01-04-2005, 04:16 PM
<img src='http://www.thatstamil.com/images25/lankaa-289.jpg' border='0' alt='user posted image'>
சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ. 6 லட்சம் அளித்துள்ளார் நடிகர் விஜய்காந்த். இதே போல நடிகர் விஜய்யும் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதோடு பொது மக்களிடம் நிவாரண நிதி வசூலும் செய்தார்.
விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு கலங்கிப் போய்விட்டேன். என் மன்றத்தின் மூலம் ஆயிரம் மூட்டை அரிசி, குடங்கள், பாத்திரங்கள், பாய், போர்வை வழங்கியுள்ளோம். மேலும் முதல்வரின் நிவாரண நிதிக்கும் ரூ. 10 லட்சம் வழங்கினேன்.
தமிழகத்தை மட்டுமல்ல, இலங்கையில் வாழும் நம் சக தமிழர்களையும் சுனாமி தாக்கி பேரழிவை ஏற்படுத்துவிட்டது. அந்த மக்களுக்கு ரூ. 6 லட்சத்தை அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்கியிருக்கிறேன்.
இது மிகச் சிறிய உதவி தான். ஆனாலும் இந்த நேரத்தில கை கொடுத்து அந்த மக்களின் சோகத்தில் பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
விஜய் உதவி:
அதே போல நடிகர் விஜய்யும் இலங்கை தமிழர் பகுதி நிவாரணத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்கியதோடு 200 மூட்டை அரிசியும் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழக நிவாரணத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கியுள்ள அவர் இன்று சென்னையில் கடை வீதியில் பொது மக்களிடம் நிவாரண நிதி திரட்டினார். நிருபர்களிடம் பேசுகையில், தமிழக நிவாரணப் பணிக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க இருக்கிறோம்.
இலங்கையிலும் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தில் நம் சக தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நாம் உதவ வேண்டும் எனறார்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>