12-24-2004, 01:36 AM
Nitharsan Wrote:[quote=AJeevan]வருவாயற்ற துறையை எவரும் தொடர மாட்டார்கள்.இது வருவாய் அற்ற தொழில் என்று சொல்ல முடியாது. முதலில் நாம் கொஞ்சம் நட்டமடையலாம் ஆனால் எமது படைப்பில் தரமிருக்கு மாயின் அது பின் வெற்றியளிக்கும். (எனக்கு திரைப்படத்துறை பற்றி தெரியாது) முதலில் ஒரு திரைப்படத்தை எடுக்கும் போது மக்கள் எப்படிப்பட்ட சம்பவங்களை விரும்புகின்றனர்...அவர்களிடம் எப்படியேல்லாம் படைப்புக்களைக் கொண்டு செல்லாம் என்று பார்க்க வேண்டும் இங்கு படம் எடுப்பவர்கள் (சிலர்) உடனே திரையரங்கு களுக்குப் பொய் விடுவார்கள்... அதை விட அவர்கள் அதை விற்பனை செய்தால் (டீவிடீ யாகவோ வீடீயோ கசற் ஆகவோ) அதை பலர் பார்ப்பதற்க்கு சந்தர்ப்பம் உண்டு..இப்படி மக்கள் மனதில் எமது படைப்புக்களுக்கான ஆதரவைப் பெற வேண்டும்.. மக்கள் தமது திரைப்படத்தை ஏற்று விட்டனர் என்பது அவர்கள் வாங்கும் பிரதிகள் மூலம் அறிய முடியும்...அதன் பின் வெளியிடும் திரையரங்கில் போட்டால் மக்கள் வருவார்கள் படைப்பாளிகள் நட்ட மடையத்தேவையில்லை.. இப்பொது இருக்கும் பிரச்சினை லாபம் வராவிட்டாலும் நட்டம் வரக்கூடாது என்பதே எனவெ இவ்வாறு முயறச்சித்துக் பார்க்கலாம்..ஷ
இலங்கை போல்
எதிர்காலத்தில்
புலத்திலும்
ஆகிவிடுமோ?
நேசமுடன் நிதர்சன்
நிதர்சன் சொல்வது போல் நேரடியாக திரை அரங்குகளுக்கு செல்லாமல் வேறு ஊடங்களூடாக வெளியிட்டால் மக்களை கூடுதலாக சென்றடைவதுடன் நட்டமடையும் சாத்தியம் குறைவு. மற்றும் புலத்தில் உள்ள கலைஞர்கள் நிறைய படைப்புகளை வெளியிட்ட போதிலும் அவை DVD போன்ற வடிவங்களில் வெளிவராமையால் மக்களை சென்றடையாமல் அவற்றை உருவாக்கிய கலைஞர்களிடமே தூங்கி கிடக்கின்றன,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

