![]() |
|
போதை போன்ற இந்திய சின்னத்திரை நாடகங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: போதை போன்ற இந்திய சின்னத்திரை நாடகங்கள் (/showthread.php?tid=6134) |
போதை போன்ற இந்திய சின்னத்திரை நாடகங்கள் - Nitharsan - 12-22-2004 தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சிகள் போட்டி பொட்டுக் கொண்டு தமது தொலைக் காட்சிகளில் தொடர் நாடகங்களை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழ் நாட்டு மக்கள் குறிப்பாக பெண்கள் அடுப்படியும் தொலைக்காட்சியும் என்ற ரீதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சி முன்னே பல மணிநேரம் தொடர் நாடகம் பார்ப்பவர்கள் அரை மணிநேரச் செய்தியின் பொது தான் தொலைக்hட்சியை நிப்ப்hட்டுவார்கள். இது இப்போது ஈழத்தமிழர்களிலும் பரவ ஆரம்பித்துள்ளது தெரிகிறத தாயகத்தில் சின்னத்திரையின் பாதிப்புக் குறைவு எனினும் அங்கும் நாடகங்களுக்கு அடிமையானவர்கள் இருக்கின்றனர். தாயகத்தைப் பொறுத்த வரை சு10ரியன் தொலைக்காட்சியின் நாடகங்களுக்கே பலரும் அடிமையாகியுள்ளனர். ஆனால் புலம் பெயர் நாடுகளிலே தமிழர்கள் அனைத்து நாடகங்களுக்கும் அடிமையாகியுள்ளனர். இங்கு தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்கள் இல்லை எனினும் சில நிறுவனங்களாளல் சட்டத்திற்க்கு முரனாக அவ் நாடகங்கள் பதிவு செய்யப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றது. இதனால் பெரும்பால தமிழர்கள் இந்த நாடகங்களுக்கு அடிமையாகி விட்டனர். இதில் ஆண் பெண் வித்தியாசமில்லை. (இதைப்பர்hத்த சிலர் இதைப்பொலவே வாழ்கையை அமைக்க முயற்ச்சித்து கவிழ்ந்த கதைகளும் ஏராளம்) இது பற்றி ஒருவர் சொன்னார். :- "சின்னத்திரை நாடகங்களுக்கும் மதுவுக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை ஏனெனில் மதுவைக் கையில் எடுத்தவன் அதனை விட மாட்டான் அதே போலத்தான் சின்னத்திரை நாடகங்களைப்பார்த்தவர்கள் அதை உயிரே போனாலும் விட மாட்டார்கள்" என்றார் அவர் அவர் சொன்னதில் எந்தப்பிழையும் இல்லை தமிழ் வணிப நிலையங்களுக்ச் சென்றால் அங்கு வருபவர்கள் அண்ண அண்ணாமலை இருக்கோ? மெட்டி ஒலி என்ன மாதிரி.......கல்கி வருமோ? ஆனந்தத்தை கனநாளக் கானேல்ல இப்படியான வசனங்களைக் கெட்க முடியும் அது மட்டுமி;லலை அருகில் நிற்பவரிடம் நீங்கள் அந்த நாடகம் பார்க்கிறனீங்களே ? ம் அந்த நாடகம் நல்ல இன்ரஸ்ட போகுது இப்பிடி எல்லாம் கெட்கலாம் நான் சொல்வது கற்பனையல்ல நீங்கள் ரொரன்ரோவின் தமிழ் வனிப நிலையங்களில் வந்து பாருங்கள் சின்னத்திரை நாடகங்கள் வாடகைக்கு விடாத கடைகள் எங்கும் உண்டா என்று....