![]() |
|
புலிகள் ஆதரவாளராக நடிக்கிறார்களா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புலிகள் ஆதரவாளராக நடிக்கிறார்களா? (/showthread.php?tid=6190) Pages:
1
2
|
புலிகள் ஆதரவாளராக நடிக்கிறார்களா? - Mathan - 12-14-2004 புலிகள் ஆதரவாளராக நடிக்கிறார்களா? குரல் தரவல்ல அதிகாரிகள் ஏலவே எழுத நினைத்திருந்த விடயம் இது. சேயோன் கூட அவ்வப்போது புறுபுறுத்துக் கொண்டிருந்தான் இது பற்றி. புலம் பெயர் நாடுகளில் தங்களைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக காட்டிக் கொள்கிறவர்களுக்கு தங்களது புகழ் குறித்த உள்நோக்கம் இருக்கிறதா? ஆம் என்கிறான் சேயோன். இப்போது நானும் கொஞ்சமாய் தலையாட்டுகிறேன் அதற்கு உதாரணங்களை பார்த்த பின்பு! முதலில் புலம் பெயர்ந்த ஈழத் தழிழர்கள் அனைவருமே யுத்தத்தின் கோரத்தால் மன வலியோடு மண்ணை விட்டுப் போகவில்லை என்பதைச் சொல்ல வேண்டும். முக்கால் வாசிப் பேர் தமது தனிப்பட்ட வாழ்வின் தர மேம்பாட்டுக்காய் சென்றவர்கள். அதில் வெற்றியும் கண்டவர்கள். பின்னர் தமது உறவுகளை ஒவ்வொன்றாக அழைக்க அவர்களுக்கும் வெளிநாடுகளின் அதிகரித்த வாழ்க்கைத் தரத்தை மனதார ஏற்றுக்கொண்டு அடுத்தவர்களை அழைத்துக் கொண்டவர்கள். இதுவே உண்மை! இவ்வாறு சென்றவர்களின் பொருளாதாரம் விடுதலைப் போரிற்கு மிக்க பக்க பலமாய் அமைந்ததென்பதையும் யாரும் மறுக்க முடியாது! நிற்க,(இருந்தாலும் பரவாயில்லை) அண்மைக்காலமாக என் வயதொத்த பல வெளிநாட்டு இளைஞர்கள் என்னோடு பேசும் போதும் எங்காவது எழுதும் போதும் நடந்து கொள்கிற முறையைப் பார்க்கின்ற போது இதன் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அவுஸ்ரேலியா வந்த ஆரம்பத்தில் என்னோடு கொழும்பில் படித்த என் வயதொத்த இளைஞன் கனடாவில் இருந்து எனக்கு சொன்னார்! 'உங்கை ஆராவது இயக்கத்துக்கு எதிரா கதைச்சாலோ எழுதினாலோ அவங்களிலை ஒரு நோட்டம் வை. எங்களுக்கு அந்த தகவல்கள் வேணும்." அவருக்கு நான் சொன்ன பதில்! 'நீ எல்லாம் ஊரிலை இயக்கத்துக்கு ஆட்சேர்க்கும் போது வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே கிடந்த ஆளெல்லோ.. " எங்களுக்கு அந்த தகவல்கள் வேணும் என்ற அந்த வார்த்தைகள் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்? தானும் ஒரு புலி என்று உணர்த்துகிறாரா? தனக்கும் புலிகளுக்கும் இடையில் உயர் மட்டத் தொடர்பேதும் இருப்பது போல காட்டிக் கொள்ள ஆசைப் படுகிறாரா? அவ்வாறாயின் அவர் தனது தனிப்புகழ் தொடர்பாக கவனமெடுக்கிறாரா? நண்பன் சேயோன் அவருக்கு அருகிலேயே இருப்பவன். இப்பொழுதெல்லாம் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் கனேடிய பொறுப்பாளர் என்றும் ஒட்டாவா பொறுப்பாளர் என்றும் தான் குறிப்பிடுகிறான். புலம் பெயர்ந்த பின்னர் எப்படி ஒரு இரவில் இவர்களால் புலிகளின் குரல் தர வல்ல அதிகாரிகள் ஆகிவிட முடிகிறது? புலத்தில் சண்டை நடக்காது என்ற தைரியமா? இன்னுமொருவரை மிக அண்மையில் அறிந்து கொண்டேன். அவரது கருத்துக்களை படித்தறிந்த