12-15-2004, 05:40 PM
புலிகள் ஆதரவும் எதிர்ப்பும்
நான் எப்பொழுதுமே புலி ஆதரவு பரப்புரையை எவர் மீதும் திணிப்பதில்லை. இன்னுமொருவருக்கு எங்கள் போராட்ட நியாயங்களை எடுத்துக் கூறி நீங்களும் எங்களை ஆதரியுங்கள். கட்டாயம் ஆதரித்தே ஆக வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் நீங்கள் தமிழன் இல்லை என்றெல்லாம் கேட்பதில்லை.
ஆனால் அத்தனையும் தாண்டி என் எழுத்துக்களில் புலிகள் ஆதரவு இழையோடுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த என்னுடைய பதிவுகளிலும் அது நன்றாகவே தெரிந்ததை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
என்னுடைய இந்த புலிகள் ஆதரவு நிலை என்பது என்னுடைய அனுபவம் சார்ந்தது. என்னுடைய உணர்வுத்தளம் சார்ந்தது என்று சிந்தித்தால் இன்றைக்கு புலி எதிர்ப்பு என்பதும் எதிர்ப்பவர்களுடைய உணர்வுத்தளம் மற்றும் அனுவங்கள் சார்ந்ததாகவே இருக்கின்றது.
நானும் என் தலை முறைக்கு பின் வந்தவர்களும் புலிகள் ஆதரவு போக்கினை இயல்பாகவே கைக் கொள்வதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. எனக்கு விருத்தெரிய தொடங்கிய காலப்பகுதிக்கு முன்பாகவே அங்கிருந்த மாற்று இயக்கங்கள் அகற்றப்பட்டு விட்டன என்பதனாலும் புலிகளின் நேரடி கட்டுபாட்டின் கீழ் வாழ்ந்து வந்ததனாலும் ஒரு தனியான அரசின் கீழ் வாழ்வது போன்ற உணர்வு எங்களுக்குள் இயல்பாகவே ஏற்பட்டு விட்டது.
புலிகளுடைய கட்டுப் பாட்டின் கீழ் கணிசமான நிலப்பரப்பு, கனரக ஆயுத பாவனைகளுடன் சொந்த இராணுவம், கடற்படை, தனியான சட்டம், காவல் துறை, நீதி மன்றுகள், இலங்கையின் மத்திய வங்கியை சாராத புலிகளின் வங்கிகள் என்று தொடங்கி புலிகளின் திரைப்பட தணிக்கைச் சபை வரை ஒரு தனியான நாட்டின் கீழ் வாழ்ந்த உணர்வே எங்களுக்கு இருந்தது.
இவற்றிற்கும் அப்பால் இராணுவம் ஊருக்குள் புகுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நிறையவே உதாரணங்கள் இருந்ததனால் அவ்வாறு ஊருக்குள் புக விடாமல் காவல் புரிந்தவர்கள் புலிகள் என்பது முதல் நான் ஒரு இரவை நிம்மதியாக படுத்துறங்க வேண்டும் என்பதற்காக என் வயதொத்த இன்னொருவன் எல்லையில் தூங்காமல் நிற்கின்றான் என்ற எண்ணம், என் அக்கா தங்கைகளுக்கு எதுவும் நேராமல் பாதுகாத்தவர்கள் புலிகள் என்ற நன்றியுணர்வு இப்படியாக எல்லாம் சேர்ந்தே புலிகள் மீதான என் ஆதரவுப் போக்கிற்கு காரணமாயிருக்கின்றன.
அதே நேரத்தில் புலிகள் எதிர்ப்பாளர்களுக்கும் இப்படியான ஏதாவது உணர்வுத் தளம் சார்ந்த காரணங்கள் இருக்கும் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவர்கள் ஏதாவது ஒரு வழியில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
அவர்களது நெருங்கிய உறவினர்கள் யாராவது புலிகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது புலிகள் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டிருக்கலாம். அல்லது புலிகளால் நிறைய பணம் வாங்கப்பட்டிருக்கலாம். இப்படியான ஏதோ ஒரு அவர்களின் தனிப்பட்ட அனுபவம் சார்ந்த, உணர்வினைத் தாக்கிய விடயம் ஒன்றிற்காகவே அவர்கள் புலி எதிர்ப்பு நிலையினை எடுத்திருப்பார்கள்.