இது மட்டு மல்ல எனக்கு தெரிந்த சில புகலிட தொலைக்காட்சிகள் தமது நிகழ்ச்சிகளில் இந்திய தொடர்நாடகங்களை போடுகின்றனர். இது ஏன்?? நான் கூற வருவது தொடர்நாடகங்கள் நேரத்தை தவறான வழியில் செலவிடப் பயன் பட வழி செய்கிறது... என்பதே இது பற்றி உங்கள் கருத்து என்ன ....?? <img src='http://www.sunnetwork.org/images/homepages/col_1_1.jpg' border='0' alt='user posted image'> -நேசமுடன் நிதர்சன்- - Mathuran - 12-22-2004 மனம் என்பது ஒரு மென்மையான நுண்ணிய கருவி ஆகும். அதை நீங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் பயன் படுதிக்கொள்ளலாம், ஆனால் அங்குதான் விவகாரமே இருக்கின்றது. நீங்கள் பார்து இருப்பீர்கள் சில இளஞ்ஞர்கள் நல்ல பிள்ளைகளாக இருந்திருப்பார்கள் திடீரென்று அந்த இளஞ்ஞரே மிகவும் தவறாகவும் வன்மையாகவும் நடந்துகொள்வார். இவற்றிற்கு காரணம் அந்த இள்ஞ்ஞர் அப்படியான செயலுக்கு தன்னை பழக்கபடுத்தி கொண்டுவிட்டார் எனவே அவரால் அதிலிருந்து மீள முடியாது போய்விடும். இதைப்போலவே இந்த தொடர்நாடகங்கள் பார்பவர்களின் நிலையும். பல மென்மையான சம்பவங்கள் இன் நாடகங்களில் இடம் பொருகின்றமையால் அவர்களின் அந்த மென்மையான மனம் அடிமையாகி விடுகின்றது. இதில் ஒருவகை இன்பம் அவர்களின் மனதிற்கு கிடக்கின்றது. இது ஒருவகை போதைதான். இதனால் உள்வியல் தாகங்கள் ஏற்பட்டு தங்களிடையே பல போராட்டங்களை ஏற்படுத்துவார்கள் - ஊமை - 12-22-2004 எமது எதிர்கால இளம் சமுதாயத்துக்கு துரோகம், வேசித்தனம் பொறாமை கொலைவெறி என்னும் பல ஈனச் செயல்களை செய்திகள்ளாகச் சொல்லும் இந்த தென்னிந்தியக் குப்பைகளுக்கு எமது தமிழீழத் தமிழர்கள் ஆதரவு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவது யானை தன்கையாலேயே தன் தலையில் மண்ணை இடும் சபவத்திற்கு ஒப்பானதாகும் என நான் கருத்துகிறேன். அன்புடன் ஊமை - AJeevan - 12-22-2004 ஊமை Wrote:எமது எதிர்கால இளம் சமுதாயத்துக்கு துரோகம், வேசித்தனம் பொறாமை கொலைவெறி என்னும் பல ஈனச் செயல்களை செய்திகள்ளாகச் சொல்லும் இந்த தென்னிந்தியக் குப்பைகளுக்கு எமது தமிழீழத் தமிழர்கள் ஆதரவு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவது யானை தன்கையாலேயே தன் தலையில் மண்ணை இடும் சபவத்திற்கு ஒப்பானதாகும் என நான் கருத்துகிறேன். [size=15]தயவு செய்து இவற்றை தொலைக் காட்சி பொறுப்பானவர்களிடம் கேளுங்கள். கடந்த சில வாரங்களுக்கு முன் ஐரோப்பிய தொலைக் காட்சி ஒன்றின் பொறுப்பாளரிடம் சென்னை தொடர்களுக்கு கொடுக்கும் பணத்தில் கொஞ்சமாவது புலம் பெயர் கலைஞர்களது படைப்புகளுக்கு கொடுக்கலாமே என்றேன். அவரிடமிருந்து வந்த பதில்:- என் மனைவி கூட சென்னை தொலைக் காட்சி தொடர்கள் தொலைக் காட்சியில் இல்லையென்றால் தொலைக் காட்சியே பார்க்க மாட்டார். இதுதான் நிலமை. உங்கள் வீட்டிலும் அதுவாகத்தானிருக்கும். அவை இல்லாவிட்டால் தொலைக் காட்சியே ஓடாது என்றார். <b> வன்னியிலிருந்து ஓடர் ஒன்று வராதா இந்த தொலைக் காட்சிகளுக்கு?