12-19-2004, 10:19 AM
சமகாலநிகழ்வுகளுடனே இதுபற்றிய கருத்தாடலுக்குள் நுழைகிறேன். இன்று ஐதேக விரும்பியோ விரும்பாமலோ இதுவிடயத்தில் சாதகமான போக்கையே காட்டுகிறது. சுpறிலங்கா சுதந்திர கட்சியும் இரண்டுநாட்களுக்குமுன் சாதகமான கருத்தியலுக்குள் வந்துவிட்டதுபோலவே இருக்கிறது. இந்தப்புறநிலையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற மாற்றங்களுக்கு அகநிலையை உருவாக்கிய தேசியத்தலைவரின் வழிநடத்தலே காரணம். ஆனால் உடனடியாக அரசு பேச்சுக்கு வரக்கூடிய நிலைப்பாட்டை எடுப்பதில் தடையாக சந்திரிகாவின் அடுத்தகட்ட பதவிஆசையும் யேவிபியின் அடிப்படைவாதபோக்கும் இருக்கின்றன.
இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை தமிழர்கள் பெற்றுக்கொண்டாலே
1.சர்வதேசரீதியான கௌரவத்தை தமிழர்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.
2.நேரடியான உதவிகளை பெற்று அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்பமுடியும்.
3.தமிழ் பேசும் தாயகம் அங்கீகரிக்கப்படும்.