பின்னர் அவரைச் சுவிஸ் பொறுப்பாளர் ஆக்கலாம் என்று சேயோன் சொல்லியிருக்கிறான். அந்த இளைஞருக்கு ஈழப் பிரச்சனையில் தனது தர்க்க ரீதியான வாதத் திறமையை முழுமையாக காட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் போலும். வெறும் கற்றுக்குட்டித் தனமான அவரது கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப் படக் கூடிய அளவிற்கு வளர்ச்சியற்றிருந்தன. அவர் எழுதுகிறார்! கருணா போன்ற ஒருவரை வளர்த்து விட்டது தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் தானாம். புலத் தமிழர்கள் இல்லையாம் புலிகள் தவிர்ந்த மாற்று இயக்கங்களை செயற்பட தாயக தமிழர்கள் அனுமதித்திருக்கிறார்களாம். புலத் தமிழர்கள் அப்படி அனுமதிக்க மாட்டார்களாம் சுவிஸில் துரோகிகள் எவரும் இல்லையாம் என்றவர் இன்னும் ஒரு படி மேலே போய் அப்படி யாராவது இருந்திருந்தால் அவர்களை உயிருடன் விட்டு வைத்திருக்க மாட்டோம் என்கிறார். எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. வடிவேலு பாணியில் சின்னப் புள்ளைத் தனமால்ல இருக்கு என்று சொல்ல வேண்டியது தான். உச்சக் கட்டம் இது தான். வேறொருவர், சுவிஸ் காரருக்கு எதிரான கருத்தொன்றை முன்வைக்க இவர் எழுதினார் பாருங்க ஒரு வரி! 'இதை நான் சேர்க்க வேண்டிய இடத்திலை சேர்க்கிறன்." அந்த சேர்க்க வேண்டிய இடம் எது என்பது உங்களுக்கு தெரியும். அந்தக் கருத்தின் மூலம் தனக்கும் அந்த சேர்க்க வேண்டிய இடத்திற்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதை நபர் உணர்த்த விரும்புகிறாரா? அப்படி விரும்பின் அதற்கான காரணம் என்ன? இதற்கு சேயோன் சொல்கிற பதில் புகழ்! சுவிஸ் நண்பர் மேலும் தொடர்கிறார். தான் தாயகத்தில் இருந்திருந்தால் இன்று மாவீரர் ஆகி விட்டிருப்பாராம். இங்கே பூச்சுத்தத் தொடங்கும் போது தான் எனக்கு கோபம் வருகிறது. இந்த கோபம் எனக்கு சிறு வயதிலேயே வந்தது. காசியானந்தன் எழுதிய ஒரு பாடல் வரிகள் புலத்திலிருந்து பாடுவது போல இருக்கும். அதில் நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல்லை என்கிற ஒரு வரி வரும். அவர்களை யார் வர வேண்டாம் என்றது என்று அப்பவே யோசித்திருக்கிறேன். (உண்மையிலேயே காசியானந்தனின் கடவுச் சீட்டினை இந்திய அரசு பறிமுதல் செய்து வைத்திருப்பதாய் யாரோ சொன்னார்கள்.) தாயகத்தில் இருந்திருந்தால் மாவீரர் ஆகி விட்டிருப்பேன் என்றால் இன்னமும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை என்று தான் நான் சொல்லுவேன். ஒன்றை உரத்துச் சொல்ல ஆசைப் படுகிறேன். தேசத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பதனிலும் பார்க்க நான் உட்பட எங்களுக்கு எமது தனி வாழ்வின் மேம்பாடு முன்னிலையில் நின்றதனால் நாம் வெளிநாடுகளுக்கு வந்து விட்டோம். அதுவே உண்மை. வந்துட்டோமில்ல! அப்புறம் என்ன? அங்கையிருந்தால் போராளியாகி இருப்பேன்.. மாவீரர் ஆகியிருப்பேன் என்கிற கதைச் சுத்தல்கள்! இந்தச் சமாதானத்திற்கான காலத்தை அரசு புலிகளை பலவீனப்படுத்த பயன் படுத்துகிறது. புலிகளை