Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போதை போன்ற இந்திய சின்னத்திரை நாடகங்கள்
#5
வணக்கம் அஜீவன் அண்ணா அவர்களே!

நீங்கள் ஒரு நல்ல விடயத்தை கேட்டிருக்கின்றீர்கள் அந்த தொலைக்காட்சி பொறுப்பாளரிடம். ஆனால் பொறுப்பாளரின் பதில்தான் கொஞ்சம் பொறுப்பற்று இருந்தது. அவரின் பதில் எப்படி இருக்கின்றது தெரியுமா? என் குழந்தை மலேரியாவால் துடிக்கின்றது ஆனால் குளிசை விழுங்க மறுக்கின்றது. காரணம் பிள்ளைக்கு குளிசை கைப்பதினால் பிடிக்கவிலையாம் என்பதை போல அல்லவா இருக்கின்றது. குளிசை கசப்பு உடயது என்று குழந்தை சொல்லுமாயின், நாம் குளிசையில் இனிப்பை தடவி அதை குழந்தைக்கு கொடுத்து நோயை குணப்படுத்த வேண்டாமா? அதைவிடுத்து குளிசை கசக்கின்றது என்றால் குழந்தையை இழப்பதை தவிர வேறு வழி இல்லை.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் புலம்பெயர் தமிழர்களில் பலர் நல்ல திரைப்படங்களையோ இல்லை நல்ல நாடகங்களையோ விரும்பி பார்ப்பவர்களாகவே இருக்கின்றார்கள். அது எந்த நாட்டு தயாரிப்பாக இருந்தாலும். உதாரணத்திற்கு சில கீழே_

சமகால பார்வை.....நிதர்சனம் (தாயகம்)
பிஞ்சு மனம்......நிதர்சனம் (தாயகம்)
அம்மா நலமா...நிதர்சனம் (தாயகம்)
கடலோரக்காற்று....நிதர்சனம் (தாயகம்)
இன்னும் பல........

மறக்கத்தகுமோ.....தமிழ் தொலைகாட்சி இணையம்
படலைக்கு படலை.....தமிழ் தொலைக்காட்சி இணையம்
நையாண்டி மேளம்.....தமிழ் தொலைக்காட்சி இணையம்
இன்னும் பல..............


எதிரொலி.............தீபம் தொலைக்காட்சி

முயன்றால் எதுவும் முடியும். திரை என்பது என்ன என்று அறிய வேண்டுமா? கடினம் இல்லை ஒரு சமூகத்தை பண்படுத்தும் கருத்துக்களை ஒளித்திரையியூடாக காண்பித்து கூறுவதே திரை. உ+ம் வீர பாண்டிய கட்டை பொம்மன், கென்னெரிக் இப்சனின் ஒரு பாவையின் வீடு (et dukke hjem ) போ. தாசனின் பின்சுமனம் என கூறிக்கொண்டே போகலாம். அதைவிடுத்து ஒரு சமூகத்தை சீரழிக்கும் திரைகளுக்கா இவ்வாறான சமூகபொறுப்புள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிந்தித்து செயல்படுங்கள் பொறுப்பாளர்களே.

பழமொழி: அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே.
புதுமொழி: மக்கள் எவ்வழியோ அரசனும் அவ்வழியே.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 12-22-2004, 06:24 PM
[No subject] - by ஊமை - 12-22-2004, 08:38 PM
[No subject] - by AJeevan - 12-22-2004, 09:39 PM
[No subject] - by Mathuran - 12-23-2004, 01:50 AM
[No subject] - by Mathan - 12-23-2004, 04:48 AM
[No subject] - by AJeevan - 12-23-2004, 11:13 PM
[No subject] - by Mathan - 12-23-2004, 11:14 PM
[No subject] - by AJeevan - 12-23-2004, 11:21 PM
[No subject] - by kuruvikal - 12-24-2004, 03:35 AM
[No subject] - by Mathuran - 12-24-2004, 04:57 AM
[No subject] - by sinnappu - 12-24-2004, 05:42 PM
[No subject] - by வெண்ணிலா - 12-24-2004, 08:46 PM
[No subject] - by kavithan - 12-25-2004, 12:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)