</b> ஏனைய விடயங்களை எழுத விருப்பமில்லை. புலம் பெயர் கலைஞர்களே உங்கள் படைப்புகளுக்கு எந்த ஊடகமாவது ஒரு சதமேனும் தந்தால் சொல்லுங்கள்? - Mathuran - 12-23-2004 வணக்கம் அஜீவன் அண்ணா அவர்களே! நீங்கள் ஒரு நல்ல விடயத்தை கேட்டிருக்கின்றீர்கள் அந்த தொலைக்காட்சி பொறுப்பாளரிடம். ஆனால் பொறுப்பாளரின் பதில்தான் கொஞ்சம் பொறுப்பற்று இருந்தது. அவரின் பதில் எப்படி இருக்கின்றது தெரியுமா? என் குழந்தை மலேரியாவால் துடிக்கின்றது ஆனால் குளிசை விழுங்க மறுக்கின்றது. காரணம் பிள்ளைக்கு குளிசை கைப்பதினால் பிடிக்கவிலையாம் என்பதை போல அல்லவா இருக்கின்றது. குளிசை கசப்பு உடயது என்று குழந்தை சொல்லுமாயின், நாம் குளிசையில் இனிப்பை தடவி அதை குழந்தைக்கு கொடுத்து நோயை குணப்படுத்த வேண்டாமா? அதைவிடுத்து குளிசை கசக்கின்றது என்றால் குழந்தையை இழப்பதை தவிர வேறு வழி இல்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால் புலம்பெயர் தமிழர்களில் பலர் நல்ல திரைப்படங்களையோ இல்லை நல்ல நாடகங்களையோ விரும்பி பார்ப்பவர்களாகவே இருக்கின்றார்கள். அது எந்த நாட்டு தயாரிப்பாக இருந்தாலும். உதாரணத்திற்கு சில கீழே_ சமகால பார்வை.....நிதர்சனம் (தாயகம்) பிஞ்சு மனம்......நிதர்சனம் (தாயகம்) அம்மா நலமா...நிதர்சனம் (தாயகம்) கடலோரக்காற்று....நிதர்சனம் (தாயகம்) இன்னும் பல........ மறக்கத்தகுமோ.....தமிழ் தொலைகாட்சி இணையம் படலைக்கு படலை.....தமிழ் தொலைக்காட்சி இணையம் நையாண்டி மேளம்.....தமிழ் தொலைக்காட்சி இணையம் இன்னும் பல.............. எதிரொலி.............தீபம் தொலைக்காட்சி முயன்றால் எதுவும் முடியும். திரை என்பது என்ன என்று அறிய வேண்டுமா? கடினம் இல்லை ஒரு சமூகத்தை பண்படுத்தும் கருத்துக்களை ஒளித்திரையியூடாக காண்பித்து கூறுவதே திரை. உ+ம் வீர பாண்டிய கட்டை பொம்மன், கென்னெரிக் இப்சனின் ஒரு பாவையின் வீடு (et dukke hjem ) போ. தாசனின் பின்சுமனம் என கூறிக்கொண்டே போகலாம். அதைவிடுத்து ஒரு சமூகத்தை சீரழிக்கும் திரைகளுக்கா இவ்வாறான சமூகபொறுப்புள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிந்தித்து செயல்படுங்கள் பொறுப்பாளர்களே. பழமொழி: அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே. புதுமொழி: மக்கள் எவ்வழியோ அரசனும் அவ்வழியே. Re: போதை போன்ற இந்திய சின்னத்திரை நாடகங்கள் - Mathan - 12-23-2004 [quote=Nitharsan]தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சிகள் போட்டி பொட்டுக் கொண்டு தமது தொலைக் காட்சிகளில் தொடர் நாடகங்களை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழ் நாட்டு மக்கள் குறிப்பாக பெண்கள் அடுப்படியும் தொலைக்காட்சியும் என்ற ரீதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சி முன்னே பல மணிநேரம் தொடர் நாடகம் பார்ப்பவர்கள் அரை மணிநேரச் செய்தியின் பொது தான் தொலைக்hட்சியை நிப்ப்hட்டுவார்கள். இது இப்போது ஈழத்தமிழர்களிலும் பரவ ஆரம்பித்துள்ளது தெரிகிறத தாயகத்தில் சின்னத்திரையின் பாதிப்புக் குறைவு எனினும் அங்கும் நாடகங்களுக்கு அடிமையானவர்கள் இருக்கின்றனர். தாயகத்தைப் பொறுத்த வரை சு10ரியன் தொலைக்காட்சியின் நாடகங்களுக்கே பலரும் அடிமையாகியுள்ளனர். ஆனால் புலம் பெயர் நாடுகளிலே தமிழர்கள் அனைத்து நாடகங்களுக்கும் அடிமையாகியுள்ளனர். இங்கு தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்கள் இல்லை