இறுக்கமான ஒரு சர்வதேச வலைக்குள் சிக்க வைத்த அதன் கைகளை கட்டி விட முயல்கிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். உண்மைதான்! எனது பார்வை இதனை புலத் தமிழர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பது தான்! அநேகம் பேர் புலிகள் மீண்டும் யுத்தத்தை தொடங்குவதே இத் தடைகளை தாண்டுவதற்கான சரியான வழி என்கிறார்கள். அதுவே சரியானதுமாய் இருக்கலாம். யுத்தத்தின் நேரடி பாதக விளைவுகள் எதனையும் அனுபவிக்காத (சாதக விளைவுகள் பல.. பலரை அந்தந்த நாட்டுப் பிரஜைகள் ஆக்கியது யுத்தம் தான்.) ஒரு தேசத்திலிருந்து கொண்டு எப்படி இவர்களால் யுத்தத்தை தொடங்கு என்று கேட்க முடியும்? சிறு வயதுகளில் தந்தை தாயுடன் வெளிநாடுகளுக்குப் போய் இன்று இளம் வயதை அடைந்து விட்டவர்களும் யுத்தத்தை தொடங்கினால்த் தான் எங்களுக்கு என்று ஒரு தனி நாடு வரும் என்கிறார்கள். தனி நாடு வந்த பின்னர் விடுமுறைக்குச் சென்று வர எண்ணியுள்ளார்களோ என்னவோ? யுத்தம் வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கின்றவர்கள் அந்த யுத்தத்தின் விளைவுகளை நேரடியாக சந்திக்கப் போகின்ற மக்கள் தான். மழை ஒழுகும் ஓலைக் குடிசை வாழ்வென்றால் என்ன என்று தெரியாதவர்கள், காதைக் கிழிக்கும் குண்டுகள் ஓசையை மறந்து விட்டவர்கள் அல்லது அப்பா அம்மா சொல்லிக் கேட்டவர்கள், பாம்புகளும் யானைகளும் நிறைந்த காடு சார்ந்த வாழ்க்கை முறையின் சிரமங்கள் தெரியாதவர்கள் யுத்தத்தை தொடங்கு என்று சொல்கின்ற போது அவர்களின் குற்ற உணர்ச்சி அவர்களை குத்திக் கிழிக்க வில்லையா? சக்கரவர்த்தியின் (கனடா) ஒரு கவிதை எனக்கு மிகவும் கவர்ந்தது. அதன் மிகச்சரியான வடிவங்கள் என் நினைவில் இல்லை. இருப்பினும் அதன் சாராம்சம் இது தான். என் இதயம் யாருக்காக இரத்தம் சிந்தி கண்ணீர் வடிக்கிறதோ அவர்கள் உங்களுக்காகவும் வெடித்துக் கொள்கிறார்கள் என்பது தான் என் மிகப் பெரிய சோகம். நன்றி - சயந்தன் - Nanthaa - 12-14-2004 முழுக்க முழுக்க எழுதியவரையே தாக்கும் நோக்கம் கொண்ட இக்கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Danklas - 12-14-2004 [quote=Nanthaa]முழுக்க முழுக்க எழுதியவரையே தாக்கும் நோக்கம் கொண்ட இக்கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் «ôÀÊ ±ýɾ¡ý ¦ºøÄ¢¦À¡ð¼¡Õ ¼õÀ¢ ¿ñ¼¡?? :evil: hock: hock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Eswar - 12-14-2004 ஹிஹிஹிஹி....... அவ÷ சொன்னது..... அங்கேயே இருந்திருந்தால்........(வேறு வழியில்லாமல்) போராளி ஆகியிருப்பேன்.... நல்லவேளை இங்காலே வந்திட்டன் எண்டெல்லே... வெளிநாட்டிற்கு வந்தபின் புலி ஆகியவ÷களை (என்னைப் போல் தாய்நாட்டிலும் தாகத்தோடு திரிந்து சந்த÷ப்ப வசத்தால் புலத்தில் ஒதுங்கியோரும் உண்டு)நான் அழைப்பது காகிதப் புலிகள் - sethu - 12-14-2004 தம்பி நடா மோகன் தனிக்கை செய்யுறது எல்லாத்தையும் சுந்திரமாக ஒரு கொட்டுற குப்பை தொட்டி ஒன்டு உருவாக்கப்பட்டிருக்கு அதுக்கை