கை.. என்னைக்கோவப்படுத்த எண்ணி எண்ணி அவங்களுக்கே பிறஷர் வரப்போகிறது.. :wink: Idea


- stalin - 04-19-2005

கோபத்தைக்கட்டு படுத்துவற்ககு தினம் தியானம் செய்யுங்கள் அல்லது கோபப்படும் விசயத்ததை கோபப்படுபவரை தனிமையில் இருந்து ஒருதருக்கும் கேட்காமல் கெட்டவார்தையில் திட்டிவிடுஙகள் கோபம் தணிந்துவிடும் --------------------------------ஸ்ராலின்


- sinnappu - 04-21-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
stalin



இணைந்தது: 24 மாசி 2005
கருத்துக்கள்: 112

எழுதப்பட்டது: செவ்வாய் சித்திரை 19, 2005 12:28 pm    Post subject:  



கோபத்தைக்கட்டு படுத்துவற்ககு தினம் தியானம் செய்யுங்கள் அல்லது கோபப்படும் விசயத்ததை கோபப்படுபவரை தனிமையில் இருந்து ஒருதருக்கும் கேட்காமல் கெட்டவார்தையில் திட்டிவிடுஙகள் கோபம் தணிந்துவிடும் --------------------------------ஸ்ராலின்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குறை நினைக்கக்வேண்டாம் stalin நீங்கள் சொல்லுறது போல தனிய இருந்து பேசினால் சொல்லமாட்டினமோ விசரன் தனிய இருந்து அலம்பிறான் எண்டு.....
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
அதுவும் கெட்ட வார்த்தையில பேசிறான் முழு விசரன் எண்டு
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- stalin - 04-21-2005

என்ன சின்ன்ப்பு இதிலை குறை நினைக்க என்ன இருக்கு------------------ஏதோ தோன்றினதை சொன்னன்------------------------------------ஏன் சின்னப்பு Toiletக்குளை இருந்து ஒருதருக்கும் தெரியாமல் மனதுக்குள்ளை திட்டுறதுதானே------------------------------------------------உண்மையாய் கேட்கிறன் எல்லா விசயத்துக்கும் சினனாச்சிக்கா கூடவே நிக்கிறவவே----------------------------------ஸ்ராலின்


- Magaathma - 05-01-2005

§¸¡Àò¾¢ý ãĸ¡Ã½¢§Â ஆ¨º¾¡ý. ஆ¨º¨Â «ôÀ¡ø ¾ûÇ¢Å¢ð¼¡ø,
ஆÉó¾õ! ஆÉó¾õ!! ஆÉó¾õ!!! ¾¡ý.


- kuruvikal - 05-01-2005

Magaathma Wrote:§¸¡Àò¾¢ý ãĸ¡Ã½¢§Â ஆ¨º¾¡ý. ஆ¨º¨Â «ôÀ¡ø ¾ûÇ¢Å¢ð¼¡ø,
ஆÉó¾õ! ஆÉó¾õ!! ஆÉó¾õ!!! ¾¡ý.

ஆசை இல்லாவிட்டால்...பிணம்...! ஆசையை அளவோடு வந்திருப்பவன் மனிதன்...கண்டதுக்கு ஆசைப்படுபவன்...விலங்கு...! ஆசைக்கு அளவு வைப்பவன் கோபத்தையும் ஆளுவான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Magaathma - 05-01-2005

Quote: ஆசை இல்லாவிட்டால்...பிணம்..ஆசைக்கு அளவு வைப்பவன்
À½õ ±ýÈ¡ø À¢½Óõ Å¡ö ¾¢ÈìÌÁ¡§Á!! À½ ஆ¨ºÂ¡ø ¾¡§É,
«ó ¿¢¨Ä¢ø «Ð ±ýÉ?
ஆ¨ºìÌ «Ç¦ÅýÚ ¿£í¸û ¦º¡øÄÄ¡õ. «¾ÈÌ ¿£í¸û ¦¸¡ÎìÌõ
«Ç× ´ýÈ¡¸ þÕìÌõ. «ÐÅ¡¸ ±ÎìÌõ «Ç× ´ýÈ¡¸
þÕìÌõ. ஆ¨º ±ýÀ¾üÌ þ¼õ ¦¸¡ÎôÀ§¾, ¸¨¼º¢Â¢ø ´ð¼¸òÐìÌ þ¼õ ¦¸¡Îò¾ ¸¨¾Â¡¸ò¾¡ý ÓÊÔõ.


- stalin - 05-01-2005

ஆசைப்பட்டத்தை நினைத்துக்கொண்டு இருக்ககூடாது ஆசை எதிர்காலத்தில் நிறைவேறுமென்று நினைக்ககூடாது நிகழ்காலத்தில் ஆசை வந்தால் ஆசைப்பட்டுகொண்டு இருக்கவேண்டும் இறந்தகாலத்தில் வாழ்வதும் பொய் எதிர்காலத்தில் வாழ்வதும் பொய் நிகழ்காலத்தில் வாழ்வது தான் வாழ்வு இந்த கணம் தான் உண்மை.------------------------------ஸ்ராலின்