08-03-2003, 07:56 AM
யாழ். போதனா வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்றுவந்த கைதி ஒருவர் காவலுக்கு இருந்த சிறை அலுவலரை ஏமாற்றிவிட்டு அங்கி ருந்து தப்பிச்சென்றுள்ளார்.
கொடிகாமம் மற்றும் சாவகச்சேரிப் பகுதியில் 300இற்கும் அதிகமான மாடுகளைத் திருடியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக் கப்பட்டிருந்த கார்த்திகேசு இராஜேந் திரம் என்ற கைதியே வைத்தியசாலையில் இருந்து தப்பியுள்ளார்.
தன்னைக் கைதுசெய்த பொலீ ஸார் தனது காலில் கடுமையாகத் தாக்கியதாகவும் இதனால் தன்னால் நடக்கமுடியாதிருப்பதாகவும் அவர் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனு மதித்து சிகிச்சை அளிக்கும்படி நீதி வான் உத்தரவிட்டிருந்தார்.கடந்த புதன்கிழமையன்று சிறை அலுவலர்கள் இவரை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளை சிறை அலுவலரை ஏமாற்றி விட்டு இராஜேந்திரம் தப்பிவிட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து, இவருக்கு காவ லாக நிறுத்தப்பட்டிருந்த சிறை அலு வலர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.தப்பிய கைதியை பொலீஸார் தேடி வருகின்றனர்.