எனினும் சில நிறுவனங்களாளல் சட்டத்திற்க்கு முரனாக அவ் நாடகங்கள் பதிவு செய்யப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றது. இதனால் பெரும்பால தமிழர்கள் இந்த நாடகங்களுக்கு அடிமையாகி விட்டனர். இதில் ஆண் பெண் வித்தியாசமில்லை. (இதைப்பர்hத்த சிலர் இதைப்பொலவே வாழ்கையை அமைக்க முயற்ச்சித்து கவிழ்ந்த கதைகளும் ஏராளம்) இது பற்றி ஒருவர் சொன்னார். :- "சின்னத்திரை நாடகங்களுக்கும் மதுவுக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை ஏனெனில் மதுவைக் கையில் எடுத்தவன் அதனை விட மாட்டான் அதே போலத்தான் சின்னத்திரை நாடகங்களைப்பார்த்தவர்கள் அதை உயிரே போனாலும் விட மாட்டார்கள்" என்றார் அவர் அவர் சொன்னதில் எந்தப்பிழையும் இல்லை தமிழ் வணிப நிலையங்களுக்ச் சென்றால் அங்கு வருபவர்கள் அண்ண அண்ணாமலை இருக்கோ? மெட்டி ஒலி என்ன மாதிரி.......கல்கி வருமோ? ஆனந்தத்தை கனநாளக் கானேல்ல இப்படியான வசனங்களைக் கெட்க முடியும் அது மட்டுமி;லலை அருகில் நிற்பவரிடம் நீங்கள் அந்த நாடகம் பார்க்கிறனீங்களே ? ம் அந்த நாடகம் நல்ல இன்ரஸ்ட போகுது இப்பிடி எல்லாம் கெட்கலாம் நான் சொல்வது கற்பனையல்ல நீங்கள் ரொரன்ரோவின் தமிழ் வனிப நிலையங்களில் வந்து பாருங்கள் சின்னத்திரை நாடகங்கள் வாடகைக்கு விடாத கடைகள் எங்கும் உண்டா என்று....இது மட்டு மல்ல எனக்கு தெரிந்த சில புகலிட தொலைக்காட்சிகள் தமது நிகழ்ச்சிகளில் இந்திய தொடர்நாடகங்களை போடுகின்றனர். இது ஏன்?? நான் கூற வருவது தொடர்நாடகங்கள் நேரத்தை தவறான வழியில் செலவிடப் பயன் பட வழி செய்கிறது... என்பதே இது பற்றி உங்கள் கருத்து என்ன ....?? <img src='http://www.sunnetwork.org/images/homepages/col_1_1.jpg' border='0' alt='user posted image'> -நேசமுடன் நிதர்சன்- நல்ல தலைப்பு நிதர்சன். சின்னத்திரை நாடகங்கள் போதை போன்றவை என்பது உண்மைதான். அந்த நாடங்களை பார்க்க ஆரம்பித்து அவற்றில் மூழ்கி வெளியில் வராத பலரை நான் பார்த்திருக்கின்றேன். இந்த நாடகங்களை மதுவுடன் ஒப்பிட்டு இருக்கின்றீர்கள். மது மட்டுமல்ல அதனை ச்ற்றுடன் (chat - Chatting) கூட ஒப்பிடலாம். மதுவை போல சற்றை போல இதுவும் அளவாக இருந்தால் பாதிப்பு ஏதும் இல்லை. எதுவும் அளவுக்கு மீறும் போதுதான் வாழ்க்கையை பாதிக்கின்றது. அதனால் இந்த சின்னத்திரை நாடகங்களை முற்றாக தவிர்க்க வேண்டும் என்று நான் கூறமாட்டேன். அளவாக பொழுது போக்க பார்க்கலாம் என்பது எனது கருத்து. - Mathan - 12-23-2004 AJeevan Wrote:[quote=ஊமை]எமது எதிர்கால இளம் சமுதாயத்துக்கு துரோகம், வேசித்தனம் பொறாமை கொலைவெறி என்னும் பல ஈனச் செயல்களை செய்திகள்ளாகச் சொல்லும் இந்த தென்னிந்தியக் குப்பைகளுக்கு எமது தமிழீழத் தமிழர்கள் ஆதரவு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவது யானை தன்கையாலேயே தன் தலையில் மண்ணை இடும் சபவத்திற்கு ஒப்பானதாகும் என நான் கருத்துகிறேன். [size=15]தயவு செய்து இவற்றை தொலைக் காட்சி