புலிகள் ரஐPவினை கொலை செய்ய முன்னரும் பல வேறு கொலைகளை செய்திருக்கிறார்கள். ஆனால் ரஐPவின் கொலையின் பின்னரே பெரும்பாலான தமிழக தமிழர்கள் புலிகள் தொடர்பான எதிரான நிலையினை எடுத்து கொண்டார்கள். ஏனெனில் தமது மண்ணில் தமது இளைய தலைவரான ரஐPவினை புலிகள் கொன்றார்கள் என்ற உணர்வு சார்ந்த விடயமே அதற்கு காரணமாகும்.
ஆக ஆதரவோ எதிர்ப்போ இரண்டுமே ஒருவரது தனிப்பட்ட உணர்வு சார்ந்த விடயங்களிற்காக இருக்கையில் இரண்டையுமே இன்னொருவர் மீது திணிப்பதோ இதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்துவதோ சரியானதென்று எனக்கு தோன்றவில்லை.
நான் புலிகளின் கீழிருந்த காலத்திலும் அவர்கள் பலரை கொலை செய்திருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவற்றை நான் சட்டத்தின்பாற்பட்ட தண்டனைகளாகத் தான் கருதுகின்றேன். எனக்கு தெரிந்த கணிசமான அளவில் புலிகளின் இராணுவ நிலைகள் மற்றும் இராணுவ இரகசியங்கள் குறித்த தகவல்களை இலங்கை இராணுவத்திற்கு வழங்குவதன் மூலம் புலிகளின்,மக்களின் இழப்புக்கு காரணமாயிருந்தவர்களுக்கு விசாரணைகளின் பின்னர் மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்திய இராணுவ இரகசியங்களை ஒருவர் அறிந்து அதனை பாகிஸ்தான் இராணுவத்திற்கு சொல்வதை அது அவருடை கருத்துச் சொல்லும் சுதந்திரம் என்று சொல்ல முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.
அது தவிர புலிகள் இதனை செய்திருக்க கூடாது என்று மக்கள் வருத்தப் படுகின்ற, பொடியள் விசர் வேலை செய்து போட்டாங்கள் என்று கோபப்படுகின்ற சில காரியங்களையும் புலிகள் செய்திருக்கிறார்கள்.
பொதுவாக புலிகள் செய்த சில தவறான விடயங்களை பொத்தி மறைக்கும் மனப்பாங்கும், அவற்றை ஏதாவது ஒரு வழியில் சரியானதே என விவாதிக்கும் மனப் பாங்கும் பெரும்பாலான ஈழத்தழிழர்களுக்கு உண்டு. அது ஒரு மகனின் தவறுகள் தொடர்பான ஒரு தாயின் உளப்பாங்கே.
மீண்டும் சந்திப்போம்.
இன்று ஒரு வீடியோ நாடாவினை நான் பார்க்க கிடைத்தது. அவுஸ்ரேலியாவில் 1997 காலப்பகுதியில் நடந்த தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி அது. கலைஞர் அவர்கள் விடுதலைப் புலிகளை நான் ஆதரிக்க மாட்டேன். ஆனால் தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று சொன்ன காலப்பகுதியும் அதுவே. அது பற்றி சொன்ன செல்லப்பா, கலைஞரின் கூற்று திருமணம் செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் குழந்தை பெற்றுக்கொண்டால் சந்தோசப்படுவேன் என்பது போல இருக்கிறது என்றார். எனக்கு லேசாக சிரிப்பு வந்தது.
<b>நன்றி - சயந்தன்</b>

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>