01-04-2005, 03:15 PM
கடற்கோளுக்குப் பின்னரான நிவாரணப் பணிகளில் இந்தியா காணும் இராஜதந்திர மேம்பாடு
சைமன் டெனியர்
பிராந்திய வல்லரசுக்குரிய பொறுப்புகளைஏற்று அயல்நாடுகளுக்குஅவசர உதவி தரவா என்று கேட்ட புஷ்ஷுக்கு
ஹநன்றி' வேண்டாம்' என்று சொன்ன மன்மோகன் சிங கடற்கோள் தாக்கிய சில மணித்தியாலயங்களுக்குள்ளாகவே இந்தியா முன்னென்றும் இல்லாத வகையிலான மிகப் பெரிய நிவாரண நடவடிக்கைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டது- படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தனது கரையோரங்களுடன் மாத்திரம் இந்தியா இந்த நிவாரண நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை.
தனது கிழக்குக் கரையோரமாக நிவாரணப் பணிகளை ஆரம்பித்த அதேவேளைஇ இந்தியா ஹெலிகொப்டர்கள்இ விமானங்கள் சகிதம் 10 போர்க் கப்பல்களில் நிவாரண விநியோகங்களை ஏற்றிக் கொண்டு இலங்கைஇ இந்தோனேசியாஇ மாலைதீவு ஆகிய நாடுகளுக்கும் உதவிக்கு விரைந்தது. உலகில் இடம்பெற்ற மிக மோசமான இயற்கை அனர்த்தம் என்று வர்ணிக்கப்படும் கடந்த மாதத்தைய கடற்கோளினால் இந்தியாவின் இந்த மூன்று அயல்நாடுகளும் பேரிடருக்குள்ளாகியிருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்த உறுப்பு நாடு ஆகுவதற்கு ஆதரவைத் தேடும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் இந்தியா கடற்கோளினால் பாதிக்கப்பட்டுள்ள அநாதரவான நிலையில் உள்ள நாடு என்று தன்னைக் காட்டிக்கொள்வதற்கு மறுத்திருக்கிறது.
இந்தியா தன்னை ஒரு பிராந்திய வல்லரசு என்று உலகுக்குக் காண்பிக்க முயற்சி செய்து கொண்டுள்ளது. ஏனைய நாடுகள் உதவி கோரும் பட்சத்தில் விரைந்து செல்லும் ஆற்றலுடைய நம்பகத்தன்மையான சக்திமிக்க நாடு என்று தன்னை இந்தியா காட்டியிருக்கிறது என்று பாதுகாப்புக் கற்கைகள் மற்றும் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் உதய் பாஸ்கர் கூறியிருக்கிறார். ஹஅயல்' நாடுகளுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்கு கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பியதன் மூலம் தான் ஒரு பிராந்திய வல்லரசு என்பதையும் நம்பகமான சக்திமிகு நாடு என்பதையும் நிரூபிக்கும் குறிக்கோளை இந்தியா அடைந்திருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மிகுந்த பண்புடன் ஹஉதவிக்கு வரவா என்று கேட்டதற்கு நன்றி. ஆனால்இ உதவி வேண்டாம்' என்று கூறி விட்டார். அமெரிக்க உதவி இந்தியாவுக்குத் தேவையில்லை. அதேபோன்றே வேறு நாடுகளின் அரசாங்கங்களும் உதவிதர முன்வந்தபோது அதே பதிலையே இந்தியா கண்ணியத்துடன் அளித்தது.
நிவாரண உதவியாகவும்இ பணமாகவும் இலங்கைக்கு இந்தியா 2கோடி 30 இலட்சம் டொலர்களை வழங்கியது. மாலைதீவுக்கும் உதவியிருக்கிறது. கடற்கோளினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சிலவற்றுடன் ஒப்பிடும்போது தனவந்த நாடாகத் தென்படும் தாய்லாந்துக்கும் இந்தியா 5 இலட்சம் டொலர்கள் வழங்கியிருக்கிறது.
படுபயங்கரமான இந்தப் பேரனர்த்தத்தில் மனிதாபிமான உதவிகள் கோரப்பட்டபோது உடனடியாக விரைந்தமைக்காக பாஸ்கர் போன்ற இந்திய அவதானிகள் தங்களின் அரசாங்கத்தை வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.
