12-14-2004, 11:39 AM
shiyam Wrote:கெட்டதிலும் ஒரு நல்லது பாருங்கோ இதாலை கன யேர்மன் வாழ் தமிழர் அவசர அவசரமா பிள்ளையழுக்கு தமிழ் படிப்பிக்கினமாம்
ஓமோம் சும்மா உப்பிடிக்கனவு காணுங்கோ. கெட்டதிலையும் ஒரு நல்லதெண்டு சொல்லிக்கொண்டே இருங்கோ. குறிப்பிட்ட விகிதமான பிள்ளைகள் தமிழ் படிக்கன்றனர். படித்துக்கொண்டிருக்கின்றனர். ஐ டோன்ற் லைக் ரமிலெண்டவை இப்பவும் அப்பிடியேதான் இருக்கினம்.
சில வாரங்களுக்கு முன்னால் ஜேர்மனியிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட ஒரு குடும்பத்தின் இரு யுவதிகளின் பேட்டி வெக்டோனில் வந்தது.
ஏதோ அந்தாட்டிக்காவிலை போய் இறங்கினமாதிரி கதை கதைச்சினம். அப்பதான் நினைச்சேன் இவையை அனுப்பினதுதான் சரியெண்டு. அதை யாராவது பாத்தீங்களா ? கேட்டீங்களா ?
அவர்கள் 8வருடம்தான் புலம்பெயர்ந்து இருக்கினம். ஆனா அவையாலை எப்பிடி எமது சமுகத்தில் பழகுவது , சமுகத்தை அணுகுவது ? என்றெல்லாம் புரியவில்லையாம். அவைக்கு டொச்லாண்தானாம் நல்லது. திரும்ப அங்கைதானாம் போக விரும்புகினம்.
அப்ப இவை பிறந்த ஊருக்கை இவை இருந்த காலம் மோகினிகள் , பில்லி சுூனியங்களோ இருந்தது ?
ஆஆஆஆஆ இந்த புதிய மோகினிகள் புழுகு தாங்க முடியவில்லையே.
:::: . ( - )::::

