Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கைக்கு 5 ஆயிரம் அமெரிக்க இராணுவத்தினர்!?
#29
<b>நிவாரணப் பணிக்கு அப்பால்!</b>



சுனாமி பேரலைகளால் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தமானது இன்று முழுஅளவில் அரசியல் மயமானதாக மாறிவிட்டதா? என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. ஏனெனில் உதவி மீட்புப்பணி என்ற பேரில் அரசியல்-இராஜதந்திர-இராணுவ நகர்வுகள் இடம்பெறத் தொடங்கிவிட்டதற்கான சமிக்ஞைகள் தெளிவாகவே தென்படத் தொடங்கியுள்ளன.

ஒரு நாட்டிற்கு ஏற்படும் அவலம் அதற்கு கிடைக்கப்பெறும் உதவிகள் நிவாரணம் என்பவற்றில் மனிதாபிமானம் மட்டுமல்ல அதற்கு மேலாக அரசியலும் உண்டு என்பது புரியப்படாத தொன்றல்ல. அதைப் புரிந்து கொள்ளாது போனால் உலக அரசியலில் ஆரம்ப அறிவைக் கூட நாம் பெற்றவர்களாகவே இல்லை என்றே கொள்ள வேண்டும்.

அவலத்திலும் நெருங்கிய நட்பு நாடுகள; வேண்டப்படாத நாடுகள் எனப் பாகுபடுத்தப்பட்டே உதவிகளின் அளவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது அனர்த்தத்தின் கொடூரம மக்களின் அவலம் என்பன மதிப்பீடு செய்யப்பட்டு அவை வழங்கப்படுவதில்லை. அதற்கும் மேலாக வேண்டியவர்கள் வேண்டதவர்கள் என்ற ரீதியிலேயே உதவிகள் வழங்கப்படுகின்றன. இதைத் தவறு என்றோ மனிதாபிமானமற்ற செயல் என்றோ குறை கூறவும்ää திருத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடவும் இங்கு நாம் முற்படவில்லை.

ஆனால் அவலத்திற்கான உதவிகள்ää நிவாரணப்பணிகள் என்பன புதிய நெருக்கடிகளைத் தோற்றிவிக்கக் கூடியவையாகவும் புதிய அரசியல் இராஜதந்திர இராணுவ நகர்வுகளாகவும் இருப்பது குறித்தே கவலை தெரிவிக்க வேண்டியதாகிறது. இலங்கையில் பேரலையின் தாக்கத்தினால் பேரிழப்பு ஏற்பட்டதென்பது உண்மையே. இவ் இழப்பில் இருந்து மக்களை விடுவிப்பதற்கு போர்க்;கால அடிப்படையில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் உண்மையே. ஆனால் தற்போதுள்ள கேள்வியானது சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பால் இதனை மேற்கொள்ள முடியாதா? என்பதே ஆகும்.

அதாவது மக்களுக்கு ஏற்பட்ட அனர்த்தத்திலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்குப் போதிய அளவில் சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பில் ஆளணி இல்லையா? என்பதே ஆகும். ஆனால் அவ்வாறு கூறுவதற்கில்லை. ஏனெனில் நாட்டின் சனத்தொகைக்கும் ஆயுதப் படைத்தரப்பிற்கும் இடையிலான விகிதாசாரத்தைப் பொறுத்தவரையில் சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பின் ஆளணியானது மிக உயர்ந்த விகிதாசாரத்தைக் கொண்டதாகவே உள்ளது.

இந் நிலையில் வெளிநாட்டு இராணுவத்தினரை மீட்புப் பணிக்கு அழைக்க வேண்டிய தேவையோ அன்றி அனுமதிக்க வேண்டிய தேவையோ அவசியமானதா? அதிலும் குறிப்பாக யுத்த நிறுத்தம் ஒன்று நாட்டில் நடைமுறையில் உள்ளநிலையிலும் விடுதலைப்புலிகள் தமிழர் தாயகத்தில் ~சுனாமி| விளைவித்த அனர்த்தத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டிருக்கையிலும் சிறிலங்கா அரசு தனது இராணுவத்தை மீட்புப் பணிகளில் பயன்படுத்திக் கொண்டால் என்ன?

அது மட்டுமல்ல சுனாமி பேரலைகளால் சிறிலங்கா அரசு ஸ்தம்பிதநிலை அடையும் வகையிலோ அன்றி சிறிலங்கா அரசின் ஆள்புலப்பரப்பு முழு அளவிலுமானதாகவோ பாதிப்பிற்குள்ளாகவில்லை. சிறிலங்கா அரசின் நிர்வாக மையமும் அதன் அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளும் முழு அளவில் செயற்படத்தக்கதானதொரு நிலையிலுமே வெளிநாட்டுப் படைகள் மீட்புப் பணிக்காக அழைக்கப்பட்டுள்ளன அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஆகையினால் இத்தகையதொரு நிலையானது தனியாக சுனாமியினால் ஏற்பட்ட அனர்த்தத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட தொரு நடவடிக்கையாக நோக்கப்படுதல் எத்தனை தூ}ரம் பொருத்தப்பாடானதாகும்? ஏனெனில் இந் நடவடிக்கையானது இனப்பிரச்சினை விடயத்திலும் பாதிப்பை- அதாவது இராணுவச்சமநிலை இராஜதந்திரச் செயற்பாடுகளில் தாக்கத்தை விளைவிக்கத் தக்கதாக அமையக்கூடியதாகும்.