போடலாம். - thaiman.ch - 12-14-2004 ஏலே சயந்தன் என்னப்பு இப்படி சொல்ற? நீங்க நாட்டுக்குப்போகலயா? அகதித்தமிழங்கள்ள லண்டன் தமிழங்கள் தான் மோசம் என்டு கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நிருபிக்கிற மாதிரி காவல்துறை நடவடிக்கை எடுத்தது உலகமறிந்த உண்மை. முதல்ல உம்மட வீட்டு குப்பையை அள்ளும் சயந்தன். - thaiman.ch - 12-14-2004 நான் பிளையான இணையத்தளத்தில வந்து மாட்டீட்டன் என்டு நினைக்கிறேன். எல்லாம் புலி ஆதரவாளா்கள் மாதிரி நடிக்கிறானுவள். - tamilini - 12-15-2004 BBC இதை சயந்தனின் வலைப்பூவில் பாத்தபோது.. இங்க போடனும் என்று நினைச்சம் பிறகும் ஏன் வீண் சர்ச்சை என்று விட்டுவிட்டம் நீங்கள் போட்டுவிட்டியள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 12-15-2004 thaiman.ch Wrote:நான் பிளையான இணையத்தளத்தில வந்து மாட்டீட்டன் என்டு நினைக்கிறேன். எல்லாம் புலி ஆதரவாளா்கள் மாதிரி நடிக்கிறானுவள். இல்லை இல்லை சரியான இடம் தான் வந்திருக்கிறியள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ஊமை - 12-15-2004 தகவலுக்கு நன்றி சயந்தன்.......................... உள்ளதைச் சொல்ல குற்றமுள்ள நெஞ்செல்லாம் குறுகுறுக்குது பார்த்தியளே... சண்டைதான் வேண்டும் என்று சொல்பவர்கள் என்ன தான் நினைத்து சொல்லுகிறார்களோ தெரியவில்லை. 2001 ம் ஆண்டுவரை நான் வன்னிமண்ணில் யுத்தத்தின் கொடூரங்களை அனுபவித்தேன். யாப்பாணத்தில் இருக்கும் போது பசிக்கும் போது எங்கள் வீட்டு தென்னை மரங்களில் இளநீர் என்றாலும் கிடைக்கும் வன்னி வந்தபின் அதுகும் இல்லாது வாடிய நாட்கள்.......... இதிலே யாரும் போரினால் இடம் பெயர்ந்தவர்கள் இல்லை சரியாக சொன்னீர்கள் சயந்தன் அனைவரும் பணம் தேடியே இங்கு வந்து சேர்ந்தார்கள். போரினால் இடம் பெயர்ந்தவர்கள் இந்தியாவிலும் சிறீலங்காவின் ஏனைய இடங்களிலும் வன்னியிலும் தான் இருக்கிறார்கள். நான் இங்கு வந்திருப்பது எமது குடும்பத்து வறுமை தான் காரணம். அதற்கு வன்னியில் புலிகள் இயக்கத்தின் அனுமதி பெற்று தான் இங்கு வந்து சேர்ந்தேன். 1995 ற்கு முதலிலே புலம் பெயர்ந்தவர்களுக்கு யுத்தத்தின் கொடூரம் தெரிந்திருக்க நியாயம் இல்லை........ சயந்தன் நீங்கள் சொன்னது போல பெருமைக்காக பெயர் தேடும் இயக்க ஆதரவாளர்கள் ஜேர்மனியிலே நிறையவே இருக்கிறார்கள். ******. அது எம்முடைய புலம் பெயர்ந்த ஆரம்பநாட்கள். எமக்கு 450 டொச் மார்க்குகளே ஜேர்மன் அரசாங்கத்தால் சமூக உதவிப்பணம் என்ற பெயரில் தரப்பட்டது. அதில் எமது சாப்பாட்டு செலவு போக எஞ்சியதை இறுக சேமித்து தாயகத்தில் எம் உறவுகளுக்கு அனுப்பிவந்தோம். (அன்றைய வன்னியில் பொருட்களின் விலை உங்களுக்கு தெரியும் தானே) நாம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தே வந்தபடியால் எமக்கு புலிகளைப் பற்றி ஓரளவு தெரியும். அதனால் இந்த அமைப்பளர்களுக்கு சற்று தாயக நிலை...., புலிகலின் நிலைப்பாடு அணுகுமுறை என்பன பற்றி எடுத்துச் சொன்னோம். அதன் பின் அவர்கல் எங்கலுடன் இப்படி