01-03-2005, 07:22 PM
தென் தமிழீழத்தில் இந்தியத் தூதுவர்
சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் நிரூபமா சென் இன்று தென் தமிழீழப் பகுதிகளை பார்வையிட்டார்.
மட்டக்களப்பு கச்;சேரியில் அரசாங்க அதிபர் வே.சண்முகம் உட்பட நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளையும் அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
விடுதலைப் புலிகள் சார்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவில் அங்கம் வகிக்கும் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் தயாமோகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம்ää தங்கேஸ்வரி கதிர்காமர் ஆகியோரையும் நிருபமா சந்தித்தார்.
இந்த மாவட்டத்தின் அழிவுகளை நிவர்த்தி செய்ய நீண்டகால திட்டம் மற்றும் இடைக்கால திட்டம் என இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
அரச நிர்வாகப் பிரிவுää விடுதலைப் புலிகள் நிர்வாகப் பிரிவு என இரண்டு நிர்வாகப் பிரிவுகள் இருப்பதால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிற்கான உதவிகள் அவர்கள் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எந்த உதவியென்றாலும் சரி அரசாங்கத்தின் உடாகவே செய்யப்படும். வடக்கு கிழக்கு நிலமை தொடர்பாக கவனத்தில் எடுக்கப்படும் என இந்திய தூதுவர் பதிலளித்துள்ளார்.
காத்தான்குடி நாவலடி கல்லடி போன்ற பகுதிகளையும் நேரில் சென்று அவர் பார்வையிட்டார்.
நன்றி:புதினம்