அது மட்டுமன்றி ஒன்றிற்கு மேற்பட்ட இராணுவங்களின் வருகை அதிலும் குறிப்பாக இப் பிராந்தியத்திற்கு வெளியேயுள்ள நாடுகளின் இராணுவ பிரசன்னமானது இலங்கையில் மட்டுமல்ல இப் பிராந்தியத்தின் இராணுவச் சமநிலையிலும் மாற்றங்களையும்ää தாக்கத்தையும் விளைவிக்கக்கூடியதாகும்.

அதாவது சுனாமியினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தின் மீட்புப் பணி புனர்வாழ்வு என்பவற்றிற்கும் அப்பாற்பட்ட விதத்தில் வெளிநாடுகளின் பங்கு பணி இருக்குமானால் அது இலங்கையினதும் இப் பிராந்தியத்தினதும் அரசியல் இராஜதந்திர சூழ்நிலைகளில் பெரும் தாக்கத்தை விளைவிப்பவையாகவே இருக்கும். இது இலங்கையின் எதிர்காலத்தை சிக்கலுக்குள்ளானதாகவும். குழப்பம் நிறைந்தனவாகவும் மாற்றும் எனின் மிகையாகாது.

நன்றி: ஈழநாதம்
ஈழநாதம் நாளேட்டில் 04.01.05 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 12-29-2004, 07:24 PM
[No subject] - by Mathivathanan - 12-29-2004, 08:37 PM
[No subject] - by vasisutha - 12-30-2004, 01:42 AM
[No subject] - by ஊமை - 12-30-2004, 03:54 AM
[No subject] - by hari - 12-30-2004, 06:29 AM
[No subject] - by kuruvikal - 12-30-2004, 03:06 PM
[No subject] - by anpagam - 12-30-2004, 03:31 PM
[No subject] - by Mathan - 12-30-2004, 04:15 PM
[No subject] - by aathipan - 12-30-2004, 09:27 PM
[No subject] - by anpagam - 01-01-2005, 03:22 PM
[No subject] - by KULAKADDAN - 01-01-2005, 11:26 PM
[No subject] - by anpagam - 01-02-2005, 12:32 AM
[No subject] - by tamilini - 01-02-2005, 12:56 AM
[No subject] - by thamizh.nila - 01-02-2005, 01:45 AM
[No subject] - by AJeevan - 01-02-2005, 02:22 AM
[No subject] - by anpagam - 01-02-2005, 03:09 AM
[No subject] - by thamizh.nila - 01-02-2005, 12:24 PM
[No subject] - by shiyam - 01-02-2005, 09:32 PM
[No subject] - by anpagam - 01-03-2005, 07:15 PM
[No subject] - by tamilini - 01-03-2005, 07:19 PM
[No subject] - by anpagam - 01-03-2005, 07:22 PM
[No subject] - by Mathan - 01-03-2005, 08:37 PM
[No subject] - by anpagam - 01-04-2005, 12:53 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 01:24 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 02:59 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 02:14 PM
[No subject] - by anpagam - 01-04-2005, 02:24 PM
[No subject] - by anpagam - 01-04-2005, 02:31 PM
[No subject] - by anpagam - 01-04-2005, 02:45 PM
[No subject] - by shiyam - 01-04-2005, 02:47 PM
[No subject] - by anpagam - 01-04-2005, 02:59 PM
[No subject] - by anpagam - 01-04-2005, 03:05 PM
[No subject] - by anpagam - 01-04-2005, 03:28 PM
[No subject] - by anpagam - 01-04-2005, 05:51 PM
[No subject] - by Mathan - 01-04-2005, 06:04 PM
[No subject] - by sinnappu - 01-04-2005, 10:44 PM
[No subject] - by anpagam - 01-05-2005, 05:43 PM
[No subject] - by anpagam - 01-05-2005, 05:53 PM
[No subject] - by anpagam - 01-08-2005, 04:39 PM
[No subject] - by kavithan - 01-08-2005, 06:57 PM
[No subject] - by anpagam - 01-09-2005, 12:02 AM
[No subject] - by anpagam - 01-10-2005, 04:48 PM
[No subject] - by sinnappu - 01-10-2005, 06:19 PM
[No subject] - by anpagam - 01-14-2005, 01:57 AM
[No subject] - by anpagam - 01-26-2005, 03:02 PM
[No subject] - by tamilini - 01-26-2005, 03:20 PM
[No subject] - by anpagam - 01-27-2005, 12:30 AM
[No subject] - by Niththila - 01-27-2005, 12:52 AM
[No subject] - by anpagam - 01-30-2005, 01:53 PM
[No subject] - by Manithaasan - 01-30-2005, 03:31 PM
[No subject] - by ragavaa - 01-31-2005, 08:53 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 01:42 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 07:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)