மோதுப்படுவதில்லை. எமது மாகானத்தில் அந்தக் காலங்களில் புலிகள் இயக்கம் மேல் மக்களுக்கு அதீத வெறுப்பு இருந்ததை ஆரம்ப நாட்களில் உணர முடிந்தது. காரணம் நீங்கள் கூறிய ஆட்கள் போண்றவர்கள். **** நீக்கப்பட்டுள்ளது - ஊமை - 12-15-2004 ஏன் உண்மையைச் சொன்னால் நீக்குகிறீர்கள். - Mathan - 12-15-2004 tamilini Wrote:BBC இதை சயந்தனின் வலைப்பூவில் பாத்தபோது.. இங்க போடனும் என்று நினைச்சம் பிறகும் ஏன் வீண் சர்ச்சை என்று விட்டுவிட்டம் நீங்கள் போட்டுவிட்டியள்.. <!--emo& சர்ச்சை என்றாலும் சில உண்மைகளையும் வெளிக்கொண்டு வருகின்றது இல்லையா? - kuruvikal - 12-15-2004 அப்ப எழுதினவருக்கு தகவல் கொடுத்தவரும் வெட்டி ஒட்டினவரும் வேற விசா கற்றகரி நாடினம் போல....துடிப்புப் பலமா இருக்கு....! எங்கட ஆக்களுக்கு உந்த வெட்டிப் பந்தாக்களுக்கு குறைச்சலில்ல..நீ அகதி விசா நான் மைகிறேசன் விசா..புளுகுகள்...எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->அங்க புலிக்குத் தெரியும் எதுஎது முயல் புடிக்கிற நாயென்று... அப்பவே அங்க ஊரில கிரினெட்டுக்குப் பயந்ததுகள் குரும்பட்டியச் செருகிப் போட்டு சேட்டை வெளியில விட்டு பெட்டையளுக்கு கலேஸ் காட்டினதுகள்... பலதும்தான் இப்ப புலத்தில அதே சேட்டை செய்யுதுகள்....! உவையின்ர வாரிசுகளும் உவையத்தான் பின்பற்றுதுகள்...! ஒண்டு சொல்லுறம்... நாங்க கிரினெட்டும் தூக்கல்ல குரும்பட்டியும் தூக்கல்ல....! பிறகு அனுபவம் பேசுதெண்டு சொல்லாதேங்க.. அப்ப அந்த வயசும் இல்ல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: சயந்தன் ஒழுங்காக் கதைக்கிறவர்...எப்படி மற்றவர்களின் கதையை நம்பி சிலதுகளப் புகுத்தினார் என்று விளங்லேல்ல... ஆனா சொன்னது சிலதில்ல பலது உண்மை... ஏன் வெட்டி ஒட்டினவ அதைச் சிலதாக்கினம்...தங்களையும் தாக்குமென்றோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ஊமை - 12-15-2004 இது குருவிக்கு எங்கையோ இடிக்கிது போல இருக்கு குருவி....... குருவி........... - kuruvikal - 12-15-2004 குருவிகளுக்கு எதுவும் இடிக்காது காரணம் குருவிகளே இடிஞ்சு போய்த்தான் இருக்குதுகள்... கூடுகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-15-2004 kuruvikal Wrote:அங்க புலிக்குத் தெரியும் எதுஎது முயல் புடிக்கிற நாயென்று... அப்பவே அங்க ஊரில கிரினெட்டுக்குப் பயந்ததுகள் குரும்பட்டியச் செருகிப் போட்டு சேட்டை வெளியில விட்டு பெட்டையளுக்கு கலேஸ் காட்டினதுகள்... பலதும்தான் இப்ப புலத்தில அதே சேட்டை செய்யுதுகள்....! உவையின்ர வாரிசுகளும் உவையத்தான் பின்பற்றுதுகள்...! ஒண்டு சொல்லுறம்... நாங்க கிரினெட்டும் தூக்கல்ல குரும்பட்டியும் தூக்கல்ல....! பிறகு அனுபவம் பேசுதெண்டு சொல்லாதேங்க.. அப்ப அந்த வயசும் இல்ல....! <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- கறுணா - 12-15-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! ஓயோய் ஊமை