01-03-2005, 11:58 PM
மிதிப்பவர்களை
மதித்துப்பார் உன் மகிமை
அவனுக்கு தெரியும்
நீயும் மிதித்தால் ஏது
வித்தியாசம் இருவருக்கம் - ஆனால்
மீண்டும் மிதிபட நினையாதே
அடக்கியவனை ஆள நினை
அதில் என்ன தவறு -- வீரம்
செறிந்தவன் தான் தமிழன் - ஆனால்
செத்தவன் வீட்டில் சிரிப்பா..??
சிரித்திடும் அளவிற்கு
மனிதாபிமானம் அற்றவனா
தமிழன்..??
அவன் மனிசனே இல்லை..
மனிசனுக்கு
மனிதாபிமானம் காட்டு
மண்டியிடாதே என்பது எம் கருத்து
மண்டியிட்டு பிழைப்பதில்
மாண்டு விடுவதே மேல்
குட்டக்குட்ட குனியதே
குனிபவனையும் குட்டாதே
இதைச்சொன்னதும் நம்
பண்டைய தமிழன்
வீரம் செறிந்த தமிழன்
இங்கு இறந்தவனை எண்ணி
மகிழ்ந்திட்டால் நாம் என்ன
மனிதர்கள்..??
அடிமை வாழ்வு
அழகல்ல -- அப்படியே
அடுத்தவன் அழுகையில்
ஆனந்தம் கொள்வதும்
பண்பல்ல
தாக்க வந்தால்
தடுத்துக்கொள் - அது
தற்காப்பு
தன்மானத்தை விலை பேசும்
தரக்குறைவாய் நடக்காது
மற்றவன் தன்மானத்தை நீயும்
விலை பேசாது இரு
உன் தரம் ஒரு படி
உயரும்.
எம் துயரில் மகிழ்ந்தவர்
துயர் கண்டு நாம் மகிழ்ந்தால்
வித்தியாசம் எது இருவர்க்கும்
புதுமையாய் இரு
எல்லாவற்றிற்கும் மேல்
மனிசனாய் இரு
நல்ல தமிழனாய் இரு
தமிழனுக்கும் அது தான் அழகு......!
மதித்துப்பார் உன் மகிமை
அவனுக்கு தெரியும்
நீயும் மிதித்தால் ஏது
வித்தியாசம் இருவருக்கம் - ஆனால்
மீண்டும் மிதிபட நினையாதே
அடக்கியவனை ஆள நினை
அதில் என்ன தவறு -- வீரம்
செறிந்தவன் தான் தமிழன் - ஆனால்
செத்தவன் வீட்டில் சிரிப்பா..??
சிரித்திடும் அளவிற்கு
மனிதாபிமானம் அற்றவனா
தமிழன்..??
அவன் மனிசனே இல்லை..
மனிசனுக்கு
மனிதாபிமானம் காட்டு
மண்டியிடாதே என்பது எம் கருத்து
மண்டியிட்டு பிழைப்பதில்
மாண்டு விடுவதே மேல்
குட்டக்குட்ட குனியதே
குனிபவனையும் குட்டாதே
இதைச்சொன்னதும் நம்
பண்டைய தமிழன்
வீரம் செறிந்த தமிழன்
இங்கு இறந்தவனை எண்ணி
மகிழ்ந்திட்டால் நாம் என்ன
மனிதர்கள்..??
அடிமை வாழ்வு
அழகல்ல -- அப்படியே
அடுத்தவன் அழுகையில்
ஆனந்தம் கொள்வதும்
பண்பல்ல
தாக்க வந்தால்
தடுத்துக்கொள் - அது
தற்காப்பு
தன்மானத்தை விலை பேசும்
தரக்குறைவாய் நடக்காது
மற்றவன் தன்மானத்தை நீயும்
விலை பேசாது இரு
உன் தரம் ஒரு படி
உயரும்.
எம் துயரில் மகிழ்ந்தவர்
துயர் கண்டு நாம் மகிழ்ந்தால்
வித்தியாசம் எது இருவர்க்கும்
புதுமையாய் இரு
எல்லாவற்றிற்கும் மேல்
மனிசனாய் இரு
நல்ல தமிழனாய் இரு
தமிழனுக்கும் அது தான் அழகு......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

