08-04-2003, 07:55 PM
கன்னத்தில் முத்தமிட்டால்
-ஒரு பார்வை-
அண்மைக்காலமாக ஈழத்தமிழர் பிரச்சினை (ஈழவிடுதலைப் போராட்டம்) தமிழகத் திரைப்படங்களில் கணிசமானளவு செல்வாக்கைப் பெற்று வருகின்றது. ஈழத்தமிழர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்டு காற்றுக்கென்ன வேலி, நந்தா, கன்னத்தில் முத்தமிட்டால் என மூன்று திரைப்படங்கள் கிட்டதட்ட சமகாலத்தில் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் காற்றுகென்ன வேலி திரைப்படத்தை தந்த புகழேந்தி ஒரு தமிழின உணர்வாளர். தமிழர்களின் போராட்ட வரலாற்றின் உண்மை நியாங்களையும் மக்களின் அவல வாழ்வின் வலியையும் நன்குணர்ந்தவர். எமது சுதந்திரந்திற்கான போருக்கு ஆதரவான கருத்துக்களை தனது காற்றுக்கென்ன வேலியில் சொல்லியிருந்தார். இதற்காக இவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தணிக்கைக்குழுவினரோடு போராட வேண்டியிருந்தும் நாமறிந்தே. அடுத்து "நந்தா"வை இயக்கிய பாலா ஈழப்பிரச்சினையை ஆழமாக தொடாவிட்டாலும் ஈழத்தமிழர் பால் அக்கறை கொண்டவராக, தான் சொல்ல வந்த கருத்தை நேர்மையுடன் சொல்லியிருந்தார். அகதிகளாக தமிழகம் செல்லும் மக்கள் அகதிமுகாம்களில் ஆதரவின்றி அவதிப்படுவதையும் படகுமுலம் கொண்டுவரப்பட்டு நடுக்கடலில் தவிக்கவிடப்படுவதையும் நெஞ்சில் நிற்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தார். அத்தோடு தாய்த்தமிழகத்திற்கும் தமிழீத்திற்குமிடையேயுள்ள தொப்புள்கொடி உறவை கவிஞர் தாமரையின் பாடல் மூலம் உணர்தியிருந்தார். காற்றுக்கென்ன வேலி, நந்தா ஆகிய இரண்டு படங்களும் தமிழர் மேல் அக்கறை கொண்ட இனப்பற்றாளர்களால் இயக்கப்பட்டதால் தமிழீழ விடுதலை பற்றிய உண்மை நிலைகளையே எடுத்துரைத்து நின்றன.
ஆனால் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த "கன்னத்தில் முத்தம்மிட்டால்" அப்படியல்ல. புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த இத்திரைப்படம் பலராலும் பல கோணங்களில் விமர்சிக்கப்படுகின்றது. மேலோட்டமான பார்வையோடு இது முற்று முழுதாக எமக்கு ஆதரவான கருத்துடைய படமென்று கருதுபவர்களும் இருக்கின்றார்கள். ஆதலால் இந்தத்திரைப்படம் தொடர்பான ஆழமான பார்வை எல்லாத்தரப்பு மக்கள் மத்தியிலும் எழவேண்டியது அவசியமானதொன்றாகும். மணிரத்தினம் திரைப்படங்களை மிகப்பிரமாண்டமான முறையில் உயர் தொழில்நுட்பத்தை கையாண்டு நேர்த்தியாக திறம்பட இயக்கக்கூடியவரென்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர் அரசியல் கலந்த கதைகளை இயக்கும் போது நேர்மையாக கருத்து சொல்பவரல்லர் உண்மைச்சம்பவங்களை கருவாகக்கொண்டு இறுதியாக அடுத்தடுத்து ரோஜா, பம்பாய், உயிரே ஆகிய படங்களை இயக்கியர். இந்தத்திரைப்படங்களில் விடுதலைப்போராளிகளை தீவிரவாதிகளென்றும் விடுதலைக்கான உரிமைக்கான போராட்டங்களை பயங்கரவாதப் போராட்டமென்றும் சொல்லி கொச்சைப்படுத்தியவர். அந்த வரிசையில் இவரது இயக்கத்தில் வெளியான "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படமும், தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் தொடர்பான ஆழமான புரிதலும் தெளிவும் அவரிடம் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ்மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் போராட்டத்தின் அடிப்படை காரணிகள் பற்றிய தெளிவான கருத்து அவரிடம் இல்லாததால் படத்தின் சில முக்கிய காட்சிகள் எமது மக்களின் விடியல் நோக்கிய விடுதலைப்போரை கொச்சைப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. ஆகவே அத்திரைப்படத்தின் கதையைப்பற்றி பேசுவதைத்தவிர்த்து, சில முக்கிய காட்சிகளின் மேல் எமது பார்வையை செலுத்துவோம்.