மாமோய்! நீர் முதலைக் கண்ணீர் வடிக்கிறீர் ஆஆஆ????? நீர் வன்னியிலையிருந்துதான் இங்கை வந்தனீர் ஆஆஆ???? உமக்கு குடும்பக் கஸ்டம் ஆஆஆ???? இங்கும் காசுக்கு உமக்கு கஸ்டம் ஆஆஆ???? அய்யோ அய்யய்யோ ஏன்ராப்பா ஊமை! பிரபல கோழிக்கள்ளனின் பொடியன் ஆட்கடத்திய காசுக்களில் உங்களெல்லோருக்கும் விசுறுகிறாராமே????? கஸ்டமா? விட்டால் இந்தக் கோணலுக்குமே வைப்பாய் வாயுக்குள்ளே!!!!! onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - Nanthaa - 12-15-2004 Danklas Wrote:[quote=Nanthaa]முழுக்க முழுக்க எழுதியவரையே தாக்கும் நோக்கம் கொண்ட இக்கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் உங்களுக்கு நெனைப்பிருக்கோ என்னவோ புரியே அங்கிள். கொழும்பிலை 2002உங்கடை ஒரு மீட்டிங்கிலை இந்த சயேந்... வந்திருந்து லொள்ளுப்hபண்ணீட்டிருந்தான் அதுவளையும் சொன்னா இந்தப்பசங்க நம்மையும் பிச்சுப்புடுவா. சயேந்... கொழும்பிலை அடிச்சிண்டிருந்த கூத்துவளைதான் சொன்னேன். அது குத்தமாம் ? இன்னா உலகம்டா இது உண்மை சொன்னா அழிக்கிறாங்கடாப்பா ? - Mathan - 12-15-2004 புலிகள் ஆதரவும் எதிர்ப்பும் நான் எப்பொழுதுமே புலி ஆதரவு பரப்புரையை எவர் மீதும் திணிப்பதில்லை. இன்னுமொருவருக்கு எங்கள் போராட்ட நியாயங்களை எடுத்துக் கூறி நீங்களும் எங்களை ஆதரியுங்கள். கட்டாயம் ஆதரித்தே ஆக வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் நீங்கள் தமிழன் இல்லை என்றெல்லாம் கேட்பதில்லை. ஆனால் அத்தனையும் தாண்டி என் எழுத்துக்களில் புலிகள் ஆதரவு இழையோடுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த என்னுடைய பதிவுகளிலும் அது நன்றாகவே தெரிந்ததை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். என்னுடைய இந்த புலிகள் ஆதரவு நிலை என்பது என்னுடைய அனுபவம் சார்ந்தது. என்னுடைய உணர்வுத்தளம் சார்ந்தது என்று சிந்தித்தால் இன்றைக்கு புலி எதிர்ப்பு என்பதும் எதிர்ப்பவர்களுடைய உணர்வுத்தளம் மற்றும் அனுவங்கள் சார்ந்ததாகவே இருக்கின்றது. நானும் என் தலை முறைக்கு பின் வந்தவர்களும் புலிகள் ஆதரவு போக்கினை இயல்பாகவே கைக் கொள்வதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. எனக்கு விருத்தெரிய தொடங்கிய காலப்பகுதிக்கு முன்பாகவே அங்கிருந்த மாற்று இயக்கங்கள் அகற்றப்பட்டு விட்டன என்பதனாலும் புலிகளின் நேரடி கட்டுபாட்டின் கீழ் வாழ்ந்து வந்ததனாலும் ஒரு தனியான அரசின் கீழ் வாழ்வது போன்ற உணர்வு எங்களுக்குள் இயல்பாகவே ஏற்பட்டு விட்டது. புலிகளுடைய கட்டுப் பாட்டின் கீழ் கணிசமான நிலப்பரப்பு, கனரக ஆயுத பாவனைகளுடன் சொந்த இராணுவம், கடற்படை, தனியான சட்டம், காவல் துறை, நீதி மன்றுகள், இலங்கையின் மத்திய வங்கியை சாராத புலிகளின் வங்கிகள் என்று தொடங்கி புலிகளின் திரைப்பட தணிக்கைச் சபை வரை ஒரு தனியான நாட்டின் கீழ் வாழ்ந்த உணர்வே எங்களுக்கு இருந்தது. இவற்றிற்கும் அப்பால் இராணுவம் ஊருக்குள் புகுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நிறையவே உதாரணங்கள் இருந்ததனால் அவ்வாறு