பொறுப்பானவர்களிடம் கேளுங்கள். கடந்த சில வாரங்களுக்கு முன் ஐரோப்பிய தொலைக் காட்சி ஒன்றின் பொறுப்பாளரிடம் சென்னை தொடர்களுக்கு கொடுக்கும் பணத்தில் கொஞ்சமாவது புலம் பெயர் கலைஞர்களது படைப்புகளுக்கு கொடுக்கலாமே என்றேன். அவரிடமிருந்து வந்த பதில்:- என் மனைவி கூட சென்னை தொலைக் காட்சி தொடர்கள் தொலைக் காட்சியில் இல்லையென்றால் தொலைக் காட்சியே பார்க்க மாட்டார். இதுதான் நிலமை. உங்கள் வீட்டிலும் அதுவாகத்தானிருக்கும். அவை இல்லாவிட்டால் தொலைக் காட்சியே ஓடாது என்றார். <b> வன்னியிலிருந்து ஓடர் ஒன்று வராதா இந்த தொலைக் காட்சிகளுக்கு?</b> ஏனைய விடயங்களை எழுத விருப்பமில்லை. புலம் பெயர் கலைஞர்களே உங்கள் படைப்புகளுக்கு எந்த ஊடகமாவது ஒரு சதமேனும் தந்தால் சொல்லுங்கள்? நிச்சயமாக புலம் பெயர் கலைஞர்களின் படைப்புகளையும் ஊக்குவித்து அவற்றிற்கும் இடமளிக்கவேண்டும். மற்றும் <b> "வன்னியிலிருந்து ஓடர் ஒன்று வராதா இந்த தொலைக் காட்சிகளுக்கு?"</b> என்று எழுதி இருந்தீர்கள். அப்படி நடந்தாலும் அது சன் டீவி, ஜெயா டீவி போன்ற தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்த போவதில்லை. அந்த நிலையில் இந்த திறந்த சந்தையில் போட்டிதன்மையை கட்டிகாத்து நிலைபெற்று நிற்பதற்கு மற்றய தொலைகாட்டிகளும் சின்னத்திரை நாடங்களை ஒலிபரப்பியே ஆக வேண்டும். அதனாலேயே தேசிய தொலைக்காட்சி என்று கூறப்படும் ரிரிஎன் (TTN) கூட சின்னத்திரை நாடங்களை ஒலிபரப்புகின்றார்கள் என்று நினைக்கின்றேன். தற்போதைய சூழ்நிலையில் சின்னத்திரை நாடகங்கள் ரிரிஎன் (TTN) போன்ற தொலைக்காட்சிகள் முற்றாக தவிர்க்காமல் அவற்றில் சிலதை ஒளிபரப்புவதுடன் புலம் பெயர் கலைஞர்களின் தரமான படைப்புகளையும் சேர்த்து மக்களை கவரலாம். புகலிடக் கலைஞர்களை வளர்ப்பது ஒவ்வொரு தமிழ் - Nitharsan - 12-23-2004 புகலிடக் கலைஞர்களை வளர்ப்பது ஒவ்வொரு தமிழ் ஊடகங்களினதும் கடமை அக்கடமையைச் செய்யத்தவறின் அவர்கள் தமிழர் ஊடகம் என்ற நிலையிலிருந்து விலக்கப்படுகின்றனர். தமிழக சினிமாவைப் பொறுத்தவரை அவர்களுக்கு தமது திரைப்படங்களை அல்லது நாடககங்களை எடுக்கும் போது நட்டம் ஏற்ப்படுவதில்லை. ஆனால் எமது கலைஞர்கள் பலர் மிகவும் கஸ்டப்பட்டு தமது படைப்புக்களை வழங்கும் பொது அதற்க்கு ஆதரவு வழங்க வேண்டியவர்கள் ஏன் இப்படி இருக்கின்றனர்? வன்னியிலிரந்து இவர்களுக்கு கட்டளை வராதா என்று ஏங்கும் அஜிவன் அண்ணா உங்கள் எதிர்பார்ப்பு நல்லதே ஆனால் எல்லாவற்றையும் வன்னிதான் அறிவித்து இவர்கள் திருந்த வேண்டுமா? இங்கிருக்கின்ற சமூக அமைப்புக்களும் கொஞ்சம் கதைக்கலாம் தானே... அவர்கள் (வன்னி) எதைத்தான் கவனத்தில் எடுப்பது..எமது கலைஞர்களை வளாக்க இணையங்கள் பல முயற்ச்சிப்பது வரவேற்க்கத்தக்கது....