Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போதை போன்ற இந்திய சின்னத்திரை நாடகங்கள்
#14
இந்தச் சின்னத்திரை பாதிப்புப் பற்றி கதைக்க வெளிக்கிட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆகப் போகுது...என்னத்தக் கண்டமிச்சம்...ஒன்றுமில்ல...வெறும் பக்கங்களில எழுதிக் குவிச்சதுதான் மிச்சம்....! நேற்றைய சந்ததியும் சரி இன்றைய சந்ததியும் சரி சின்னத்திரையில் காலம் கழிக்க முக்கிய காரணம்..அவர்களுக்கு பொழுது போக்குவதற்கான சரியான நாட்டமுள்ள வழி காட்டப்படாமையே.....இப்போ சின்னத்திரை தொடர் நாடகங்களை எதை நம்பி எடுக்கிறார்கள்...இந்த வீடுகளில் பொழுதுபோக்க வழியில்லாமல் அலைக்கலையும் பெண்களை மையமாக வைத்துதான்...!

வேண்டுமானால் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து மக்களின் பொதுவான பொழுது போக்கு விருப்பம் என்ன என்று கண்டறிந்து அதை நோக்கி அவர்களை இட்டுச் செல்ல வேண்டும்...ஒருவேளை அது சின்னத்திரை என்றிருந்தால் அந்தச் சின்னத்திரையை ஆரோக்கியமாக்க வேண்டியதே அன்றி....மக்களைக் குறை கூறிப் பிரயோசனம் இல்லை.....!

இப்போ தென்னிந்திய தமிழ் சின்னத்திரைகளை நோக்கினால்...வெறும் காதல்.. கலியாணம்.. சண்டை... மோசடி... பழிக்குப்பழி... இரகசியத் தொடர்புகள்...இவற்றைத்தான் காணலாம்..இவற்றை வைத்து சுத்தோ சுத்தென்று சுத்துவார்கள்.... ஒரு சில தரமான சின்னத்திரை நாடகங்கள் சமூக அறிவியலை மையப்படுத்தி வந்ததும் உண்டு நகைச்சுவையை மையப்படுத்தி வந்த நாடகங்களும் உண்டு....உண்மையில் நகைச்சுவையில் தென்னிந்தியக் கலைஞர்களே செல்வாக்குச் செலுத்துகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை....எங்கட கலைஞர்கள் அவர்கள் அளவுக்கு (நாங்கள் அவதானித்த மட்டில்) நகைச்சுவையை நகைச்சுவையாக தந்ததாகத் தெரியவில்லை...!( சில தாயகப் படங்கள்...குறிப்பாக அம்மா நலமாவில்...நல்லதொரு முயற்சி செய்திருந்தார்கள்...பாராட்டத்தக்க முயற்சி...ஆனால் இன்னும் மெருகூட்டப் பட வேண்டிய முயற்சி......!)

எங்கள் கலைஞர்கள் வெறும் கலைஞர்கள் என்று உச்சரிக்கப்படுபவர்களாகவே இருக்கின்றனரே தவிர தென்னிந்தியக் கலைஞர்களுக்கு நிகர்த்ததாக மக்கள் மனவோட்டம் அறிந்து தமது திறமைகளைக் வெளிக்காட்டக் கூடியவர்களாக இல்லை... ஒரு காலத்தில் இலங்கை வானொலி நாடகக் கலைஞர்கள் இந்தியா வரை தமது புகழ்பரப்பி இருந்தனர்....அந்தளவுக்கு இந்தியக் கலைஞர்கள் இருக்கவில்லை....ஆனால் இன்று அத்ந்த நிலையில்தான் எம் சின்னத்திரைக் கலைஞர்கள் இருக்கின்றனர்...!

சின்னத்திரை நாடகங்கள் மக்களை அதிகம் கவரக் காரணம்...அவற்றுள் சினிமாத்தனமும் சினிமாவும் ஆதிக்கம் செலுத்துவதே அன்றி வேறில்லை... எங்கள் கலைஞர்களால் தென்னிந்திய சினிமாவுக்கு நிகராக தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்றால்...அது சாத்தியம்...என்றால் மக்களை இவர்கள் பக்கம் இழுப்பதற்கு அதிக காலம் ஆகாது...அதற்கு வலுவான நிதிவளமை அவசியம்... அதற்கு எங்கே போவது....!

இப்போ தாயகப் படங்களை ஏன் பார்க்கின்றனர்.... அது போராட்டம் சார்ந்து வருவதால்.. இங்கேயே கட்டுநாயக்கா தாக்குதலை பார்க்க எத்தனை பேர் விழுந்தடிக்கிறார்கள் இந்த அளவுக்கு குறும்படங்களைப் பார்க்க விளைந்தனரா....நிச்சயமாக இருக்காது....! இதேபோல் ஒரு நிலையில்தான் தென்னிந்திய சின்னத்திரையும் எமது கலைஞர்களின் படைப்புக்களும் இருக்கின்றன...மக்களின் மனவோட்டத்துக்கு அருகே இல்லாமல்....! இதுதான் எமக்குத் தெரிகிறது யதார்த்தம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 12-22-2004, 06:24 PM
[No subject] - by ஊமை - 12-22-2004, 08:38 PM
[No subject] - by AJeevan - 12-22-2004, 09:39 PM
[No subject] - by Mathuran - 12-23-2004, 01:50 AM
[No subject] - by Mathan - 12-23-2004, 04:48 AM
[No subject] - by AJeevan - 12-23-2004, 11:13 PM
[No subject] - by Mathan - 12-23-2004, 11:14 PM
[No subject] - by AJeevan - 12-23-2004, 11:21 PM
[No subject] - by kuruvikal - 12-24-2004, 03:35 AM
[No subject] - by Mathuran - 12-24-2004, 04:57 AM
[No subject] - by sinnappu - 12-24-2004, 05:42 PM
[No subject] - by வெண்ணிலா - 12-24-2004, 08:46 PM
[No subject] - by kavithan - 12-25-2004, 12:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)