ஊருக்குள் புக விடாமல் காவல் புரிந்தவர்கள் புலிகள் என்பது முதல் நான் ஒரு இரவை நிம்மதியாக படுத்துறங்க வேண்டும் என்பதற்காக என் வயதொத்த இன்னொருவன் எல்லையில் தூங்காமல் நிற்கின்றான் என்ற எண்ணம், என் அக்கா தங்கைகளுக்கு எதுவும் நேராமல் பாதுகாத்தவர்கள் புலிகள் என்ற நன்றியுணர்வு இப்படியாக எல்லாம் சேர்ந்தே புலிகள் மீதான என் ஆதரவுப் போக்கிற்கு காரணமாயிருக்கின்றன. அதே நேரத்தில் புலிகள் எதிர்ப்பாளர்களுக்கும் இப்படியான ஏதாவது உணர்வுத் தளம் சார்ந்த காரணங்கள் இருக்கும் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவர்கள் ஏதாவது ஒரு வழியில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களது நெருங்கிய உறவினர்கள் யாராவது புலிகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது புலிகள் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டிருக்கலாம். அல்லது புலிகளால் நிறைய பணம் வாங்கப்பட்டிருக்கலாம். இப்படியான ஏதோ ஒரு அவர்களின் தனிப்பட்ட அனுபவம் சார்ந்த, உணர்வினைத் தாக்கிய விடயம் ஒன்றிற்காகவே அவர்கள் புலி எதிர்ப்பு நிலையினை எடுத்திருப்பார்கள். புலிகள் ரஐPவினை கொலை செய்ய முன்னரும் பல வேறு கொலைகளை செய்திருக்கிறார்கள். ஆனால் ரஐPவின் கொலையின் பின்னரே பெரும்பாலான தமிழக தமிழர்கள் புலிகள் தொடர்பான எதிரான நிலையினை எடுத்து கொண்டார்கள். ஏனெனில் தமது மண்ணில் தமது இளைய தலைவரான ரஐPவினை புலிகள் கொன்றார்கள் என்ற உணர்வு சார்ந்த விடயமே அதற்கு காரணமாகும். ஆக ஆதரவோ எதிர்ப்போ இரண்டுமே ஒருவரது தனிப்பட்ட உணர்வு சார்ந்த விடயங்களிற்காக இருக்கையில் இரண்டையுமே இன்னொருவர் மீது திணிப்பதோ இதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்துவதோ சரியானதென்று எனக்கு தோன்றவில்லை. நான் புலிகளின் கீழிருந்த காலத்திலும் அவர்கள் பலரை கொலை செய்திருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவற்றை நான் சட்டத்தின்பாற்பட்ட தண்டனைகளாகத் தான் கருதுகின்றேன். எனக்கு தெரிந்த கணிசமான அளவில் புலிகளின் இராணுவ நிலைகள் மற்றும் இராணுவ இரகசியங்கள் குறித்த தகவல்களை இலங்கை இராணுவத்திற்கு வழங்குவதன் மூலம் புலிகளின்,மக்களின் இழப்புக்கு காரணமாயிருந்தவர்களுக்கு விசாரணைகளின் பின்னர் மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்திய இராணுவ இரகசியங்களை ஒருவர் அறிந்து அதனை பாகிஸ்தான் இராணுவத்திற்கு சொல்வதை அது அவருடை கருத்துச் சொல்லும் சுதந்திரம் என்று சொல்ல முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. அது தவிர புலிகள் இதனை செய்திருக்க கூடாது என்று மக்கள் வருத்தப் படுகின்ற, பொடியள் விசர் வேலை செய்து போட்டாங்கள் என்று கோபப்படுகின்ற சில காரியங்களையும் புலிகள் செய்திருக்கிறார்கள். பொதுவாக புலிகள் செய்த சில தவறான விடயங்களை பொத்தி மறைக்கும் மனப்பாங்கும், அவற்றை ஏதாவது ஒரு வழியில் சரியானதே என விவாதிக்கும் மனப் பாங்கும் பெரும்பாலான ஈழத்தழிழர்களுக்கு உண்டு. அது