Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொடியவளாய் கடலவள்...!
#2
<img src='http://www.tamilnatham.com/photos/kalmunai20041228/4.JPG' border='0' alt='user posted image'>
அலைகள் செய்தன கொடுமை
வீடுகள் தோறும் வெறுமை
போருக்கு அழைத்தது இயற்கை
அதை எதிர்த்திட ஏது வலிமை
சில மணி நேர நாடகம்
தந்திட்ட அழிவுகள்
தொடரப்போகிறது பல யுகங்களுக்கு

இழந்தவர்களை..
இன்னும் விடுவதாய்
இல்லையா இயற்கையும்..??
இவர்களை
நிற்கதியாய் ஆக்குவதில்
என்ன இன்பம்
பாழாய் போன இயற்கைக்கும்..??

சொல்லில் அடங்கா
துயரங்களை தினம் தினம்
தோழ்களில் சுமந்தவர்கள்
மீண்டும் ஒரு முறை
இடம்பெயர்க்க பட்டுள்ளார்கள்
வித்தாயசம் இல்லை இங்கு
இது வரை எதிரி துப்பாக்கி
முனையில் அகதியாக்கினான்
அனாதையாக்கினான்
இயற்கையவள் அதற்கும் பல
படி மேல் சென்று
பகலிரவென ஒரு நாளில்
நிற்கதியாக்கியுள்ளாள்
கொடுமையிலும் கொடுமையிது
மீண்டும் ஒரு முறை எம்மக்கள்
அகதிகளானது மட்டுமல்ல
அனாதைகளாயும்
ஆக்கப்பட்டிருக்கிறார்கள்

மலரப்போகும் புது வருடம்
மலரவைக்கும் எம் வாழ்வையும் என்று
மன மகிழ்வுடன் இருக்கையில்
விடை பெறும் வருடம்
பல்லாயிரம் உயிர்களை
பலியெடுத்து செல்கிறது

இயற்கை எனும்
கொடியவளின் நாடகத்தில்
கோயில்கள் தேவாலயங்கள்
பள்ளிவாசல்கள் என
அனைத்துமே பங்கேற்றன
பல உயிர்களை இவற்றினுள்ளும்
காவு கொள்ளப்பட்டனவாம்
இங்கு இருந்த தெய்வங்கள்
என்ன செய்தன
ஆழ்ந்த நித்திரையோ...???
உயிரிற்காய் போராடிய
ஒவ்வொரு உள்ளங்களும்
அழைத்தது கேட்கவில்லையா..??
அமைதியாய் இவர்கள்
இருந்ததன் காரணந்தான் என்ன ..??
தொடரப்போகும் மனித வரலாற்றில்
அழியா நினைவாய் பேரழிவொன்று
சுனாமியின் வடிவில் வரும் என்று
யார் அறிந்தீர்...??
நடந்தவையாவும் கனவென்று
யாரும் சொல்ல மாட்டீரா..??
இது ஒரு கனவாய் மாறக்கூடாதா..??
வரலாற்றுப்பதிவில்
கடந்து விட்ட சில தினங்கள்
காணாமல் போகக்கூடாதா...??
கண்ணீர் பேசுகிறது - அங்கு கடல்
தண்ணீர் செய்து விட்ட கொடுமையை...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
கண்ணீர் பேசுகிறது...! - by tamilini - 12-31-2004, 02:44 PM
[No subject] - by KULAKADDAN - 01-01-2005, 12:30 AM
[No subject] - by KULAKADDAN - 01-01-2005, 12:35 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)