ஆனால் இணைய வலையமைப்பில் தேடிப்பார்த்தால் தென்னிந்திய திரைப்படங்களுக்கான இணையங்கள் தான் அதிகம் புகலிடக் கலைஞர்களில் ஒரு சிலர் தமிழ்நாட்டு பாணியை புகுத்துகின்றனர் என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும்... அதே போல அண்மையில் பவர் என்ற திரைப்படத்துக்கு புகலிடத்திலிருக்கும் ஒருவர் தனது பணத்தை (கடன் பட்டு) தமிழ்நாட்டுக்கு அள்ளியிறைத்தார். அதே போல இப்பொது ஈழத்தமிழர்களை ஏமாற்ற தாய்மண் என்ற பெயரில் தென்னிந்திய திரைப்படத்துறையினர் ஓர் படம் எடுக்க இருக்கின்றனர். ஐரோப்பாவில் இவர்கள் இதற்கான நடிகர்களைத்தேடினார்கள் இது எமது கலைஞர்களை வளர்க்கவல்ல.. இதனால் எமது கலைஞர்கள் வளாக்கப்பட மாட்டார்கள் மாறாக எமது தனித்துவமான கலை அவர்களது பாணிக்கு மாற்றப்படுகின்றது என்பதே உண்மை... நேசமுடன்நிதர்சன் - AJeevan - 12-23-2004 ளு - Mathan - 12-23-2004 AJeevan Wrote:ளு புரியவில்லையே அஜீவன் அண்ணா? - AJeevan - 12-23-2004 வருவாயற்ற துறையை எவரும் தொடர மாட்டார்கள். இலங்கை போல் எதிர்காலத்தில் புலத்திலும் ஆகிவிடுமோ? திரைப்படத்துறை பற்றி தெரியாது - Nitharsan - 12-24-2004 AJeevan Wrote:வருவாயற்ற துறையை எவரும் தொடர மாட்டார்கள்.இது வருவாய் அற்ற தொழில் என்று சொல்ல முடியாது. முதலில் நாம் கொஞ்சம் நட்டமடையலாம் ஆனால் எமது படைப்பில் தரமிருக்கு மாயின் அது பின் வெற்றியளிக்கும். (எனக்கு திரைப்படத்துறை பற்றி தெரியாது) முதலில் ஒரு திரைப்படத்தை எடுக்கும் போது மக்கள் எப்படிப்பட்ட சம்பவங்களை விரும்புகின்றனர்...அவர்களிடம் எப்படியேல்லாம் படைப்புக்களைக் கொண்டு செல்லாம் என்று பார்க்க வேண்டும் இங்கு படம் எடுப்பவர்கள் (சிலர்) உடனே திரையரங்கு களுக்குப் பொய் விடுவார்கள்... அதை விட அவர்கள் அதை விற்பனை செய்தால் (டீவிடீ யாகவோ வீடீயோ கசற் ஆகவோ) அதை பலர் பார்ப்பதற்க்கு சந்தர்ப்பம் உண்டு..இப்படி மக்கள் மனதில் எமது படைப்புக்களுக்கான ஆதரவைப் பெற வேண்டும்.. மக்கள் தமது திரைப்படத்தை ஏற்று விட்டனர் என்பது அவர்கள் வாங்கும் பிரதிகள் மூலம் அறிய முடியும்...அதன் பின் வெளியிடும் திரையரங்கில் போட்டால் மக்கள் வருவார்கள் படைப்பாளிகள் நட்ட மடையத்தேவையில்லை.. இப்பொது இருக்கும் பிரச்சினை லாபம் வராவிட்டாலும் நட்டம் வரக்கூடாது என்பதே எனவெ இவ்வாறு முயறச்சித்துக் பார்க்கலாம்..ஷ நேசமுடன் நிதர்சன் Re: திரைப்படத்துறை பற்றி தெரியாது - Mathan - 12-24-2004 Nitharsan Wrote:[quote=AJeevan]வருவாயற்ற துறையை எவரும் தொடர மாட்டார்கள்.இது வருவாய் அற்ற தொழில் என்று சொல்ல முடியாது. முதலில் நாம் கொஞ்சம் நட்டமடையலாம் ஆனால் எமது படைப்பில் தரமிருக்கு மாயின் அது பின் வெற்றியளிக்கும். (எனக்கு திரைப்படத்துறை பற்றி தெரியாது) முதலில் ஒரு திரைப்படத்தை எடுக்கும் போது மக்கள் எப்படிப்பட்ட சம்பவங்களை விரும்புகின்றனர்...அவர்களிடம் எப்படியேல்லாம் படைப்புக்களைக் கொண்டு செல்லாம் என்று பார்க்க வேண்டும் இங்கு படம் எடுப்பவர்கள் (சிலர்) உடனே திரையரங்கு களுக்குப் பொய் விடுவார்கள்... அதை விட அவர்கள் அதை விற்பனை செய்தால் (டீவிடீ யாகவோ வீடீயோ கசற் ஆகவோ) அதை பலர் பார்ப்பதற்க்கு சந்தர்ப்பம் உண்டு..