ஒரு மகனின் தவறுகள் தொடர்பான ஒரு தாயின் உளப்பாங்கே. மீண்டும் சந்திப்போம். இன்று ஒரு வீடியோ நாடாவினை நான் பார்க்க கிடைத்தது. அவுஸ்ரேலியாவில் 1997 காலப்பகுதியில் நடந்த தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி அது. கலைஞர் அவர்கள் விடுதலைப் புலிகளை நான் ஆதரிக்க மாட்டேன். ஆனால் தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று சொன்ன காலப்பகுதியும் அதுவே. அது பற்றி சொன்ன செல்லப்பா, கலைஞரின் கூற்று திருமணம் செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் குழந்தை பெற்றுக்கொண்டால் சந்தோசப்படுவேன் என்பது போல இருக்கிறது என்றார். எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. <b>நன்றி - சயந்தன்</b> - Mathan - 12-15-2004 இதற்கு புஸ்பிதாவின் பதில் .... மற்றவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதில் மறுப்பேதும் சொல்வதற்கில்லை. பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் புலிகளை எதிர்ப்பதுவும், அது அவர்கள் உணர்வு சார்ந்த விடயம் என்று கூறி அதை புறக்கணிப்பதுவும் தவறு. நியாயத்தை உணர வைக்க வேண்டியது உணர்ந்த கொண்ட ஒவ்வொரு தமிழனினதும் கடமை. அதற்காக கருத்துக்கள் எதனையும் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் கூறுவதிலிருந்து புலிகளைப் பற்றிய தப்பபிப்பிராயம் கொண்டவர்கள் (புலி எதிர்ப்பாளர்களாலோ, வேறு ஏதும் காரணங்களாலோ..) தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படலாம்; இல்லையா? புலி எதிர்ப்பாளர்கள் தனிப்பட்ட அனுபவம் சார்பாக புலி எதிர்ப்பினை மேற்கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோமாயின் கூட அது தமிழ் மக்களுக்கு, தமிழீழத்துக்கு பாதிப்பாக அமையுமிடத்து (நிச்சயமாக அமையும்) அங்கும் புலிகளை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. புலிகள் எதற்காக அதனை செய்தாhகள் என்பதனை பரிந்து கொள்ள வேண்டும். (// புலிகள் இதனை செய்திருக்க கூடாது என்று மக்கள் வருத்தப் படுகின்றஇ பொடியள் விசர் வேலை செய்து போட்டாங்கள் என்று கோபப்படுகின்ற சில காரியங்களையும் புலிகள் செய்திருக்கிறார்கள். // ஏற்றுக் கொள்கிறேன். அது தவிர்க்க முடியாதது. நியாயப்படுத்த முயல்கிறேனோ????? ) புலி எதிர்ப்பாளர்கள் தங்கள் சந்ததியினரிடையேயும் புலிகள் மீதான வெறுப்பை (நடந்ததை ஒன்றுக்குப் பத்தாக கூறுவதன் மூலம்) ஏற்படுத்த தவறுவதில்லை என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். உலக நாடுகளுக்கான சந்திரிகா அம்மையாரினதும் அவரது பெரும் மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய லக்ஸ்மன் கதிர்காமரதும் பிரச்சாரங்கள் எவ்வாறு புலிகள் அமைப்பு வெளிநாடுகளில் தடை செய்யக் காரணமாய் அமைந்தனவோ அதை விடப் பெரிய விளைவுகளை புலி எதிர்ப்பாளர்களது கருத்துக்கள் ஏற்படுத்தும். அதனால் அது அவர்கள் உணர்வு சார்ந்த விடயம் என்று கூறி விலகி நிற்கக் கூடாது என எண்ணுகிறேன். <b>நன்றி - புஸ்பிதா</b> |