Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகப் பற்றுறுதி மிக்க இளைஞர்களே யுவதிகளே...!
#1
<span style='color:red'><b>தமிழர் படைப்பலத்தைப் பெருக்க இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும்: பரந்தன் தேசிய எழுச்சிப் பேரவை அறிக்கை </b>

[size=14]<b>இந்தக் கடினமான இக்காலத்தில் தேசத்தின் தேவையறிந்து எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க எமது படைப்பலத்தைப் பெருக்க இளைஞர்கள் யுவதிகள் முன்வரவேண்டும் என பரந்தன் தேசிய எழுச்சிப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளது.

மீண்டும் ஒரு போரை எமது மக்கள் மீது திணிப்பதற்கு எதிரியானவன் திட்டமிட்டு வருகிறான். நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பெண் போராளிகள் உட்பட 50 போராளிகள் வன்னிக்குச் செல்வதற்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடன் வந்த சமயம் இராணுவத்தினர் அவர்களின் இடுப்புப்பட்டியினைக் கழற்றினால் மட்டுமே பயணத்தினை மேற்கொள்ளலாம். என நிபந்தனை விதித்தமையால் ஏற்பட்ட இழுபறி நிலையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இது ஒன்றும் புதிய நடவடிக்கையல்ல வழமையான செயல்பாடுதான் என எடுத்துக் கூறியும் வெறிபிடித்த இராணுவத்தினர் ஏற்றுக் கொள்ளாத நிலையில் பயணத்தினை மேற்கொள்ள முடியாது போயிற்று.

இப்படியான ஒரு நிகழ்வு எமக்கு ஒன்றும் புதியன அல்ல இந்த இன வெறிபிடித்த ஆட்சியாளர்களும் இராணுவமும் காலத்திற்கு காலம் முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது வழக்கமானதொன்றாகவேயுள்ளது. இந்நிலையில் நாம் மாவீரர்களின் கனவை நனவாக்க திடசங்கற்பம் பூணவேண்டும் என அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. </b></span>

தாயகத்தில் இருந்து எழும் வேண்டுகோளை உலகெங்கும் வாழும் தாயகப்பற்றுறுதி மிக்க இளைஞர்கள் யுவதிகளுக்காக தருவது புதினம்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தாயகப் பற்றுறுதி மிக்க இளைஞர்களே யுவதிகளே...! - by kuruvikal - 12-25-2004, 05:36 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 12-25-2004, 06:25 PM
[No subject] - by sinnappu - 12-25-2004, 07:01 PM
[No subject] - by விது - 12-25-2004, 07:44 PM
[No subject] - by Mathuran - 12-25-2004, 08:08 PM
[No subject] - by Mathivathanan - 12-25-2004, 08:19 PM
[No subject] - by sinnappu - 12-26-2004, 01:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)