இப்படி மக்கள் மனதில் எமது படைப்புக்களுக்கான ஆதரவைப் பெற வேண்டும்.. மக்கள் தமது திரைப்படத்தை ஏற்று விட்டனர் என்பது அவர்கள் வாங்கும் பிரதிகள் மூலம் அறிய முடியும்...அதன் பின் வெளியிடும் திரையரங்கில் போட்டால் மக்கள் வருவார்கள் படைப்பாளிகள் நட்ட மடையத்தேவையில்லை.. இப்பொது இருக்கும் பிரச்சினை லாபம் வராவிட்டாலும் நட்டம் வரக்கூடாது என்பதே எனவெ இவ்வாறு முயறச்சித்துக் பார்க்கலாம்..ஷ நேசமுடன் நிதர்சன் நிதர்சன் சொல்வது போல் நேரடியாக திரை அரங்குகளுக்கு செல்லாமல் வேறு ஊடங்களூடாக வெளியிட்டால் மக்களை கூடுதலாக சென்றடைவதுடன் நட்டமடையும் சாத்தியம் குறைவு. மற்றும் புலத்தில் உள்ள கலைஞர்கள் நிறைய படைப்புகளை வெளியிட்ட போதிலும் அவை DVD போன்ற வடிவங்களில் வெளிவராமையால் மக்களை சென்றடையாமல் அவற்றை உருவாக்கிய கலைஞர்களிடமே தூங்கி கிடக்கின்றன, - kuruvikal - 12-24-2004 இந்தச் சின்னத்திரை பாதிப்புப் பற்றி கதைக்க வெளிக்கிட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆகப் போகுது...என்னத்தக் கண்டமிச்சம்...ஒன்றுமில்ல...வெறும் பக்கங்களில எழுதிக் குவிச்சதுதான் மிச்சம்....! நேற்றைய சந்ததியும் சரி இன்றைய சந்ததியும் சரி சின்னத்திரையில் காலம் கழிக்க முக்கிய காரணம்..அவர்களுக்கு பொழுது போக்குவதற்கான சரியான நாட்டமுள்ள வழி காட்டப்படாமையே.....இப்போ சின்னத்திரை தொடர் நாடகங்களை எதை நம்பி எடுக்கிறார்கள்...இந்த வீடுகளில் பொழுதுபோக்க வழியில்லாமல் அலைக்கலையும் பெண்களை மையமாக வைத்துதான்...! வேண்டுமானால் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து மக்களின் பொதுவான பொழுது போக்கு விருப்பம் என்ன என்று கண்டறிந்து அதை நோக்கி அவர்களை இட்டுச் செல்ல வேண்டும்...ஒருவேளை அது சின்னத்திரை என்றிருந்தால் அந்தச் சின்னத்திரையை ஆரோக்கியமாக்க வேண்டியதே அன்றி....மக்களைக் குறை கூறிப் பிரயோசனம் இல்லை.....! இப்போ தென்னிந்திய தமிழ் சின்னத்திரைகளை நோக்கினால்...வெறும் காதல்.. கலியாணம்.. சண்டை... மோசடி... பழிக்குப்பழி... இரகசியத் தொடர்புகள்...இவற்றைத்தான் காணலாம்..இவற்றை வைத்து சுத்தோ சுத்தென்று சுத்துவார்கள்.... ஒரு சில தரமான சின்னத்திரை நாடகங்கள் சமூக அறிவியலை மையப்படுத்தி வந்ததும் உண்டு நகைச்சுவையை மையப்படுத்தி வந்த நாடகங்களும் உண்டு....உண்மையில் நகைச்சுவையில் தென்னிந்தியக் கலைஞர்களே செல்வாக்குச் செலுத்துகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை....எங்கட கலைஞர்கள் அவர்கள் அளவுக்கு (நாங்கள் அவதானித்த மட்டில்) நகைச்சுவையை நகைச்சுவையாக தந்ததாகத் தெரியவில்லை...!( சில தாயகப் படங்கள்...குறிப்பாக அம்மா நலமாவில்...நல்லதொரு முயற்சி செய்திருந்தார்கள்...பாராட்டத்தக்க முயற்சி...ஆனால் இன்னும் மெருகூட்டப் பட வேண்டிய முயற்சி......!) எங்கள் கலைஞர்கள் வெறும் கலைஞர்கள் என்று உச்சரிக்கப்படுபவர்களாகவே இருக்கின்றனரே தவிர தென்னிந்தியக் கலைஞர்களுக்கு நிகர்த்ததாக மக்கள் மனவோட்டம் அறிந்து தமது திறமைகளைக் வெளிக்காட்டக் கூடியவர்களாக இல்லை... ஒரு காலத்தில் இலங்கை வானொலி நாடகக் கலைஞர்கள் இந்தியா வரை தமது புகழ்பரப்பி இருந்தனர்....