01-04-2005, 02:45 PM
[b]சர்வதேச சதிவலையில் சிக்கியது இலங்கைத் தீவகம் அந்நியப் படைகள் பெரும் எண்ணிக்கையில் குவிப்பு!!
இங்கிலாந்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் இன்று கொழும்புத் துறைமுகத்தை அண்மித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்படைக்கப்பலில் கடற்படைத் துருப்புக்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் உலங்குவானூர்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் வங்கதேசத்தின் கடற்படைக்கப்பல் இலங்கையை அடையும் எனத் தெரியவருகிறது.
பாகிஸ்தான் இலங்கைக்கு இரண்டு யுத்த தாங்கி கப்பல்கள் மூலம் 400 கடற்படை சிப்பாய்களை அனுப்புவதற்கு ஆயத்தமாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இலங்கையில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளில் இலங்கை படைகளுடன் இணைந்து செயலாற்றுவதற்காககவே பாகிஸ்தான் தனது கடற்படையை அனுப்பிவைக்க உள்ளதாக பாகிஸ்தானிய தூதாரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தனது கடற்படைத் துருப்புகளை இலங்கைக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் முக்கிய போர்க்கப்பல்கள் மூன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானும் தனது கடற்படையை இலங்கைக்கு அனுப்பவுள்ளமை பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு 1ää500 படையினரை அனுப்ப அமெரிக்கா உத்தேசித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச படைகள் இலங்கையை நோக்கி நகர்த்தப்படுவது குறித்து பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் 20 உலங்குவானூர்திகளுடன் விமானம் தாங்கி கப்பல் ஒன்று முன்னதாகவே கொழும்பை வந்தடைந்துள்ளது. நேற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 200 அமெரிக்க படைகளுடன் 213 கடற்படையினர் இங்கு கால்பதித்துள்ளனர். அமெரிக்க கடற்கலங்களின் வருகைக்கு தேவையான முன்னேற்பாட்டு பணிகளை இவர்கள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் காலியில் தங்கியிருந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. தற்போது காலியில் இந்திய கடற்படையினர் தங்கியிருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களுடன் அமெரிக்க படைகளும் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அன்ரனோ சீ 130 ரக விமானங்கள் இரண்டு நேற்று கட்டுநாயக்க வானுர்த்தி மையத்தை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இவற்றில் 30 படைவீரர்களுடன் மருந்து பொருட்களும் எடுத்துவரப்பட்டுள்ளதாக வானூர்தித் தளச்; செய்திகள் தெரிவித்துள்ளன.
நன்றி:புதினம்