உதவி கோரப்பட்டபோது துரிதமாகவே இந்தியா செயற்பட்டதற்கு முக்கியமான காரணம் இலங்கை போன்ற அயல்நாடுகளுடன் மிகவும் உறுதியான நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டுமென்ற அக்கறை என்று உலகின் நான்காவது பெரிய இராணுவத்தைக் கொண்ட அந்த நாட்டின் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பிராந்தியத்தில் இந்தியாவுடன் போட்டியில் இறங்கியிருக்கும் நாடுகள் விரைந்தோடிச் செல்வதற்கு முன்னதாக இந்தியா சென்று உதவியமை அதன் அக்கறையை மேலும் வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது.
ஹகுறிப்பிடத்தக்க அளவில் பாகிஸ்தான்இ இந்த விவகாரங்களுக்குள் பிரவேசிப்பதை உண்மையில் நாம் விரும்பவில்லை' என்று இந்திய சிரேஷ்ட அதிகாரியொருவர் சொன்னார்.
இந்தியக் கடற்படை உபகரணங்கள்இ மருந்துவகைகள்இ உணவு வகைகள் மற்றும் கூடாரங்களை கப்பல்களில் ஏற்றி அயல் நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறது. படையணியும் ரோந்துப் படகுகளும் ஆஸ்பத்திரிக் கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன. அதேவேளைஇ விமானப்படை கள் ஆஸ்பத்திரிகள் இராணுவ மருத்துவக் குழுக்கள் மற்றும் கடற்படைச் சுழியோடிகளையும் அனுப்பி வைத்திருக்கிறது.
இந்தியா அதன் கிழக்குக் கரையோரத்திலும் பாரிய நிவாரணப் பணிகளில் இறங்கியிருக்கிறது. அமெரிக்காவிடம் இருந்து உதவிகளைக் கோருவது இந்தியாவுக்குப் பெருமை தரும் விடயமல்ல.
இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் டிசம்பர் 26 இல் ஏற்பட்ட கடற்கோளினால் இந்தியாவில் சுமார் 14500 பேர் பலியாகியிருப்பதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வெளியான உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு இந்தியா வெளிக்காட்டிய பிரதிபலிப்பு மிகுந்த எச்சரிக்கையுடனானதாக இருந்ததாக சில உதவிப் பணியாளர்களும் இராஜதந்திரிகளும் கூறுகிறார்கள்.
கேந்திர-இராணுவ முக்கியத்துவமுடைய நிக்கோபார் தீவுகளில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. உயிர் தப்பியிருப்பவர்களுக்கும் உதவிகள் மிகவும் தாமதித்தே சென்றடைகின்றன. அந்தத் தீவுகளின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக தாங்கள் அங்கு செல்வதற்கு போதியளவில் அனுமதிக்கப்படுவதாக இல்லையென்று வெளிநாட்டு மற்றும் இந்திய உதவிப் பணியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியக் கரையோரத்தில் இருந்து 1200 கிலோமீற்றர்கள் தொலைவில் மியான்மாருக்கு நெருக்கமாக இருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கான நிவாரணப் பணிகளை இந்திய இராணுவம் முன்னெடுத்திருக்கிறது. ஆனால்இ பெரும் எண்ணிக்கையில் ஹெலிகொப்டர்கள் செல்வதாக இல்லை. சில சிவிலியன் நிபுணர்களே அங்கு செல்லக் கூடியதாகவும் இருக்கிறது.
கடற்கோள் தாக்கிய ஒரு சில நாட்களுக்குள்ளாக அமெரிக்கா இந்தியா அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நிவாரணப் பணி ஒருங்கிணைப்புக் கூட்டணியை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் அமைத்திருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை பிராந்தியத்துக்குள்ளும்இ அமெரிக்காவுடனும் நெருக்கமாக ஒத்துழைப்பதை நோக்கிய நகர்வாக அமைகிறது என்று வெளிவிவகார நிபுணர் சி.ராஜாமோகன் கூறுகிறார்.
ஒரு கூட்டு பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் பெரிய வல்லரசு ஒன்றுடன் இந்தியா சேர்ந்து பணியாற்றுவது இதுவே முதற்தடவையாகும். கூடுதலான அளவுக்கு பிராந்தியப் பொறுப்பொன்றை ஏற்பதற்கு இந்தியா முன்வருவதை நாம் காண்கிறோம். மற்றவர்களை வெளியில் வைத்துக்கொண்டு இதைச் செய்வதற்கு இந்தியா முயற்சிக்கவுமில்லை என்றும் ராஜா மேகன் கூறினார்.
- ராய்ட்டர் புதுடில்லி
நன்றி: தினக்குரல்