அந்தளவுக்கு இந்தியக் கலைஞர்கள் இருக்கவில்லை....ஆனால் இன்று அத்ந்த நிலையில்தான் எம் சின்னத்திரைக் கலைஞர்கள் இருக்கின்றனர்...! சின்னத்திரை நாடகங்கள் மக்களை அதிகம் கவரக் காரணம்...அவற்றுள் சினிமாத்தனமும் சினிமாவும் ஆதிக்கம் செலுத்துவதே அன்றி வேறில்லை... எங்கள் கலைஞர்களால் தென்னிந்திய சினிமாவுக்கு நிகராக தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்றால்...அது சாத்தியம்...என்றால் மக்களை இவர்கள் பக்கம் இழுப்பதற்கு அதிக காலம் ஆகாது...அதற்கு வலுவான நிதிவளமை அவசியம்... அதற்கு எங்கே போவது....! இப்போ தாயகப் படங்களை ஏன் பார்க்கின்றனர்.... அது போராட்டம் சார்ந்து வருவதால்.. இங்கேயே கட்டுநாயக்கா தாக்குதலை பார்க்க எத்தனை பேர் விழுந்தடிக்கிறார்கள் இந்த அளவுக்கு குறும்படங்களைப் பார்க்க விளைந்தனரா....நிச்சயமாக இருக்காது....! இதேபோல் ஒரு நிலையில்தான் தென்னிந்திய சின்னத்திரையும் எமது கலைஞர்களின் படைப்புக்களும் இருக்கின்றன...மக்களின் மனவோட்டத்துக்கு அருகே இல்லாமல்....! இதுதான் எமக்குத் தெரிகிறது யதார்த்தம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Mathuran - 12-24-2004 குருவிகளே நல்ல அருமையான கருத்தினை சொன்னீர்கள். அப்படியாயின் இதர்க்கு எதாவது ஒரு வளி செய்ய வேண்டாமா? நான் அண்மையில் பார்த்த ஒரு சம்பவத்தினை சொல்லுகின்றேன். ஒரு மேடை நிகட்சியில் 14 வயது மதிக்கதக்க எங்கள் இளஞ்ஞ இளஞ்ஞிகள் சேர்ந்து ஒரு தென்னிந்திய பாடலுக்கு நன்றாக உடல் அசைவுடன் ஆடியிருந்தார்கள். ஆட்டம் முடிந்ததுதான் தாமதம் ஒருவர் சொன்னார். இத விட்டால் வேற தெரியாதே இதுகளுக்கு என்று. நான் சிரித்து விட்டு அந்த இளஞ்ஞர்களிடம் சென்று அருமையாக இருந்தது என்றேன். அவர்களிடம் கேட்டேன் யார் உங்களிற்கு பழக்கியது என்று. அவர்கள் சொன்னார்கள் நாங்களே பழகினோம் என்று. நான் இதுவரைக்கும் பார்க்காத அருமையான நடனம் அது. அதில் ஒரு இளஞ்ஞன் நல்ல அருமையான பண்பான இளஞ்ஞன் சொன்னார் எங்களட்ட கீபோர்ட் எல்லாம் இருக்கு அடுத்த முறை நாங்களே பாடல்களை உருவாகி அதற்கு ஆட போகின்றோம் என்றான். அவர் செய்வாரோ இல்லையோ அவரின் தன்னம்பிக்கையை பாராட்டவேண்டும். இளஞ்ஞர்கள் முயன்றால் ஈழத்திரையும் இனிதாய் நம் கண்முன்னே விரியும். - sinnappu - 12-24-2004 பிள்ளையள் அண்ணாமலை முடிஞ்சுதோ????? ஏனன்டால் அது முடிஞ்சால் தான் எனக்கு சாப்பாடு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-24-2004 sinnappu Wrote:பிள்ளையள் அண்ணாமலை முடிஞ்சுதோ????? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 12-25-2004 sinnappu Wrote:பிள்ளையள் அண்ணாமலை முடிஞ்சுதோ????? அட டா மெட்டி ஒலி கேட்ட பிறகு தான் சட்டி ஒலி எண்டு நினைத்தன்... அண்ணாமலை முடியவா.... ஆச்சி..என்ன ஆச்சி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |