12-22-2004, 09:39 PM
ஊமை Wrote:எமது எதிர்கால இளம் சமுதாயத்துக்கு துரோகம், வேசித்தனம் பொறாமை கொலைவெறி என்னும் பல ஈனச் செயல்களை செய்திகள்ளாகச் சொல்லும் இந்த தென்னிந்தியக் குப்பைகளுக்கு எமது தமிழீழத் தமிழர்கள் ஆதரவு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவது யானை தன்கையாலேயே தன் தலையில் மண்ணை இடும் சபவத்திற்கு ஒப்பானதாகும் என நான் கருத்துகிறேன்.
அன்புடன்
ஊமை
[size=15]தயவு செய்து இவற்றை தொலைக் காட்சி பொறுப்பானவர்களிடம் கேளுங்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஐரோப்பிய தொலைக் காட்சி ஒன்றின் பொறுப்பாளரிடம் சென்னை தொடர்களுக்கு கொடுக்கும் பணத்தில் கொஞ்சமாவது புலம் பெயர் கலைஞர்களது படைப்புகளுக்கு கொடுக்கலாமே என்றேன்.
அவரிடமிருந்து வந்த பதில்:-
என் மனைவி கூட சென்னை தொலைக் காட்சி தொடர்கள் தொலைக் காட்சியில் இல்லையென்றால் தொலைக் காட்சியே பார்க்க மாட்டார். இதுதான் நிலமை.
உங்கள் வீட்டிலும் அதுவாகத்தானிருக்கும்.
அவை இல்லாவிட்டால் தொலைக் காட்சியே ஓடாது என்றார்.
<b> வன்னியிலிருந்து ஓடர் ஒன்று வராதா இந்த தொலைக் காட்சிகளுக்கு?</b>
ஏனைய விடயங்களை எழுத விருப்பமில்லை.
புலம் பெயர் கலைஞர்களே உங்கள் படைப்புகளுக்கு எந்த ஊடகமாவது ஒரு சதமேனும் தந்தால் சொல்லுங்கள்?

