Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மின்சார ரெயிலில் சிக்கி சினிமா நடிகர் பலி
#1
தண்டவாளத்தை தாண்டிய போது பரிதாபம்„ மின்சார ரெயிலில் சிக்கி சினிமா நடிகர் பலி
தாம்பரம், டிச. 21- பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை தாண்டிய போது சினிமா நடிகர் சாருகேக்ஷ; மின்சார ரெயிலில் சிக்கி பலியானார்.

நடிகர் அர்ஜுன், நடிகைகள் nஜhதிகா, மீனா நடித்த ரிதம் தமிழ் படத்தில் நடித்தவர் சாருகேஷ்(வயது 26). இவர் தற்போது டி.வியில. ஒளிபரப்பாகி வரும் மனைவி, அவர்கள், கணவருக்காக தொடர்களில் நடித்து உள்ளார். ரிதம் படத்தில் மீனாவை கிண்டல் செய்பவர் வேடத்தில் நடித்திருந்தனர். இவரது வீடு நங்கநல்லு}ர் லட்சுமி நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளது. நேற்று மதியம் 12.45 மணிக்கு சாருகேஷ் சென்னை செல்வதற்காக வீட்டில் இருந்து பழவந் தாங்கல் ரெயில் நிலையத் துக்கு வந்தார். சென்னை செல்லும் ரெயில்கள் நிற்கும் பிளாட்பாரத்துக்கு செல்ல தண்டவாளத்தை தாண்டி செல்ல முயன்றhர். அப்போது கடற்கரையில் இருந்து தாம் பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் சாருகேஷ் மீது மோதியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பிணமானார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இசப்-இன்ஸ்பெக்டர் கணேசன் விரைந்து சென்று சாரு கேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பலியான சாருகேசுக்கு 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி சுவேதா. பி.எஸ்.சி பட்டதாரி. அவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சாருகேசின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போனது. கணவரின் உடலை பார்த்து மனைவி சுவேதா கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது. மயங்கி விழுந்த சுவேதாவை உறவினர்கள் அழைத்து சென்றனர்.
Reply


Messages In This Thread
மின்சார ரெயிலில் சிக்கி சினிமா நடிகர் பலி - by Vaanampaadi - 12-21-2004, 06:33 PM
[No subject] - by tamilini - 12-21-2004, 06:37 PM
[No subject] - by kuruvikal - 12-21-2004, 06:40 PM
[No subject] - by tamilini - 12-21-2004, 06:44 PM
[No subject] - by Mathuran - 12-21-2004, 07:21 PM
[No subject] - by killya - 12-21-2004, 07:24 PM
[No subject] - by Danklas - 12-21-2004, 09:59 PM
[No subject] - by Haran - 12-21-2004, 10:45 PM
[No subject] - by tamilini - 12-22-2004, 12:26 AM
[No subject] - by Danklas - 12-22-2004, 12:46 AM
[No subject] - by KaviPriyan - 12-22-2004, 02:05 AM
[No subject] - by Mathuran - 12-22-2004, 02:39 AM
[No subject] - by sOliyAn - 12-22-2004, 02:52 AM
[No subject] - by kavithan - 12-22-2004, 03:30 AM
[No subject] - by shiyam - 12-22-2004, 03:56 AM
[No subject] - by Danklas - 12-22-2004, 06:41 PM
[No subject] - by tamilini - 12-22-2004, 07:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)