12-29-2004, 10:07 PM
கடல் அள்ளிப்போய் தமிழீழம் , இலங்கை , இந்தியா உட்பட பல்லாயிரம் மக்களைப் பலிகொடுத்திருக்கும் இவ்வேளையில் அதன் துயரிலிருந்து இன்னும் விடுபடாத நிலையில் எங்கும் அழுகையும் , அவலமும் கேட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியத் தொலைக்காட்சியான சண்தொலைக்காட்சி தனது வழமையான நிகழ்ச்சிகளான சின்னத்திரை தொடர்கள் , சினிமாப்பாடல்கள் , திரைப்படங்கள் என ஒலிபரப்பியவண்ணமேயுள்ளது. இந்தியாவிலும் இயற்கையின் சீற்றத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் அழிந்து போய் அழிவுக்குள்ளான பிரதேசங்களெங்கும் அழுகையுடன் , துயருமாய் இருக்கின்ற இவ்வேளையில் இவற்றையெல்லாம் கணக்கில் வாங்கிக் கொள்ளாமல் சண்தொலைக்காட்சியும் , சண்வானொலியும் சின்னத்திரையையும் ,
சினிமாவையும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சகளை வழங்க அதனை ரசிப்பதற்கென்றே ஒருகூட்டம் பின் நிற்பதை புலத்துத் தமிழர்களும் , அனைத்துத் தமிழர்களும் கவனத்தில் உள்வாங்கி இத்தகைய மனிதமற்ற ஒலி , ஒளிபரப்புக்களைப் புறந்தள்ள வேண்டும் என நிதர்சனம் கேட்டுக்கொள்கிறது.

" "