01-03-2005, 07:15 PM
மீட்புப் பணிகளின் பெயரால் கொழும்பை முற்றுகையிடுகிறது அமெரிக்க இராணுவம்?
அமெரிக்காவின் 20 உலங்குவானூர்திகளுடன் விமானம் தாங்கி கப்பல் ஒன்று நேற்று கொழும்பை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலில் 200 அமெரிக்க படையினர் இறங்கியுள்ளனர். மேலதிகமாக 1200 படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் காலியில் தங்கியிருந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
தற்போது காலியில் இந்திய கடற்படையினர் தங்கியிருந்த மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களுடன் அமெரிக்க படைகளும் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அன்ரனோ சீ-130 ரக விமானங்கள் இரண்டு இன்று கட்டுநாயக்க வானூர்த்தி மையத்தை வந்தடைந்துள்ளது. இவற்றில் 30 படைவீரர்களுடன் மருந்துப் பொருட்களும் எடுத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி:புதினம்