சிறுபிள்ளைகளுக்கு போர்ப்பயிற்சி அளிப்பது, அவர்களை சண்டையில் ஈடுபடுத்துதல் போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது. இளகிய மனமும் கருணைகுணமும் கொண்டவர்கள் போராளிகள். தன்னலமின்றி பிறருக்காக தமது விலை மதிக்க முடியாத உயிர்களை தியாகம் செய்பவர்கள். அவர்களுடைய மனிதநேயப்பண்பு அதிஉயர்வுடையது. இப்படியான அவர்களுடைய நற்பண்புகளை காட்டாததுகூட கவலையில்லை. ஆனால் படத்தின் நாயகனையும் அவருடைய சிங்கள நண்பரையும் கண்ட பொழுது, போராளிகள் கொடுரமாக நடந்து கொள்வதாக காண்பிக்கப்படுகின்றது. இக்காட்சி எமது போராட்டம் பற்றிய தெளிவான அறிதல் இல்லாதவர்களுக்கு தவறான கருத்தையே கொண்டுசெல்லும். இதுதவிர மாங்குளம் என்று காட்டப்படுமிடத்தில் சிங்களவர்கள் குடியிருப்பதாகவும், புத்தர் சிலைகள் இருப்பதாகவும் காட்டுவதன் மூலம் இலங்கை முழுவதும் பௌத்த நாடென்ற கருத்தை உருவாக்க முயற்சித்துள்ளார். தமிழரின் பாரம்பரிய தாயக பூமியில் புத்தர் சிலைகளையும் சிங்கள மக்களையும் காட்டுவது ஒருவகையில் வரலாற்றை திரிபுபடுத்துவதோடு, இனவாதத்திற்கு ஆதரவான போக்காகவும் தெரிகின்றது.
உச்சக்கட்ட அடக்குமுறை தந்த அவலங்கள் எல்லைமீறிப்போனபோது, எல்லாவகையான அமைதிவழிப் போராட்ட முறைகளை கையாண்டு சிங்கள பேரினவாத அரசுகளிடம் ஏமாந்து தோற்றுப்போன பின்னர்தான் விடுதலையை அடைவதற்கு தமிழினம் ஆயுதத்தை கையிலெடுத்தது. இந்த உண்மையைக்கூட கொச்சைப்படுத்தும் நோக்குடன் ஆயுதவியாபாரிகளின் சுயலாபத்திற்காகவே இப்படியான போர்கள் தொடரப்படுகின்றதென்று வசனம் அமைத்திருக்கின்றார். அதேயிடத்தில் "கொரில்லாயுத்தம் வெல்வதுமில்லை, தோற்பதுமில்லை சொல்லப்போனால் கான்சர் மாதிரி" என்று வசனம் பேசும் காட்சியை புகுத்தியிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழிப் போர்முறையில் வளர்ச்சி பெற்ற பலம்மிக்க சக்தியென்பதை மணிரத்தினம் தெரியாமலிருக்க வாய்பில்லை. ஆனாலும் திட்டமிட்டு வேண்டுமென்று இதனைச் செய்திருக்கின்றாரோ என்றெண்ணத் தோன்றுகின்றது.
தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பான உண்மையான நியாயங்களை, ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திர வேட்கையை மணிரத்தினத்தின் "கன்னத்தில் முத்தமிட்டால்" துணிச்சலாக நேர்மையுடன் சொல்லவில்லை. ஆனாலும் ஒரு திரைப்படம் பற்றிய பார்வையென்று நோக்கும் போது அத்திரைப்படத்தில் எமக்கு ஆதரவாகவுள்ள சில கருத்துக்களையும் சொல்லவேண்டியது அவசியமாகின்றது. அந்த வகையில் தமிழகத்திற்கு ஆதரவுக்கரம் வேண்டிவரும் ஈழத்தமிழர்களுக்கு அகதிமுகாம் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறைச்சாலைகளே வழங்கப்பட்டிருக்கின்றது என்பது சொல்லப்பட்டிருக்கின்றது. அதைவிட சொந்த மண்ணிலிருந்து இடம் பெயரும் கொடுமை பார்ப்பவர் மனதை தொடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் உருவான "விடைகொடு எங்கள் நாடே" என்ற பாடல் மூலம் சோகத்தை வெளிக்கொணர்ந்த விதம் உணர்வுகளை உரசிச்செல்கின்றது.
சில உண்மையான நிலமைகள் யாதார்த்த தன்மையுடன் சொல்லப்பட்டபோதும் "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம் சொல்லி நிற்கும் கருத்து தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் அரசியல் இலட்சியங்களுக்கும் துணை நிற்கவில்லை. மாறாக கொச்சப்படுத்தப்பட்டிருக்கின்யதென்பதே உண்மை. இனவிடுதலை, தேசியவிடுதலை, மண்விடுதலை. பெண்விடுதலை என்ற எல்லைகளையும் கடந்து சமூக விடுதலைக்கும் வித்திட்ட வரலாற்றைக் கொண்டது தமிழர்களின் போராட்டவரலாறு. அந்த வரலாற்றினுடைய நியாயத்தன்மை பற்றிய ஆழமான வெளிப்பாடு கன்னத்தில் முத்தமிட்டாலில் இல்லை, என்பதை நுணுக்கமான தொழில் நுட்பம், படைப்புத்திறன் போன்றவற்றுக்கப்பால் நின்று அரசியல் கண்ணோட்டத்தில் நோக்குபவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.
ரூபன் சிவராஜா
(நோர்வே)