12-16-2004, 01:25 AM
போதையூட்டப்பட்ட மொட்டு.
[ஆழியாள்- மதுபாஷினி. திருக்கோணமலையின் மூதூரைச்சேர்ந்தவர். தீவிர இலக்கியப்பரப்பில் கவனிக்கப்படும் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்.]
தற்போது என் வலைக்குறிப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதத்திற்கு பொருத்தமாகப்பட்டதால் இந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு.
உங்களது அண்டப்புரட்டல்கள் மூலம்
யுகாந்திரமாய் நான்
சிட்டிகை சிட்டிகையாய்
போதையூட்டப்படுகிறேன்
பல நூறு ஆண்டுகளாய்
எனக்குத் தரப்பட்டதும், கிடைத்ததும்
இந்த ஹெரோயின் உணர்வுதான்
முதலில் ஒரு சிட்டிகை
நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாய்
அமோதித்தீர்கள்- நான்
பதுமை; பேரழகுப் பதுமையென
என் சர்வ முயல்தல்களையும் குறுக்கினீர்கள்!
அடுத்தடுத்த சிட்டிகைகளில்
"தெய்வம்" என நிலையுயர்த்தப்பட்டதால்
மெளனமாய் ஊமையானேன்.
உங்கள் சுட்டுவிரல் இட்டபடியே
எக்கணமும் நான்
மணமேடையை நினைவிலிருத்தியபடி
நிறைந்த வெட்டித்தங்க அணிகளோடு
நகைக்கடையின் வெளிப்பாடாய்
ஊர்ந்து, குனிந்து, குழைந்து சிவந்து
மெளனமாய் ஊமையாய்......
அப்போதெல்லாம்
மோனச் சொர்க்கத்திலல்லவா திளைத்திருந்தேன்.
சாத்தானின் வேகத்தோடு என்னை மேன்மைப்படுத்தியது புரியாது
போதை வேலிக்குள் அடக்கி,
என்னைத் தொலைத்துவிட்டேன்
இக்கணத்தில்
மூக்கும் தொண்டையும் வரள
அங்கெங்கோ என் சிற்றிதயம்
அவதியாய்த் துடித்து தளர்கிறது.
அத்தனை காக்கைகளும்
கொத்திச்சுவைக்கும் ரணவலி
ஒவ்வோர் உயிரணுவிலும்.
இத்தனைக்குப்பின்னரும்
இன்னோர் அரைச்சிட்டிகையை
நான் உறிஞ்சத்தான் வேண்டுமா?
இல்லை
இல்லவே இல்லை
இன்னமும் எனக்கென்ற அபிலாஷைகளைபிடித்துத்தொங்கியபடி-நான்
என்னை, என் சுயத்தைப்
பராமரிக்கும் தாதியாவேன்
பின் ஏன்
அக்னி மொட்டின் முகிழ்ப்பை
முறங்கொண்டு மூடுகிறீர்?
-ஆழியாள் 10.2.1993 (உரத்துப்பேச)
நன்றி - மயூரன் & ஆழியாள்
[ஆழியாள்- மதுபாஷினி. திருக்கோணமலையின் மூதூரைச்சேர்ந்தவர். தீவிர இலக்கியப்பரப்பில் கவனிக்கப்படும் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்.]
தற்போது என் வலைக்குறிப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதத்திற்கு பொருத்தமாகப்பட்டதால் இந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு.
உங்களது அண்டப்புரட்டல்கள் மூலம்
யுகாந்திரமாய் நான்
சிட்டிகை சிட்டிகையாய்
போதையூட்டப்படுகிறேன்
பல நூறு ஆண்டுகளாய்
எனக்குத் தரப்பட்டதும், கிடைத்ததும்
இந்த ஹெரோயின் உணர்வுதான்
முதலில் ஒரு சிட்டிகை
நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாய்
அமோதித்தீர்கள்- நான்
பதுமை; பேரழகுப் பதுமையென
என் சர்வ முயல்தல்களையும் குறுக்கினீர்கள்!
அடுத்தடுத்த சிட்டிகைகளில்
"தெய்வம்" என நிலையுயர்த்தப்பட்டதால்
மெளனமாய் ஊமையானேன்.
உங்கள் சுட்டுவிரல் இட்டபடியே
எக்கணமும் நான்
மணமேடையை நினைவிலிருத்தியபடி
நிறைந்த வெட்டித்தங்க அணிகளோடு
நகைக்கடையின் வெளிப்பாடாய்
ஊர்ந்து, குனிந்து, குழைந்து சிவந்து
மெளனமாய் ஊமையாய்......
அப்போதெல்லாம்
மோனச் சொர்க்கத்திலல்லவா திளைத்திருந்தேன்.
சாத்தானின் வேகத்தோடு என்னை மேன்மைப்படுத்தியது புரியாது
போதை வேலிக்குள் அடக்கி,
என்னைத் தொலைத்துவிட்டேன்
இக்கணத்தில்
மூக்கும் தொண்டையும் வரள
அங்கெங்கோ என் சிற்றிதயம்
அவதியாய்த் துடித்து தளர்கிறது.
அத்தனை காக்கைகளும்
கொத்திச்சுவைக்கும் ரணவலி
ஒவ்வோர் உயிரணுவிலும்.
இத்தனைக்குப்பின்னரும்
இன்னோர் அரைச்சிட்டிகையை
நான் உறிஞ்சத்தான் வேண்டுமா?
இல்லை
இல்லவே இல்லை
இன்னமும் எனக்கென்ற அபிலாஷைகளைபிடித்துத்தொங்கியபடி-நான்
என்னை, என் சுயத்தைப்
பராமரிக்கும் தாதியாவேன்
பின் ஏன்
அக்னி மொட்டின் முகிழ்ப்பை
முறங்கொண்டு மூடுகிறீர்?
-ஆழியாள் 10.2.1993 (உரத்துப்பேச)
நன்றி - மயூரன் & ஆழியாள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

